Monday 20 April 2020

வீரயுக நாயகன் வேள்பாரி அனுபவப் பகிர்வு அழைப்பு 01.05.2020. நண்பகல் 02:30 மணி.


அந்தகக்கவிப் பேரவை

(பார்வையற்றோரால் நடத்தப்படும் இலக்கிய கூட்டம்)

வீரயுக நாயகன் வேள்பாரி ஓர் அனுபவப் பகிர்வு

நாள்: 01.05.2020.
நேரம்: நண்பகல் 02:30 மணி.
இடம்: இணையவெளி ஜூம் (zoom) அரங்கம்.
முன் குறிப்பு:
கூட்டத்தில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயர், வேள்பாரியில் தாங்கள் தெரிவு செய்த தலைப்பு போன்ற விவரங்களை 29/04/2020க்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள செல்பேசி எண்ணில் தொடர்புக்கொண்டு முன்பதிவு செய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம். முதலில் பதிவு செய்யும் பத்து வாசகர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும்.
பாரி என்பவனை வள்ளலாகவும், கபிலரின் நண்பனாகவும் மட்டுமே அறிந்த தமிழ்ச் சமூகத்திற்கு பல்துறை வித்தகனாக படம்பிடித்துக் காட்டுகிறார் நூலின் ஆசிரியர். பரம்புநாடும் பச்சைமலையும் அதனைச் சுற்றியுள்ள குன்றுகளும், ஊர்களும் இயற்கை வளங்களும் பல செய்தியைச் சொல்லி செல்கின்றன. அறிவுகளைப் பகுத்த தொல்காப்பியர் பச்சைமலைத் தொடரைத் தொடர்ந்து ஆய்ந்து இயற்றியதுவோ ஒற்றறிவதுவே என்று எண்ணத்தோன்றுகிறது. சங்க இலக்கியத்தின் சாறு பிழிந்து பருக பணித்திருக்கிறார் படைப்பாளர். கதையின் தொடக்கத்தில் இருந்து பாரி வருவான் என்று சொல்லி அழைத்து செல்லும் ஆசிரியர் பாரியின் வரவிற்கு பிறகு பரம்பின் குரல் ஒலிக்கும் என்று சொல்லி முன்னோக்கி அழைத்து செல்கிறார். கதைகளில் வரும் நத்தை உள்ளிட்ட பூச்சிகள், பாம்பு வகைகள், ஆட்கொல்லி மரம், மங்கையர் மணம் முகர்ந்து மலரும் மரம் உள்ளிட்ட மரங்கள்,  இராவெரிச்செடி, காக்கா விரிச்சி போன்ற பறவைகள், விருந்தாகும் அறுவதாங்கோழி உள்ளிட்ட உயிரிணங்கள், தேவ வாக்கு சொல்லும் விலங்கு உள்ளிட்ட விலங்குகள், திரையர்கள், காடர்கள் உள்ளிட்ட வலிமை மிக்க மணிதர்கள், மூலிகைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட போர்வை, மூலிகைகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட வீரர்களுக்கான கவசங்கள், பூச்சிகளையும், யானைகளையும், காற்றையும் காற்றியையும் போருக்கு பயன்படுத்திய விதம், எரியும் பச்சைச் செடி, அடைமழையிலும் அனையாத தீப்பந்தங்கள், பழையன், வாரிக்கையன், தேக்கன் போன்ற வயது மூத்தவர்களின் செயல்பாடுகள், வானை மிஞ்சும் அறிவைக் கொண்ட பேராசான் திசைவேலர், பெரும்புலவர் கபிலர், முருகன் வள்ளி காதல், ஆதினி, மயிலா, அங்கவை, பொற்சுவை போன்ற பெண்களின் அறிவுக்கூர்மை, நீலன், இறவாதான் உள்ளிட்ட வீரர்களின் துடிப்பு, தளபதிகளின் தந்திரம், அமைச்சர்களின் செருக்கு, மூவேந்தர்களின் சூழ்ச்சி, பாரியின் மாட்சி என அத்தனையும் வியக்க வைக்கிறது. இந்த நூலினைப் படிக்கும் போது கதைகளினூடே வந்த இறைவழிபாடு சித்திரைத் திருநாளில் தமிழர் குலதெய்வ வழிபாட்டை நினைவுப் படுத்தி சென்றது. ஈடு இணை இல்லா இந்நூல் அனைவராலும் படிக்கப்பட வேண்டிய இயற்கையின் இரகசியம்.
இதனை எழுதிய சு.வெங்கடேசன் ஐயா அவர்கள் பல மணி நேர தூக்கத்தைத் துரந்து, நூற்றுக்கணக்கான நூல்களைப் படித்து, ஆயிரக்கணக்கான நாட்களைக் கடந்து உழைத்திருப்பது நூலில் புலனாகிறது. ஓவியர் ம.செ அவர்களின் ஓவியம் கதைகளின் நகர்வை எத்தனைச் சிறப்பாக காட்சிப் படுத்தியிருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது. இத்தகு சிறப்பிற்குரிய நூலினைப் படித்த பார்வையற்றோர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துக்கொள்ள ஏதுவாக வேள்பாரி அனுபவ பகிர்வு என்ற பொருண்மையில் கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் நூலின் ஏதேனும் ஒரு கதாபாத்திரம், காட்சி, இயற்கை. செடி, கொடி, மரம், ஊர்வன, பறப்பன, விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்கள், கனிவு, காதல், வீரம், கொடை, ஆட்சி, போர் உள்ளிட்டவற்றுள் தங்கள் மனம் கவர்ந்த ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு அது குறித்து ஐந்து முதல் ஏழு நிமிடத்திற்குள் கூட்டத்தில் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துக்கொள்ளலாம்.
கூட்டத்தில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயர், வேள்பாரியில் தாங்கள் தெரிவு செய்த தலைப்பு போன்ற விவரங்களை 29/04/2020க்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள செல்பேசி எண்ணில் தொடர்புக்கொண்டு முன்பதிவு செய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம். முதலில் பதிவு செய்யும் பத்து வாசகர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும்.
நன்றி.
சே. பாண்டியராஜ்.
9841129163
தலைவர்
திரு. செ. பிரதீப்
94457 49689. 93 83 39 93 83.
செயலாளர்
திரு. மு. ராமன்
9444367850.
இணையம் மூலமாக நடத்தப்படும் இந்த கூட்டத்தில் பங்கேற்க இருக்கும் வாசகர்கள், தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்கும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

ஜூம் பதிவிறக்க:

ஆண்டிராயிடு: https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings
ஐஃபோன்: https://itunes.apple.com/us/app/id546505307
தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன
பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நன்றி.
#வேள்பாரி
#வேள்பாரிஅனுபவப்பகிர்வுஅழைப்பு
#அந்தகக்கவிப்பேரவை
#வேள்பாரிஅனுபவக்கூட்டம்
#வேள்பாரிபார்வையற்றோர்பகிர்வு
#velpaarisharings
#velpaarimeeting

No comments:

Post a Comment