Tuesday 9 June 2020

ஆருயிர் மருந்தான பேரிடரை எழுதி பார்த்தல் மணிமேகலைக் காப்பியத்தை முன்வைத்து


ஆருயிர் மருந்தான பேரிடரை எழுதி பார்த்தல்

மணிமேகலைக் காப்பியத்தை முன்வைத்து

முனைவர் மு.ரமேசு
புல் மரம் புகையப் புகை அழல் பொங்கி
மன் உயிர் மடிய மழை வளம் கரத்தலின்
அரசு தலைநீங்கிய அரு மறை அந்தணன்
இரு நில மருங்கின் யாங்கணும் திரிவோன்
அரும் பசி களைய ஆற்றுவது காணான்
திருந்தா நாய் ஊன் தின்னுதல் உறுவோன்
பன்னீராண்டு பாண்டி நல் நாடு
மன் உயிர் மடிய மழை வளம் இழந்தது
கடவுள் மா நகர் கடல் கொள பெயர்ந்த
வடி வேல் தடக் கை வானவன் போல
விரிதிரை வந்து வியல் நகர் விழுங்க
ஒரு தனி போயினன் உலக மன்னவன்
அருந்தவன் தன்னுடன் ஆய் இழை தாயரும்
வருந்தாது ஏகி வஞ்சியுள் புக்கனர்

இப்போது பேரிடர் என்றால் என்ன என்கிற கேள்விக்கு பெரும்பாலான மக்களிடம் பதிலிருக்க கூடும், அது சொந்த அனுபவமாகவோ, பிறரிடம் கேட்டு உணர்ந்ததாகவோ இருக்கலாம். கொரொனா என்கிற பெயரிலான நுன்னுயிர்ப் போர் மனித இனத்தின் மீதான பெருந்தாக்குதலாக அமைந்து விட்டது. பொருளாதார சந்தைகளை இலக்கு வைத்து தொடரப் பட்ட போராக இருந்தாலும் இதை தொடங்கியவர்களும் பெரிய விளையை கொடுத்துக் கொண்டுதான் இருப்பர். மக்கள் தொகை பெருக்கம் தான் வருமைக்கு காரணம் என்று 19.ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்து  பொருளாதார மேதை ஒருவர் [Thomas Rabat Malthus, An Essay On the Principle Of the Population, 1798] சொல்லி வைத்துள்ளார். இக்கூற்றைப் பொய்யாக்குவதற்கான வழிமுறைகளை கண்டு கொண்டப் பிறகும் வல்லரசுகளின் வல்லாதிக்கதினால் தொடுக்கப்பட்டுள்ள இப்போர் வருமையின் பகை வெல்ல படை நடத்தும் பெரும்பாலான மனிதர்களை மீண்டும் நோயாளிகளாக பீடித்துக் கொள்ளப் பார்க்கிறது. எவன் எந்த ஆயுதத்தை எடுக்கிறானோ அவனை அந்த ஆயுதம் ஆளும் என்பது பொதுவிதி. தனிநபர் சொத்துக் குவிப்பை முதலாலிய சர்வதிகாரம் அனுமதித்தல் மற்றும் பதுக்குதல், குறிப்பிட்ட சாராரின் அலவற்ற ஐம்பொரிகளின் நுகர்ச்சிக்கும், ஆடம்பரமான திலைப்புக்கும், களிப்புக்கும் வழி அமைத்தல் இவை யாவும் கட்டுப்பாடற்ற பொரிகளின் நுகர்ச்சியே புலனறிவு பெருக்கத்திற்கு உதவும் என்கிற மேற்கத்திய மெயியல் கொள்கையை அடிப்படையாக கொண்டது.
ஐம்பொரிகளை கட்டுப்படுத்துவதன் மூலமாக புலனின்பத்தை அடைய முடியும் என்பதை நெறியாக வைத்துள்ளது இந்திய மெயியல். வயத்தக்கட்டி, வாயக்கட்டி என்கிற சொலவடை தமிழ்மக்களின் மிக சாதாரண பேச்சுக்களில் கேட்க முடிகிறது என்றால் இம் மக்களை இவ்வாறு பயிற்றுவித்தோர் அறவோராவர். இவர்களை அறிவர் எனவும் தமிழ் மரபுச் சுட்டுகிறது. பதினெண்மேற்கணக்கு, பதினெண்கீழ்க்கணக்கு, ஐம்பெரும்-ஐஞ்சிறும் காப்பியங்கள் இவையாவும் அலவற்ற நுகர்ச்சியின் வீழ்ச்சியை எழுதிக் காட்டுவதோடு தேவைகளை கட்டுப்படுத்துவதற்கான சட்டகங்களையும், அவற்றை பின்பற்றுவதற்கான வழிமுறைகளையும் அறவோர் மற்றும் அறிவர் அமைப்பின் இயங்குமுறையிலிருந்து எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கின்றன. உண்பது நாழி, உடுப்பதிரண்டே என ஏகாரிக்கும் குரலின் பொருள்தான் யாது? பலவகையான உணவுகளும் உடைகளும் விற்கப்படும் பெருஞ்சந்தைகளை அறியாதவர்களா அவர்கள். இப்படி சொன்னவர்கள் யாவரும் அரசர்களாகவும்,வணிகர்களாகவும்,நிலக் கிழார்களாகவும் இருந்து அவற்றை துறந்து பர்விராசக முறையை ஏற்றுக் கொண்டவர்கள் என்பதை மறத்தலாகாது. இவர்கள்தான் தேவைகளை கட்டுப்படுத்துவதன் மூலம் கிடைக்கும் உபரியை பகிர்ந்தளிக்கும் சாத்தியங்களை கொண்ட கூட்டுவாழ்வை சகலருக்கும் பரிந்துரைத்தவர்கள். மழையின்மை, கடல்கோள் போன்ற இயற்கை பேரிடராலும் சாதி, வற்கம் போன்ற செயர்க்கை பேரிடராலும் ஏற்பட்ட மனித அழிவை தடுத்துக் காப்பதற்காக இத்தகைய அற விழுமியங்களை உருவாக்கினர். செயர்க்கைப் பேரிடர் சிலரின் மேட்டிமை மற்றும் முதலாலிய மனப்பான்மையால் உருவாக்கப்படுவதாகும். இவற்றின் நீக்கம் நீண்டகால கற்கை முறையில் தங்கியுள்ளது. இயற்கைப் பேரிடரை எதிர்க் கொள்வதற்கான திட்டங்கள் இன்றைய நிலையிலும் கூட பலரிடம் இல்லை. இவற்றை எதிர் கொண்ட அனுபவங்களை மணிமேகலைக் காப்பியம் பரக்கப் பேசுகிறது. இதனை புரிந்து கொள்ளுவதற்கு ஏதுவாக அறம் சார்ந்த உரையாடல்களை விளக்குவது பயன்தரக் கூடும்.
                அறம் சொல்லாடலை நோக்கி
சேவை, உதவி, தொண்டு, தருமம் நேயம் போன்ற பொருள்  உடைய சொற்களை உலகில் உள்ள அனைத்து பகுதியில் இருக்கும் மனிதர்கள் உணரத் தலைப்படும் காலம் இது. மேலும் மனிதம் என்பதன் உள்ளடக்கத்தை புரிந்துக் கொள்ளும் நேரமும் இது. பேரிச்சையும், பெருங்கொண்டாட்டமும், பேரழகும், பேரதிகாரமும் படிந்திருந்த உடலில் மனிதம் அழிக்கப்படவேண்டிய சிறு வடுவாக இருந்தது. கடந்த மூன்று மாடங்களாக வெட்டுண்ட மரத்தில் துலிர்க்கும் தளிரை கண்டு பெருங்காட்டை கற்பனை செய்துகொண்டு ஏங்கும்  குழந்தைகள் போல உலகம் மனிதத்திற்காக ஏங்குகிறது. சமத்துவம் சகோதரத்துவம் என்று முழங்கிய ஐரோப்பியநாடுகள் உள்ளிட்ட மேலை நாடுகளில் இவையெல்லாம் இறந்த காலத்தை நினைவு கூறும் ஒரு சடங்காக மட்டும் இருக்கிறது இரண்டாம் உலக போருக்கு பின்னும் ஒருமுறை இது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய பிருமாண்ட கட்டமைப்பில் பொருள் படுத்த வேண்டிய மனித நலவாழ்வுக்கான கட்டுமானங்கள் அரசுகளின் கைகளில் இல்லாதது  வியப்பை தருகிறது. இதன்காரணமாக அவர்களுடைய விஞ்ஞான பங்களிப்பை புறந்தள்ள முடியாது. அந்த விஞ்ஞானம் மனித நிலையோடு எவ்வளவு நெருக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது என்றதுவும் பொருள் படுத்தத்தக்க ஒன்று. கடந்த இருபது ஆண்டுகளாக சீனாவும் இந்நிலையை நோக்கி நகரந்து கொண்டிருக்கிறது. பழஞ் சமூகத்தின் கூட்டு வாழ்விலிருந்து வகுத்தளிக்கப்பட்டுள்ள மாக்சிய தத்துவத்தை ஒரு பண்பாடாக பரப்புரை செய்யலாம். இந்தியக் குடியரசும் வல்லரசு என்கிற இலக்கை அடைவதற்காக சமூகநீதி,  மக்கள்நலன் சார்ந்த பணி முடக்கம், பொருளியல் உள் கட்டமைப்பு பொன்ற வற்றை பலி கொடுப்பதற்கான திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டு வந்த சமயத்தில் கொரொனா என்னும் பேரிடர் வந்தது ஒரு வகையில் நல்லது என்றே சொல்லத் தோன்றுகிறது. எலும்பில்லாத உயிர்களை வெயில் வருத்துவது போல அன்பில்லாதவர்களை அறம் வருத்தும். பசியும் பிணியும், பகையும் இல்லாத்து தான் நாடு என்பன போன்ற அறமொழிகளை உணர்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழில் தோன்றியுள்ள அனைத்து இலக்கியங்களும் எதோ ஒருவகையில் அறத்தை எடுத்துரைக்கின்றன. என்றாலும் அற இலக்கியம் என்கிற ஒரு தனி வகைமை இம்மொழியில் இருக்கிறது. உலகில் இன்னொரு மொழியில் இப்படியானதொரு வகைமை இருப்பதாக எனக்கு தெரியவில்லை. செழுமையான அறம் சொல்லும் போக்கு இம்மொழியில் இருக்கிறது என்றால் கொடுமையான அறமற்ற செயல்கள் நடந்து கொண்டிருக்கிறது என்பது பொருள் என்றாலும் அதை அப்படியே தொடர விடாமல் கவலையோடும் கரிசனத்தோடும் அனுகி, அறவழியை அமைத்து கொடுத்தோர் அறவோர். கொடுமையான செயல்கள் பேரிடராக உணரத்தக்கவை. மனித நேசமற்ற மனிதர்களாலும் இயற்கையாலும் ஏற்பட்ட பேரிடர்களை மனிதத் தன்மையுடைய மனித முயற்சியால் எதிர்கொண்ட அனுபவத்தை பரக்கப் பேசுகிறது மணிமேகளைக் காப்பியம்.
                இருபெரும் பேரிடர்கள்
மழையின்மையால் பன்னிரண்டு ஆண்டுகள் ஏற்பட்ட பஞ்சம், கடல்கோல்  ஆகிய இரு பேரிடர்கள்  பற்றியும் அவற்றை ஏதிர்கொண்டு மக்களின் நலம்காத்த அறம்சார் அனுபவங்கள் பற்றியும் மணிமேகளைக் காப்பியம் பரக்கப் பேசுகிறது.  முதலில் இரண்டு பேரிடர்கள் குறித்து இங்கு விளக்கப்படுகிறது.
            பஞ்சம்
மகத நாட்டில் ஏற்பட்ட பஞ்சத்தின் போதூதான் சந்திரகுப்த மவுரியன் தனது குருவான சமண சமயத்தை சார்ந்த பத்தரபாகு அவரோடு தென்னந்தியாவின் கருநாடக மாநிலத்தில் உள்ள சிரவணபெலகுலா வரை வந்து தங்கியிருந்தார் என்று வரலாறுகள் காட்டுகின்றன. பாண்டிய நாட்டில் பன்னிரண்டாண்டுகள் மழையில்லாத்தால் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. இந்தத் தகவலை சிலப்பதிகாரம் காடுகாண்காதையும், மணிமேகலைக் காப்பியம் ஆபுத்திறன் வரலாறு கூறிய காதையிலும் இறையனார் களவியல் உரையிலும் காணப்படுகின்றன.
முச்சங்கத்தைக் குறிப்பிடும் தொல்புனைவு ஒன்றில் இரண்டாம் சங்கம் முடிந்த பிறகு பாண்டிய அரசன் ஒருவன் அந்நாட்டிலிருந்த அறிஞர்கள், புலவர்கள் சான்றோர் ஆகியோரை அழைத்து நமது நாட்டில் பெரும்பஞ்சம் ஏற்பட்டுள்ளது, நீங்கள் அனைவரும் வெவ்வேறு திசைகளில் உள்ள நாடுகளுக்குச் சென்று தங்கி உயிர் பிழைத்திருங்கள் பன்னிரண்டு ஆண்டுகள் பஞ்சம் முடிந்த பிறகு உங்களை கூப்பிடுகிறேன் என்றும், அப்பன்னிரண்டாண்டுகள் முடிந்தப் பின் அப்பாண்டியரசன் அவர்கள் அனைவரையும் அழைத்து மூன்றாம் தமிழ்ச் சங்கத்தை நிருவினான் என்றும் இறையனார் களவியல் உரை கூறுகிறது. பஞ்சகாலமான அப்பன்னிரண்டாண்டுகளும் அரசன் ஆட்சியை எவ்வாறு நடத்தினான், மக்களின் நிலைமை யாது என்பது குறித்த தகவல் எதுவும் சுருக்கமாக கூட இன்னூலில் சொல்லப்படவில்லை.
சிலப்பதிகார காடுகாண்காதையில் மாங்காட்டு மறையவன் வாயிலாக பஞ்சம் குறித்த ஒரு கதை நினைவூட்டப்படுகிறது. பாண்டிய அரசன் ஒருவன் இந்திரனோடு சண்டையிட்டு அவரை தோற்கடித்து அவமானப்படுத்தியதனால் இந்திரன் அப்பாண்டிய நாட்டில் பஞ்சத்தை ஏற்படுத்தினான் அக்காலத்தில் பன்னிரண்டாண்டுகளாக மழை பெய்யவில்லை. இதனால் பஞ்சத்தை சமாலிக்க முடியாத அப்பாண்டியன் முத்துமாலை ஒன்றை பரிசளித்து இந்திரனோடு சமாதானமாகி தன்னாட்டிற்கு மழைவேண்டும் எனக் கேட்டுக் கொண்டதன் பேரில் அந்நாட்டில் மிகுந்த மழைப் பெய்தது,  பாண்டிய நாடு இதனால செழிப்படைந்தது.  இத்தகைய சிறப்பு செய்த பாண்டியன் தென்னவன் வாழ்க என மாங்காட்டுமறையவன் வாழ்த்துகிறான்.
திங்கட் செல்வன் திருக்குலம் விளங்கச்
செங்கணா யிரத்தோன் திறல்விளங் காரம்
பொங்கொளி மார்பிற் பூண்டோன் வாழி  25
முடிவளை யுடைத்தோன் முதல்வன் சென்னியென்று
இடியுடைப் பெருமழை யெய்தா தேகப்
பிழையா விளையுட் பெருவளஞ் சுரப்ப
மழைபிணித் தாண்ட மன்னவன் வாழ்கெனத்
தீதுதீர் சிறப்பின் தென்னனை வாழ்த்தி  30”
பாண்டிய நாட்டில் ஏற்பட்ட பஞ்சம் ஒன்றை குறித்து திருவிளையாடல் புராணமும் கூறுகிறது. சொக்கன் பிட்டுக்கு மண்சுமந்த கதை இதை உணர்த்துகிறது. பஞ்ச காலத்தில் மக்களின் தற்சார்பு  பொருளாதாரம் இருக்காது. மக்களுகான குறைந்தபச்ச உணவையாவது தர வேண்டியது அரசின் கடமையாகும். மழையில்லாத காலத்தில் வைகைகரையை பலப்படுத்தும் பணியை உருவாக்கி அதன் மூலம் பொதுமக்களுக்கு வேலையளித்து சிறிது உணவை உருதி செய்கிறான் பாண்டிய அரசன். 1800.களில்  சென்னையிலிருந்து புதுவை வரை பக்கிங்காம் கால்வாய்  வெட்டப்பட்டது கூட பஞ்சகால நிவாரண பணியாக அறிய முடிகிறது. 
                பஞ்ச காலமும் நிவாரணப் பணியும்
மணிமேகலைக் காப்பியத்தில் பாண்டிய நாட்டு பஞ்சம் ஆபுத்திறன் கதையோடு சேர்த்து விவரிக்கப்படுகிறது. அமுத சுரபி என்கிற கருத்தாக்கம் ஆபுத்திறனால் பஞ்ச காலத்தில் நடைமுறைப் படுத்தப்பட்டதாகும்.
மழையில்லாததனால் மண்ணுயிர்கள் எல்லாம் செத்துமடிகின்றன, காடுகளில் உள்ள தாவரங்கள் ஒன்றையொன்று உரசி பற்றியெறிந்து புகைகின்றன, இப்படியான ஒரு தருணத்தில் தான் அந்தன அரசனான விசுவாமித்திரன் நாய்கரியை தின்று உயிர் வாழ்ந்தான். அதை பொன்றதான இப்பாண்டிய நாட்டு பஞ்சமும் இந்திரன் சாபத்தால் உண்டானது.  அதன் பிறகு இந்திரன் சிறப்பு செய்ததனால் மழை வந்தது.
புல் மரம் புகையப் புகை அழல் பொங்கி
மன் உயிர் மடிய மழைவளம் கரத்தலின்
அரசு தலைநீங்கிய அரு மறை அந்தணன்
இரு நில மருங்கின் யாங்கணும் திரிவோன்
அரும் பசி களைய ஆற்றுவது காணான்
திருந்தா நாய் ஊன் தின்னுதல் உறுவோன்
இந்திர சிறப்புச் செய்வோன் முன்னர்
வந்து தோன்றிய வானவர் பெருந்தகை
மழை வளம் தருதலின் மன் உயிர் ஓங்கி  11-090
பிழையா விளையுளும் பெருகியது அன்றோ?’
இப்பஞ்சத்தை அறிந்த ஆபுத்திரன் பிச்சை பாத்திரத்தை எடுத்துக் கொண்டு செல்வர்கள். மிகுதியாக வாழும் தென்மதுரைக்குச் சென்று சிந்தா தேவியின் கோவிலில் வணங்கி அந்தத் தெய்வத்தின் ஆணைப்படி உள்ளவர்களிடம் வாங்கி எதுவும் இல்லாதவர், கைவிடப் பட்டோர், மாற்றுத் திறனாளிகள் என அனைவருக்கும் உணவு கொடுத்தது போக மிச்சமிருந்தால் உண்டு உரங்குவான்.
மிக்க செல்வத்து விளங்கியோர் வாழும்
தக்கண மதுரை தான் சென்று எய்தி
சிந்தா விளக்கின் செழுங் கலை நியமத்து
அந்தில் முன்றில் அம்பலப் பீடிகைத்
தங்கினன் வதிந்து அத் தக்கணப் பேர் ஊர்
ஐயக் கடிஞை கையின் ஏந்தி
மை அறு சிறப்பின் மனைதொறும் மறுகி  13-110
காணார் கேளார் கால் முடப்பட்டோர்
பேணுநர் இல்லோர் பிணி நடுக்குற்றோர்
யாவரும் வருக என்று இசைத்து உடன் ஊட்டி
உண்டு ஒழி மிச்சில் உண்டு ஓடு தலை மடுத்து
கண்படைகொள்ளும் காவலன் தான் என்  13-115’
இவ்வரிகள் இதனை உணர்த்துகிறது. இத்தாலி, பிரான்ச், இங்கிலாந்து, அமரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட மூத்தக் குடி மக்களுக்கும் மருத்துவ உதவியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு பெரும்பாலோர் மரணத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்நாடுகளில் நடுத்தர மக்களுக்கு மருத்துவமனைக்குச் சென்று கொரொனா சிகிச்சை பெறுவதற்கு போதுமான பொருள் கைய்யிருப்பு அம்மக்களிடமில்லை என்று சொல்லுகிறார்கள். இந்நிலையில் இந்நாடுகளில் பட்டினிச் சாவும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இக்கட்டத்தில் இலவசமாக உணவு பொருள்களை சிறிது தந்து இருக்கிறது இந்நாட்டு அரசுகள். மக்கள் நலன் சார்ந்த கட்டமைப்புகள் இவ்வரசுகளின் கைகளில் இல்லாத்தால் உணவு இல்லாதவருக்கு கிடைப்பது அறிது. இப்போது வலர்ந்த நாடுகள் இல்லாதவர்களை கைவிட்டது போலதான் அன்று பஞ்சத்தின் போது பாண்டிய அரசின் நிலையும். இத்தகைய செயலால் ஆபுத்திரனின் புகழ் பெருகியது. இந்திரனின் புகழை மங்கச் செய்த்து. இதனால் தன் பதவிக்கு ஆபத்துவருவதை அறிந்த இந்திரன் அதை தடுக்கவேண்டி ஆபுத்திரனை தேடிவந்து பேசினான். நீ ஏன் தெருத் தெருவாக அலைகிறாய் என்னோடு அரசபைக்கு வந்துவிடு உனக்கு வேண்டிய வசதிகளை நான் செய்து தருகிறேன், என்று இந்திரன் சொன்னபோது ஆபுத்திரன் சத்தமாக சிறித்தான். இந்த அவமானத்தை தாங்கமுடியாமல் ஆபுத்திரனை இந்த நாட்டைவிட்டு விரட்ட எண்ணி மழைப் பெய்யச் செய்து பாண்டியநாட்டு பன்னிரண்டு ஆண்டுகள் பஞ்சத்தை போக்கினான் இந்திரன் என சொல்லப்படுகிறது.
யாவரும் இல்லாத் தேவர் நல் நாட்டுக்கு
இறைவன் ஆகிய பெரு விறல் வேந்தே
வருந்தி வந்தோர் அரும் பசி களைந்து அவர்
திருந்து முகம் காட்டும் என் தெய்வக் கடிஞை
உண்டிகொல்லோ உடுப்பனகொல்லோ
பெண்டிர்கொல்லோ பேணுநர்கொல்லோ
யாவை ஈங்கு அளிப்பன தேவர்கோன்? என்றலும்
புரப்போன் பாத்திரம் பொருந்து ஊண் சுரந்து ஈங்கு
இரப்போர்க் காணாது ஏமாந்திருப்ப  14-050
நிரப்பு இன்று எய்திய நீள் நிலம் அடங்கலும்
பரப்பு நீரால் பல் வளம் சுரக்க! என
ஆங்கு அவன் பொருட்டால் ஆயிரம்கண்ணோன்
ஓங்கு உயர் பெருஞ் சிறப்பு உலகோர்க்கு அளித்தலும்
பன்னீராண்டு பாண்டி நல் நாடு
மன் உயிர் மடிய மழை வளம் இழந்தது
வசித் தொழில் உதவ மா நிலம் கொழுப்பப்
பசிப்பு உயிர் அறியாப் பான்மைத்து ஆகலின்
ஆர் உயிர் ஓம்புநன் அம்பலப் பீடிகை
ஊண் ஒலி அரவம் ஒடுங்கியது ஆகி  14-060
                பேரிடர்காலத்து நெறிமுறை
ஒரு நாட்டின் வளர்ச்சியென்பது அந்நாட்டரசின் செல்வ கைய்யிருப்பைப் பொருத்தது மட்டுமல்ல, அந்நாட்டு பொதுமக்கள் புழங்கும் பொருள் நிலைமையையும் உள்ளடக்கியதாகும். அரசின் கைய்யிருப்பு பேரிடர் போன்ற அவசரகாலத்தில் மக்களின் நலனை பாதுகாப்பதற்கானதே தவிர கைய்யிருப்பு மொத்தத்தையும் தனியாருக்குக் கொடுத்துவிட்டு வாராக் கடனில் வரவு வைத்துவிட்டு பொதுமக்களின் தினக் கூலிகளையும், மாதக் கூலிகளையும் பரிப்பதற்கல்ல. தனியார் போக்குவரத்து, கட்டுமானம், எண்ணை மற்றும் எறிவாயுக் கழகம், ஆடம்பர பொருள் உற்பத்தி மற்றும் விற்பனைத் துறை, வங்கி, பொழுது போக்கு விடுதிகள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடத்தில் நிவாரண நிதியை ஏன் அரசுகள் அதிகாரத்தோடு கேட்பதில்லை. பொதுமக்களுக்கு சொந்தமான அரசு நிதியிலிருந்துதானே அவர்களின் தொழிலுக்கு கடன் வழங்கப்படுகின்றன. என்பதை அறியாடவர்களாக ஆட்சியாளர்கள் இருக்க முடியாது. கலை மற்றும் விளையாட்டுத் துறை சாராத தனியார் முதலாளிகள் எத்தனை பேர் இந்தப் பேரிடர் காலத்தில் மக்கள் பணியாற்றி வருகிறார்கள். சாமிகளை உற்பத்தி செய்யும் தனியார் சாமி நிறுவனங்கள்  அவற்றின் ஆத்மாக்கள் எல்லாம் எங்கே. அவர்கள் தங்கள் மந்திரத்தால் பேரிடரைப் போக்க வேண்டாம், குறைந்தது பொது மக்களுக்கு தேவையான உணவு மருந்து உள்ளிட்ட பொருள்களையாவது கொடுக்கலாம். பாண்டிய நாட்டில் ஏற்பட்ட பன்னிரண்டாண்டு கால பஞ்சத்திலும் பிரம்மா விச்ணு, சிவன் உள்ளிட்ட சாமிகள் யாரும் களத்திற்கு வரவில்லை. ஆத்மாவையும் சாமியையும் மறுத்த புத்தநெறியாளர்களே மக்கள் பணியாற்றினர். அவர்களுள் ஒருவர் ஆபுத்திரன், பாண்டிய நாட்டு தலை நகரமான தென் மதுரையில் பஞ்சம் நீடிக்கிறது, பசியால் மக்கள் மடிகின்றனர் இந்த பாத்திரத்தைக் கொண்டு அவர்களுக்கு உணவு அளித்து காப்பாற்று என்று சிந்தாதேவி கேட்டு கொண்டதன் பேரிலும் அத்தெய்வத்தின் ஆசி பெற்று செல்வம் உடையோரிடம் பிச்சை எடுத்து இல்லாதோருக்கு உணவளித்தான் ஆபுத்திரன். உள்ளவருக்கே உணவளிப்பது அறத்தை விலைப் பேசுவதாகும், இல்லாதவரின் பசியை போக்குவது மெய்யான வாழ்க்கையை வாழ்வதாகும். மண்ணாலான இவ்வுலகில் வாழ்வோர்க்கெல்லாம் உடம்பு உணவாலானது, எனவே பசித்தவருக்கு உணவளிப்பது உயிர் வழங்குவதாகும். 
ஆற்றுநர்க்கு அளிப்போர் அறம் விலைபகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
xxஇவ்வாறு ஆபுத்திரன் பசித்தோருக்கெல்லாம் உணவளித்ததனால் ஆட்சியாளர்களை விட குறிப்பாக இந்திரனை விட பெரும் புகழ்பெற்றான். இதை கண்டு அஞ்சிய இந்திரன் ஆபுத்திரனை நாட்டை விட்டு வெளியேற்ற எண்ணி மழையை பெய்ய வைத்தான் அதன்பின் பாண்டிய நாடு வளம் பெற்றது. இக்காரணத்தால் அச்சையப்பாத்திரத்திற்கு வேலையில்லாமல் போனதால் ஆபுத்திரன் சாவக நாட்டில் பஞ்சமிருப்பதை அறிந்து அங்கு செல்ல நினைத்த போது கப்பல் ஆபுத்திரனை மணிப் பல்லவத்தில் இரக்கி விட்டச் சென்றதனால் துயரம் தாங்காமல் செல்வதற்கு வழி அறியாது கோமுகிப் பொய்கையில் அப்பாத்திரத்தை வீசிவிட்டு தற்கொலை செய்துகொண்டான்.
            அச்சையப்பாத்திரத்தின்வரலாறு
அச்சையப் பாத்திரம், அமுதசுரபி, பிச்சைப் பாத்திரம் என்றெல்லாம் மணிமேகளைக் காப்பியத்தின் ஆசிரியர் தண்டமிழ் ஆசான் சாத்தனார் இப்பாத்திரத்தை கதைச் சூழலுக்கேற்ப குறிப்பிடுகிறார்.
பூம்புகாரை கடல் கொள்ளப் போவதை அறிந்த மணிமேகலைத் தெய்வம் அம்மக்களை காக்க எண்ணி மணிமேகலையை மணிப் பல்லவத்திற்கு கொண்டு விட இங்கு வந்த தீவத் திலகை அச்சையப் பாத்திரத்தை மணிமேகலை கைய்யில் கொடுத்து அப்பாத்திரத்தின் வரலாற்றை சொல்லியது. இதன் பாதி மேலேக் கூறப்பட்டமையால் இங்கு தவிர்க்கப்படுகிறது. குழந்தையின் முகம் கண்டிரங்கி சுரக்கும் தாய் முலைப் போன்றது இப்பாத்திரம், பசித்த அனைவருக்கும் அள்ள அள்ள குறையாத ஆருயிர் மருந்தான உணவை அளிக்கும் அமுத சுரபி என பாத்திரத்தின் இயல்பு குறித்து மணிமேகலைக்கு தீவத்தலகை கூறினாள்.
ஈன்ற குழவி முகம் கண்டு இரங்கி
தீம் பால் சுரப்போள் தன் முலை போன்றே
நெஞ்சு வழிப்படூஉம் விஞ்சைப் பாத்திரத்து
அகன் சுரைப் பெய்த ஆருயிர்மருந்து அவர்
முகம் கண்டு சுரத்தல் காண்டல் வேட்கையேன் என
பேரிடர் காலத்தில் மக்களிடம் தோன்றும் பசி பல விதமான குற்றச் செயல்களை தோற்றிவிக்கும். கல்வி கற்றோர் கல்லதவர் போல் நடந்துக் கொள்வர், ஒழுக்க முடையோர் ஒழுங்கை கடைபிடிக்க மாட்டார்கள், நாணம் உடையோர் நாணத்தக்க செயல்களை செய்வர், அழகு கெட்டழியும், கணவன் மனைவிக்கிடையே பகைவலரும் காமம் இருக்காது அவரவர் தனமானத்தை இழப்பர் இவையாவும் பசியென்னும் பாவி வருவதனால் நடக்கும். இவ்விடர் காலத்தில் பசியை போக்குவோரின் புகழை எடுத்துச் சொல்ல வார்த்தைகளே இல்லை. என பேரிடர் காலத்து நேரும் பசியையும் அதை நீக்குவதனால் உண்டாகும் நன்மையையும் தீவத்திலகை மணிமேகலைக்கு எடுத்துரைக்கிறாள். பசியின்
குடிப் பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும் புணை விடூஉம்
நாண் அணி களையும் மாண் எழில் சிதைக்கும்
பூண் முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப் பிணி என்னும் பாவி அது தீர்த்தோர்  11-080
இசைச் சொல் அளவைக்கு என் நா நிமிராது
இந்நிலையை நோக்கி நமது நாடு செல்லக் கூடாது. இக்காலகட்டத்தில் குடும்ப வன்முறைகள் அதிகரித்து இருப்பதாக சொல்லுகிறார்கள் காவல் துறை ஆவன அதிகாரிகள். பீகாரில் ஒரு தாய் தனது ஐந்து குழந்தைகளையும் கங்கை ஆற்றில் வீசியது உணவின்மையால் என்று தெரிய வருகிறது. கொரொனா வந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததனால் தொற்று வந்து மரணமடைந்த மருத்துவரை புதைக்க அனுமதிக்காமல் வன்முறை செய்தோரும் கல்வி கற்றோராக அறியப்படும் சென்னை வாசிகள்தானே.
தன்னம்பிக்கையும் பொது நலமும் அற்று மூட நம்பிக்கையும் சுயநலமும் நோயாக வளர்ந்து விட்ட ஒரு சமூகத்தின் பதற்றம் இது. அமரிக்காவில் நோய்த் தொற்றுள்ள மூதாட்டி ஒருவர் தனது செயற்கை சுவாசக் கருவியை மருத்துவமணையில் நோயில் இருக்கும் இளைஞர் ஒருவருக்கு கொடுத்து விட்டு நான் எழுவதாண்டுகாலம் இவ்வுலகில் வாழ்ந்து விட்டேன் இந்த முப்பது வயது இளைஞன் வாழவேண்டும் என்று வாழ்த்திவிட்டு வீடு திரும்பினார்.  இக்காலத்து இந்தியரிடமோ, தமிழரிடமோ இத்தகையப் பண்பு இருக்க இயலாது. இங்கு தொழில் சார்ந்த கல்வியறிவு வழங்கப்படுவதைப் போல மனிதத்தை தழைக்கச் செய்யும் கல்வி அறிவு வழங்கப் படுவதில்லை. பழங்கால இந்தியாவில் மனிதத்தை வளர்க்கும் சமூக நலன் சார்ந்த கல்வி அறிவை புகட்டியோர் அவைதீக குறிப்பாக புத்த அறவோராவர்.
இங்கு பேரிடர் காலத்தில் இவர்கள் ஆற்றியப் பணிக் குறித்து பொருள் அமைக்கப்பட்டுள்ளதால் இவர்களின் கல்விப் பணிக் குறித்து விளக்க வாய்ப்பில்லை. இப்போது சோழ நாட்டில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது மணிமேகலை ஆற்றியப் பணியை விளக்குவது பயன்தரக் கூடும்.
            சோழ நாட்டில் பஞ்சம்
பாண்டிய நாட்டில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது ஆபுத்திரன் அனைவருக்கும் உணவளித்து பசிப்போக்கியதை மேலேக் கண்டோம். இதுமட்டுமின்றி ஆபுத்திரன் விட்டுச் சென்ற அச்சையப் பாத்திரத்தை மணிமேகலைக்கு கொடுக்கப்பட்டதையும் கண்டோம். ஏன் பூம்புகாரில் புத்தசங்கத்தில் இருந்த இளம்பெண்ணான மணிமேகலைக்கு இப்பாத்திரம் அளிக்கப்பட்டது. என்கிற கேள்வி முக்கியமானது. சோழ நாட்டில் பெரும் பஞ்சம் ஒன்று மழையில்லாத காரணத்தால் ஏற்பட்டது. இக்காலத்தில் புத்த அறவோரின் பணியான பசித்தோருக்கு உணவளித்தல் சிறப்பாக நடக்க வேண்டுமானால் இந்த இளம்பெண்ணால் மட்டும் முடியும் என்று சங்கத்தோர் கருதியிருக்க கூடும். வெய்யிலையும் பார்க்காமல் தெருத்தெருவாகவும்,வீடுவீடாகவும் சென்று உணவை சேர்த்து பசித்தோருக்கெல்லாம் கொண்டு கொடுக்க வேண்டுமானால் கடினமான இப்பணியை செய்ய ஆர்வமும் பெரும் உழைப்பும் வேண்டும். அதனால் தான் இளரத்தமுடைய மணிமேகலையை தேர்ந்தெடுத்திருக்கலாம். இக்காப்பியத்தின் பதினைந்து,பதினாறு, பதினேழாம் காதைகளில் மணிமேகலை பூம்புகார் தெருக்களுக்குச் சென்று பிச்சைப் பெற்று பசித்தோருக்கு குறிப்பாக காயசண்டிகையின் பன்னிரண்டு ஆண்டுகால பெரும் பசியை போக்க உணவளித்தது குறித்து விளக்குகின்றன.
            பஞ்ச காலத்து குறியீடான பாற்கடல் அமுதம்
அறவண அடிகள் மணிமேகலைக்கு சோழ நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான பஞ்சம் குறித்து எடுத்துரைக்கிறார். காவிரியாறு வற்றி விட்டதனால் இந்நாட்டு பொதுமக்கள் உணவின்றி பசியோடு உள்ளனர். பாற்கடலில் கடைந்தெடுத்த அமுதத்தை வானோரான தேவேந்திரர்கள்  தாங்கள் உண்ட அமுதின் மீதத்தைக் கூட பசித்தோருக்கு உண்ணத் தராமல் ஒளித்து வைத்துக் கொண்டனர். அத்தகைய அமுதத்தை சுரக்கின்ற அமுத சுரபியான இப்பாத்திரத்தை சும்மா வைத்துக் கொண்டிருப்பது குற்றமாகும். எனவே இதனை கொண்டு பசித்தோருக்கெல்லாம் உணவளிப்பாயாக, என்றார்.
சுரந்து காவிரி புரந்து நீர் பரக்கவும்
நலத்தகை இன்றி நல் உயிர்க்கு எல்லாம்
அலத்தல்காலை ஆகியது ஆய் இழை!  15-050
 வெண் திரை தந்த அமுதை வானோர்
உண்டு ஒழி மிச்சிலை ஒழித்து வைத்தாங்கு
வறன் ஓடு உலகின் வான் துயர் கெடுக்கும்
அறன் ஓடு ஒழித்தல் ஆய் இழை! தகாது எ
அமுதம் கிடைப்பதற்கறிதாக ஏன் இருக்கிறது என்கிற வியப்பான கேள்விக்கு அது பஞ்சகாலத்தில் பெறப்பட்டதால் ஆகலாம். மழையற்றுப் போய் உணவு கிடைக்காத பஞ்ச காலத்தில் தான் தேவர்களும் பாற்கடலிலிருந்து அமுதை எடுத்து உண்டனர் என்பது பெறப்படுகிறது. நிலத்தில் உணவு எதுவும் கிடைக்காததனால் கடல் சார் உணவை தின்றதன் குறியீடாக இது அமைந்து விட்டது. தேவர்கள் பதுக்கி உண்ணும் அமுதம் என்னும் வைதீக தொன்மத்திற்கு எதிராக பசித்தோருக்கெல்லாம் கொடுத்து மகிழும் அமுதசுரபி என்னும் அவைதீக குறிப்பாக புத்தநெறியின் தொன்ம ஆகிய இரண்டையும் ஓரிடத்தில் எதிரெதிராக நிறுத்தி கதை சொல்லப்பட்டுள்ளதன் தன்மை தொல் வரலாற்று எழுதியலுக்கு மிகமிக பயன்படக் கூடியது. புத்த மரபில் குறிப்பாக மணிமேகலைக் காப்பியத்தில் அமுதசுரபி கொண்டு உணவளித்து பசிப்போக்கும் நிகழ்ச்சி தமிழ்மக்களின் பஞ்சகாலத்து மழைச்சடங்கை மூலவேராக உடையது. இதுகுறித்து விளக்குவதற்கு முன் பாற்கடல் என்னும் பஞ்சகாலத்து காட்சி படிமம் குறித்து விவரிப்பது தகும்.
            பாற்கடல் என்னும் பஞ்ச காலத்துப்படிமகாட்சி
பாற்கடலில் பள்ளிகொண்ட பெருமாள்  என்கிற புராணக் கதை ஒன்று வைணவ நெறியில் நிலைத்திருக்கிறது. இதைப் பற்றி இங்கு பேச வேண்டியத் தேவையில்லை. பாற் கடல் என்கிற தொடர் பஞ்ச காலத்தைக் குறிக்கும் ஒரு காட்சியாக இருக்கிறது என்கிற அலவில் இக்கருதுகோள் முன்மொழியப்படுகிறது. பாற்கடல் என்னும் தொடர் பாலால் நிறைந்த கடலையோ, பால் போன்ற நீர் உடைய கடலையோ குறிப்பதன்று. கடல்போல பால் தெரியும் காட்சி இங்கு பாலென்பது நேரடியாக பாலை குறிப்பதில்லை, மாறாக அது வெள்ளை நிரத்தைக் குறிக்கிறது. பேச்சுவழக்கில் வெள்ளைத்தாழை பால்பேப்பர் என்று சொல்லுவதை நினைவில் கொள்க. இந்த வெள்ளை வானில் தோன்றும் வெள்ளையாகும். இது வேணில் காலத்து நண்பகல் சூரியன் கடலில் பட்டுத் தோன்றும் வெண்மையை வெறும் கண்ணால் காணமுடியாது. ஆனால் அதேவேணில் காலத்தில் பவுர்ணமி நாளில் முழு நிலவு தோன்றும் போது கடல் அலை மிகுந்த சீற்றத்துடன் உயரமாக எழும், அப்போது தொன்றும் வெண்மையை யாராலும் பார்க்காமல் இருக்க முடியாது. இவ்விரண்டு தருணங்களின் காட்சி பாற் கடலாக உருவகம் செய்வதற்கான தகுநிலை உடையது. பொதுவாக வேனில்காலம் மழை வரண்ட காலமாகும். எனினும் வேனீல்காலத்தில் வானில் தோன்றும் முழுநிலவும், வெள்ளிமீனும் கடலோடு சேர்த்து நெய்தல் நில மீனவ மக்களால் வழிபடப்பட்டதை பழந்தமிழ் சங்க இலக்கியத்திலும் பரக்கக் காணலாம்.
முழு நிலவு வெளிப்படும் உவாநாளன்று இயல்பை விட கடல் அலையின் வேகமும், உயரமும் கூடி காணப்படும். முழு நிலவு நாளன்று கடலும் வானமும் பால் போன்று வெண்மையாகத் தோன்றும். வேனிர் காலத்து உவா நாட்களில்  பரதவ மக்களும் கடலில் நீராடி, துணையோடு புணர்ந்து, பின்னிரவுகளில் தோன்றும் வெள்ளி மீனையும் கடலையும்  சூளுற்ற சுறாகொம்பை நட்டும் வழிபடுவர். சுறா உருவம் பொறிக்கப்பட்ட மோதிரங்களை ஆணும் பெண்ணும் பரிசளித்துக் கொள்ளும் தகவலைக் கலித்தொகைப் பாடல் [84] சுட்டுகிறது. மழைவளம், நிலவளம், செல்வச்செழிப்பு உடல்நலம் பிள்ளைபேறு இவற்றுடன் வருண வழிபாடு தொடர்புடையது. கடலிலிருந்து நீரை முகந்து தான் மழை பெய்கிறது. மழையும் மழைக்காதாரமான கடலும் வருணனுக்குரியவை. இதனாலேயே இவன் நியேதிக் கடவுள் என வேதங்களில் சுட்டப் படுகிறான். நன்னீர், உப்புநீர் இவையிரண்டுமே வருணனின் இரண்டு தொடைகள்என அதர்வண வேதம் குறிப்பிடுகிறது. பாற்கடல் என்கிற கருத்துருவம் திருமாலோடு தொடர்பு படுத்தி விவரிக்கப்படுகிறது. திருமால் காடுறை உலகத்துத் தெய்வம்எனத் தொல்காப்பியம் சுட்டுகிறது. சங்கச் செய்யுள்களிலும் இதற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன.
வேதகாலத் தெய்வமரபு பின்னுக்கு தள்ளப்பட்டு புராணீக தெய்வ மரபு முன்னுக்கு வந்த நிலைமையை கடல்த் தெய்வமான வருணனுக்கு பதிலாக திருமாள் பாற் கடலோடு  தொடர்பு செய்யப்பட்டதன்வழி அறியலாம். வெள்ளை சுராமினின் கொம்பை நட்டு மீனவர் கடல்த் தெய்வத்தை வழிபடுவதை பட்டிணப் பாலைக் குறிப்பிடுகிறது. இந்த வெண்சுரா பால் சுரா எனவும் அழைக்கப்படுகிறது. இந்த கடல்த் தெய்வம் அணங்கு என்று சுட்டப் படுகிறது. கடல்த் தெய்வத்தின் வழிபாட்டில் வருணன் என்கிற பெயர் சங்க இலக்கியத்தில் இல்லை. அணங்கு என்பது பெண் தெய்வத்தை குறிக்கிறது. கடல்த் தெய்வமாக பெண் தெய்வமே இருப்பதை இது காட்டுகிறது. இந்த பெண் தெய்வத்திற்கு எப்போது மணிமேகலை என்னும் பெயர் சூட்டப்பட்டது என்று தெரியவில்லை. ஆனாலும் சிலப்பதிகாரமும் மணிமேகலைக் காப்பியமும் மணிமேகலையை கடல்த் தெய்வம் என்று விரிவாக விவரிக்கின்றன. இது குறித்துப் பின்னர் விளக்கப்படும், எனினும் மேலேக் காட்டப் பட்ட வழிபாடு வேனீல் காலத்து வழிபாடு என்பதை நினைவில் வைக்க.
 பால் போன்ற வெண்மையான தோற்றம் கடுமையான வெய்யிலை குறிக்கிறது. வெய்யில் குறைகிற போது வானில் தோன்றும் வெண் மேகத்தை குறிக்கிறது. வெய்யிலை மறைக்கும் வெண் மேகமும் கடலில் எழும் வெள்ளை அலையும் ஒன்றாக இணைந்து அந்தரத்தில் தோன்றும் வெண்படல காட்சி தான் பாற்கடலாக சொல்லப்பட்டிருக்கிறது. பொதுவாக வானில் தோன்றும் வெண் மேகம் மழை தருவதில்லை. வெள்ளை நிறத்தை உடைய வெள்ளி கோளும் வெண் மேகமும் வெள்ளை வானமும் பஞ்ச காலத்தை உணரத்தக் கூடியது. இத்தகைய அறிகுறிகளுடன் கூடிய ஒரு பஞ்ச காலத்தை புறநானூறு,  பதிற்றுப்பத்தும் எடுத்துரைக்கிறது. வெள்ளி மீனின் இடப் பெயர்ச்சியோடு தொடர்புப் படுத்தி பஞ்ச காலத்தை சங்கப் புலவர்கள் சுட்டுகின்றனர். இது குறித்து விவாதிப்பது பயன் தரும்.
                                            தென்  திசை பயணத்தில் வெள்ளி மீன்

வெள்ளை நிற முடைய வெள்ளி மீன் தெற்கு நோக்கி நகர்ந்த போது பஞ்சம் ஏற்பட்டது என்கிற தகவலை புறநானூறு, பதிற்றுப்பத்து, பட்டிணப் பாலை, மதுரைக் காஞ்சி சிலப்பதிகாரம் உள்ளிட்ட நூல்களில் வாசிக்க முடிகிறது. குறிப்பாக பதிற்றுப்பத்துப் புலவர்களான குமட்டூர்க்கண்ணனார், பாலைகவுதமனார், கபிலர் உள்ளிட்டப் புலவர்கள் தெரிவிக்கின்றனர்.
வெள்ளைக் குடிநாகனார் என்னும் புலவர் சோழ அரசனின் ஆட்சி சிறப்பை கூறவரும் போது வெள்ளி மீனானது வடக்கிலிருந்து தெற்கே நோக்கி போனாலும் அதனால் நீடிக்கும் கடும் கோடையிலும் பஞ்சத்திலும் காவிரி நீர் தருவதனால் பசிப் பஞ்சம் வராமல் மக்களை காக்கின்றாய் என்கிறார்.
    அலங்குகதிர்க் கனலி நால்வயிற் றோன்றினும்
    இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
    அந்தண் காவிரி வந்துகவர் பூட்டத்
    தோடுகொள் வேலின் றோற்றம் போல
    ஆடுகட் கரும்பின் வெண்பூ நுடங்கும்         10’ [புறம்35.]
வெள்ளிக் கோள் தெற்கே சென்ற போதும் பிற விண் மீன்களும் கோள்களும் தத்தம்பாதையிலிருந்து விலகி சென்றபோதும் பரம்பு நாட்டு வயல்கள் விலைச்சலை தரும். என்று கபிலர் பாரியின் பரம்பை விளக்குகிறார்.
மைம்மீன் புகையினுந் தூமந் தோன்றினும்
    தென்றிசை மருங்கின் வெள்ளி யோடினும்
    வயலக நிறையப் புதற்பூ மலர ]புறம் 117[
வெள்ளிக் கோள் தெற்க்கே சென்ற நிலையில் மழைப் பொய்த்தபோது ஏற்பட்ட பஞ்சத்தில்மு காவிரியின் துணை கொண்டு பெரந்திரமாவலவன் மக்களை பசியிலிருந்தும் நோயிலிருந்தும் காத்தான் என்று பட்டிணப் பாலை புலவர் எடுத்துரைக்கிறார்.
வசையில்புகழ் வயங்குவெண்மீன்
திசைதிரிந்து தெற்கேகினும்
தற்பாடிய தளியுணவிற்
புட்டேம்பப் புயன்மாறி
வான்பொய்ப்பினும் தான்பொய்யா  5
மலைத்தலைய கடற்காவிரி
புனல்பரந்து பொன்கொழிக்கும்   ” [பட்,1-7]
புறநானூறு [117.ஆம்] பாடலில் கூறப்படும் வானியல் நிகழ்வான மைமீன் மற்றும் தூமம் என்கிற புகை கொடி தோற்றங்கள் சிலப்பதிகாரம் நாடுகாண் காதையிலும் எடுத்துரைக்கப்படுகிறது.  மைமீன்-கறியவன் என்றும் தூமம்-புகைக்கொடி என்றும் இளங்கோவடிகள் தமிழாக்கி உரைக்கிறார்.
கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
கால்பொரு நிவப்பின் கடுங்குரல் ஏற்றொடும்
சூல்முதிர் கொண்மூப் பெயல்வளம் சுரப்பக்  105
குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு
கடல்வளன் எதிரக் கயவாய் நெரிக்கும்
காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை
[சிலம்பு, 10, 102-111.]
மேலேக் காட்டப்பட்டுள்ள இவெடுத்துரைப்புகள் அண்டவெளியில் நிகழும் மாவெடிப்புகளை குறிக்கிறது. அரசத் தலைவர்கள் குறித்த புகழ்நிலை பாடல்களில் வானியல் அல்லது அண்டவெளி நிகழ்வுகளை எடுத்துரைக்கவேண்டியதன் தேவை அரசன் தனது ஒழுக்கநெறியில் தவராமல் மக்களை ஆளுவான் ஆயின் அண்டவெளியில் இயங்கும் கோள்கள் வெடித்து சிதரினாலும்,எரிந்து கறகி புகைந்தாலும் எத்தகைய துன்பமும் வராது என்று அறிவுறுத்துவதற்காக. வெள்ளிமீன் வடதிசையிலிருந்து நீங்குவதாவது தனக்கிணமான மீன்கூட்டத்திலிருந்தும் விலகுவதையும் குறிக்கிறது. இத்தகைய பொருள்படுத்தலைத்தான் புலவர்கள் எடுத்துக்காட்டுகின்றனர். கோள்கள் மீன்கள் இயக்க அறிவோடு மழைவருவதற்கான காற்றின் திசையையும் விசையையும் மெய்மைவாதிகளான புலவர்கள் அறிந்துவைத்திருந்தனர்.
அகன்ற விண்வெளியில் இயங்கும் நாள்மீன்கள் தத்தம் நெறியிலிருந்து திரியாத நிலையில் வலப்பக்கமிருந்து வீசிய குளீர்ந்த காற்றுடம் நல்லமழைப் பெய்ததனால்  ஒருவிதைப் போட்டால் ஆயிரமாக முலைக்கிறது. என்கிறது மதுரைக் காஞ்சி.
வல மாதிரத்தான் வளி கொட்ப   5
விய னாண்மீ னெறி யொழுகப்
பகற் செய்யும் செஞ் ஞாயிறும்
இரவுச் செய்யும் வெண் திங்களும்
மை தீர்ந்து கிளர்ந்து விளங்க
மழைதொழில் உதவ மாதிரங் கொழுக்கத்  10” [மதுரைக்,5-10]
இப்பாடலில் வரும் மாதிறம் என்பது இருபெருந்திசைகளில் ஒன்றாகிய வடக்கை குறிக்கிறது. வலப்பக்கமாக இருந்து வீசும் காற்றினால் நல்ல மழைப் பெய்யும் என்பதை மணிமேகலையும் கூறுகிறது. [மணி,காதை,12] வெள்ளிக் கோளுக்கும் பருவ மழைக்கும் உள்ள உறவு குறித்து இரண்டாம் பத்து, மூன்றாம் பத்து, ஏழாம் பத்து ஆகியப் பதிற்றுப்பத்து பாடல்களில் சுருக்கமாக எடுத்துரைக்கப்படுகின்றன. இவற்றுள் மூன்றாம் பத்தில் உள்ள ஒரு பாடலுக்கு சீர்சால் வெள்ளி என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது நம் கவனத்தை ஈர்க்கிறது.
அசைவில் கொள்கையாராகலின் அசையாது, ஆண்டோர் மன்ற இம் மண்கெழுஞாலம், நிலம்பயம்
பொழியச் சுடர்சினம் தணிய, பயங்கெழு வெள்ளி ஆநியம் நிற்ப, விசும்புமெய்யகலப்
பெயல்புர வெதிர, நால்வேறு நனந்தலை ஓராங்கு நந்த, இலங்கு கதிர்த் திகிரி
மழைவேண்டு புலத்து மாரி நிற்ப
நோயொடு பசியிகந் தொரீஇப்
வயங்குகதிர் விரிந்து வானகஞ் சுடர்வர
 வறிதுவடக் கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி
 பயங்கெழு பொழுதோ டாநிய நிற்பக்
வெள்ளிக் கோளானது வட திசையிலிருந்து ஒதுங்கி தாழ்ந்து விட்டதனால் மழையில்லாமல் பஞ்சம் ஏற்பட்டது என்கிறது இச்செய்யுள் அடிகள். மழையில்லாத பஞ்சகாலத்திலும் பல்யானை செல்கெழுகுட்டுவன் மக்களளுக்கு உணவளித்து காத்தான் என்பதை மேலும் எடுத்துரைக்கிறது இவ்வடிகள்.  தணிய" என்றும் கூறினார். வெள்ளிக்கோள் உலகுயிர்கட்கு நலம் செய்யுமாகலின்,
  பயங்கெழு வெள்ளி" யென்றும், அந்நலம் உண்டாதற்குத் துணையாகும் ஏனை நாளும் கோளும்
  இயங்கு மிடத்தே இவ் வெள்ளி நிற்க வேண்டுதலின், "ஆநியம் நிற்ப" என்றும் கூறினார்.
  "அழல் சென்ற மருங்கின் வெள்ளியோடாது மழை வேண்டு புலத்து மாரி நிற்ப" (பதிற் 13)
  என்றும் "வறிது வடக்கிறைஞ்சிய சீ்சால் வெள்ளி, பயங்கெழு பொழுதோ டாநிய நிற்ப"
  (பதிற் 24) என்றும் சான்றோர் கூறுதல் காண்க.உள்நாட்டு உற்பத்தி மற்றும் மக்களிடமும் அரசிடமும் இருந்த கையிருப்பு இவற்றை கொண்டே பஞ்ச காலத்தை பழந்தமிழ் அரசர்கள் எதிர் கொண்டனர். கோள் நிலை திரிந்தாலும் கோநிலை அதாவது அரசின் ஆட்சி நிலை பிரழாது என்பர், இது குறித்து பின்னர் விளக்கப்படுகிறது.
அழல்சென்ற மருங்கின் வெள்ளி யோடா(து)
கலிழுங் கருவியொடு கையுற வணங்கி
 மன்னுயிர் புரைஇய வலனேர் பிரங்கும்
 கொண்டற் றண்டளிக் கமஞ்சூன் மாமழை
 காரெதிர் பருவ மறப்பினும்
 பேரா யாணர்த்தால் வாழ்கநின் வளனே.” [பதிற்]
மழையோடு உறவுடைய வெள்ளிக் கோளோடு சேர்த்து ஆனிய அல்லது ஆநிலை என்கிற தொடர் வருகிறது. ஆ வெள்ளிக் கோளை போலவே இந்த ஆனிய முக்கியத்துவம் பெறுகிறது. இது குறித்து விளக்குவது பயன்தரக் கூடும்.
                                                                  ஆநிலை உலகம்
பாற்கடல், வெள்ளிக் கோள், வெண்மேகம் இவையெல்லாம் ஒரே நிறப் பண்புப் பெயரின் மாற்றீடாகவோ அல்லது பதிலீடாகவோ இருக்கின்றன என்றதை மேலே இவை குறித்து அளிக்கப்பட்டுள்ள விளக்கத்திலிருந்து பெற முடியும். மேலும் வெள்ளை நிரத்தைக் குறிக்க கூடிய இவை போன்ற பலவும் என்கிற பெயரை மூலமாக அல்லது அடிச் சொல்லாக உடையது. இதற்கு பால் தரும் பசுவை ஆ குறிப்பது தொடங்கி பழந்தமிழின் அறம் சொல்லும் பாவகையான வெண்பாவரை குறைந்தது பத்து மாற்றுப் பெயர்களையாவது இதனோடு நீட்டி விளக்க முடியும். இந்நீட்டம் கட்டுரைக்கான ஆய்வுப் பொருளின் திசையை மாற்றி விடும் என்பதனால் மழையோடும் மழையின்மையால் ஏற்படும் பஞ்சத்தோடும் அப்போது இயங்கும் அறவோரோடும் தொடர்புடைய சில பெயர் தொடர்கள் மட்டும் இங்கு விள்ளக்கப்படுகிறது. அந்த வகையில் புறநானூறு ஆறாம் செய்யுளில் வரும் ஆநிலை உலகம் என்கிற ஒரு தொடர் சிறிது விளக்கத்திற்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடிமி பெருவழுதியின் நாட்டு எல்லையை புகழும் காரிக் கிழார் ஆநிலை உலகம் உள்ளிட்ட மூன்று உலகங்களையும் ஆள்பவன் நீ என்கிறார். ஆநிலை உலகம் என்பதற்கு அவ்வை.சு. துரைசாமிப் பிள்ளை உட்பட கோ உலகு என்று பொருள் எழுதியிருக்கிறார்கள். இது நேரடியாக கோவாகிய பசுவைக் குறிப்பதுபோல தோன்றினாலும், இவ்வாறாக பொருள் கொள்வதற்கு இச்செய்யுளில் வாய்ப்பு இல்லை. பசுதரக் கூடிய பால், அப்பாலின் வெண்மை என்கிற கருத்துறவின் அடிப்படையில் வெள்ளுலகம் அல்லது வென்னிற உலகம் என்று பொருள் கொள்ள முடியும். பாதாளம், அதளம், விதளம் என சொல்லப்படுகிற கீழ்நிலை உலகம், இடைநிலை உலகம், மேல்நிலை உலகம் ஆகிய மூன்று உலகங்களையும் ஆள்பவன் நீ என பாண்டியனை அப்புலவர் புகழ்கின்றால் எனக் கொள்வதற்கு இடம் உண்ட. இச்செய்யுளில் வந்துள்ள ஆநிலை உலகம் என்பது மேல் நிலை உலகத்தை குறிக்கிறது. ஆன்றோராகிய உயர்ந்தோர் வாழும் ஆநிலை உலகம் மேல்நிலை உலகம் என விளக்குவது தகும். ஆன்றோர் ஆநிலை இவ்விரண்டிலும் உள்ள ஆ என்கிற முதல் சொல் வெள்ளை என்கிப பண்பை உணர்த்தும் மூலப் பெயர்ச்சொல்லாகும். ஆனிலை உலகம் - கோ உலகம் . நிலம் , வானம் , துறக்கம் என்னும் முப்புணர் அடுக்கில் துறக்கத் தின் மேலுள்ளது ஆனிலை உலகம் - கோடலகம் ( புறம் . 5 : 5 - 7 ) . ஆனிலைப் பள்ளி - ஆயர்சேரி , சுரத்திடைச் செல் வோர் , காய்ந்த மானின் தசையை மூங்கில் அரிசி , ஆனிலைப் பள்ளியின் - ஆயர் சேரியின் - தயிர் சேர்த்துச் சமைத்து வெள்ளிய நிணத்துடன் தேக் கிலையில் உண்ட னர் ( அகம் . 107 : 6 - 10 ) . ஆனினம்  ஆ என்கிற ஓரெழுத்து வெள்ளை என்கிற பொருளில் பழந்தமிழர் சமயப் பண்பாட்டு வடிவத்தில் ஆற்றலாக உணரப்பட்ட ஆவியை ஆதியில் குறித்தது.  ஞாயிற்றின் மிக்க கதிரால் தோன்றும் ஆவியின் பேய்த் தேரின் - அலைகளை நீர் என விலங்குகள் மயங்கி ஓடி அலையும் ( அகம் . 327 : 8 - 10 ) , ஆவியர் - ஆவி என்பானை முதல்வனாகக் கொண்டு தோன்றிய குடியினர் , - ஆவியர் குடியில் தோன்றிய நெடுவேளாவி பொதினி மலைப் பகுதியை ஆண் டான் ( அகம் . 1 : 3 , 4 ; 61 : 15 , 16 ) . மயிலுக்குப் போர்வை அளித்த பேகன் ஆவியர் குடியிற் பிறந்தவன்  என்பதையும் நினைவில் கொள்க. வரண்ட நிலத்தில் வெம்மையான சூரியன் பட்டு ஆவி நீர்பொல தெரிவது போலவே தலைவியிடம் கண்ணாடியாக தோன்றும் நீராவி போல தோன்றி மறைந்தது, என்கிற குறிப்பு காணப்படுகிறது.
ஆவி - 1 . நீர்ப்பொருள் ( திடப்பொருள்கள் மாறும் ஆவிதிலை ) , உருவம் காண்டற்குரிய சிறந்த கண்ணாடியில் எனதப் பெற்ற ஆவி - நீராவி - மெல்லமெல்லக் குறைவது - போலத் தலைவன் பிரிவைத் தாங்கும் என் ஆற்றல் குறைகின்றது எனத் தலைமகள் கூறுகின்றாள் ( காம் , ப : 1 - 15 ) .
வெம்மையான நிலத்தில் ஆலங்கட்டி மழை பெய்தபோது உண்டான ஆவி குறித்து அகநானூற்று செய்யுள் ஒன்று கூறுவதை வாசிக்க முடிகிறது. இவ்வாறு உணரப்பட்ட ஆவி என்கிற கருத்தாக்கம் வெள்ளை நிரத்தை உடைய யாவற்றையும் குறிக்க ஆ என்னும் ஓரெழுத்து போதுமானதாக இருந்தபோதிலும் புரிந்து கொள்வதற்கு வெவ்வேறுப் பொருட்களை வேறுபடுத்தி அறிவதற்கு ஆ வோடு பின்னொட்டுக்கள் பல சேர்க்கப்பட்டு ஆயர், ஆரியர், ஆன்றோர், ஆவுதீ, ஆனியப்பார்ப்பனர் ஆழி, ஆளை, ஆறு, போன்ற பல பெயர் தொடர்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஆநிலை உலகத்தோடு தொடர்புடைய ஆன்றோர் குறித்த சிறிது விளக்கம் வேண்டப்படுகிறது.
            ஆன்றோர்
ஆன்றோர் என்பதற்கு கணவன், துரவியர், தேவர், சான்றோர் ஆகிய பொருகளை சங்க இலக்கியத்திலிருந்து பெற முடிகிறது.
ஆய் அண்டிரனது பொதியின் மலையில் வாழும் மகளிரின் ஆன்றோர் ( கணவர் ) , விருந்தினர்க்கு முள்ளம் பன்றியின் ஊன் , சந்தனக் கட்டை , யானைக் கொம்பு ஆகிய மூன்றையும் புலித் தோலில் வைத்து வழங்குவர் ( புறம் . 374 : 10 - 15 ) . நீராடா நோன்புடைய ஆன்றோர் ( துறவியர் ) போன்று கானயானைகள் கவினழிந்து காணப் பட்டன ( அகம் . 123 : 1 - 4 ) . ஆன்றோர் ( தேவர் ) விண் ணுலகை அங்குள்ள அமிழ்தத்துடன் பெறுவதாயினும் தலைவியின் தோள் நலம் சிதையுமாறு அவளைப் பிரிந்து தலைவர் தங்க மாட்டார் எனத் தோழி கூறுகிறாள் ( அகம் . 213 : 17 - 19 ) . தம் நெஞ்சறிந்த தனை மறைத்துக் கூறுதல் ஆன்றோர்க்கு ( சான் றோர்க்கு ) இயல்பில்லை ( குறு . 184 : 1 ) . அன்பும் அரு ளும் பொருந்திய மனத்துடன் ஆன்றோர் செல்லும் வழியில் தலைவன் செல்லவில்லை என்று , வரை யாது காலம் நீட்டித்த தலைவனைப்பற்றித் தோழி கூறுகிறாள் ( நற் . 233 : 7 - 9 ) , ' தவம் செய்யுங்கால் வழுவும் அரசனைத் தாங்கி அவனை மீட்டுத் தல நெறிப்படுத்தி உயர் நிலை யுலகம் பெறச் செய்யும் ஆன்றோர் போல நீவிர் என் துன்பம் தீர்த்தல் வேண்டும் ' என்று மடலேறுகின்ற தலைவன் சான்றோரை வேண்டுகின்றான் (கலி. 139:34-17). மேலேக் காட்டப்பட்டவற்றுள் ஆன்றோர் அமுதத்தோடும் உயர்நிலை உலகத்தோடும் தொடரபுடையோர் என்கிற கருத்து இவ்வாய்வு பொருளுக்கு முதன்மையானது. இந்த ஆன்றோர் தங்களுடைய வளமான காலத்தில் ஆவுதீ அல்லது வேள்வி செய்து வெண்புகையை வெளியேற்றி விடுவதன் மூலம் ஆநிலை உலகத்துடனான தொடர்பை பேணுவதாக நம்புகின்றனர். இது குறித்து சிறிது விளக்கப்படுகிறது.
                                                                            ஆவுதீ
விவசாயத்தை அறிந்திருக்காத ஆரியர் தங்களிடம் உள்ள கால்நடை செல்வங்களை தீயீலிட்டு சுட்டு உண்டனர். இது உணவு பழக்கமாக மட்டுமில்லாமல் அவர்களிடம் ஒரு மதச் சடங்காக அமைந்திருக்கிறது. இன்று கால் நடைகளை தவிர்த்தாலும் உணவு பொருள்கள் பலவற்றை தீயிலிட்டு அந்த சடங்கை தொடர்கின்றனர். இதன் பழைய வடிவத்தை ஆவுதீ அருத்தல் என சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
குறித்த பருவத்தில் தலைவன் வாராமை யால் தலைவியின் அழகு கெடும் என்று கருதிய தோழி , அந்தணர் செய்யும் யாகத்திடத்து ஆவி புகை - போல நெட்டுயிர்ப்புக் கொண்டாள் ( கலி . 36 : 24 - 36 ) . வையையில் நீராடிய மகளிர் அகிலின் ஆவி கொண்டு ஈரம் புலர்த்தினர் ( பரி . 10 : 72 ) , திசை யெங்கும் பரந்துள்ள குன்றுகளில் மேலிய முருகன் , உலகத்தார் பலவிடத்தும் செய்யும் பூசைக்கண் எழும் அகிற்புகையை ஆவியாகக் கொள்கின்றான் ( பரி , 17 : 19 , 10 ) . வையையில் நீராடச் செல்வோர் மென்மை வாய்த்த ஆவியை - புகைப்பொருனை - எடுத்துச் செல்லல் மரபு (பரி. தி.2: 12), வெண்புகையால் உருவாகும் வெண் படளத்தை ஆநிலை உலகமாக நமது புரிதலுக்காக காட்சிப்படுத்த முடியும். இத்தகைய வேள்வி செய்வோரை ஆனியப் பார்ப்பனமாக்கள் என புறநானூறு சுட்டுகிறது. மழையில்லாத காலத்தில் வானத்தில் தோன்றும் வெண்படளக் காட்சியை ஆனிய என பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது. இதுதான் ஆநிலை உலகமாகவும் பாற்கடலாகவும் ஆரியப் பண்பாட்டில் விளக்கப்படுகிறது. இத்தகைய ஆநிலை உலகத்தை சார்ந்த ஆன்றோராகிய தேவர்கள் அமுதத்தை யாருக்கும் தராமல் உண்டனர். இது பஞ்சகாலத்து உணவு என்று மேலே விளக்கப்பட்டது. இந்திரலோகத்து அமுதமே ஆனாலும் தனியாக உண்ணும் பழக்கமில்லை என்கிறது புறநானூறு [187] திராவிட, அவைதீக, மற்றும் புத்தப் பண்பாட்டில் உருவாக்கி வளர்த்தெடுக்கப்பட்டுள்ள இக்கருத்தாக்கத்திற்கு மணிமேகலைக் காப்பியத்தில் சொல்லப்படுகிற அமுதசுரபி மட்டுமே நேரடி சான்றாக உள்ளது. மேலேக்காட்டப்பட்டுள்ள புறணானூற்றுச் செய்யுள் தனித்துண்ணுதல்-பகிர்ந்துண்ணுதல்,  அஞ்சவேண்டியவற்றிற்கு அஞ்சாமலிருத்தல்-அஞ்சவேண்டியவற்றிற்கு அஞ்சுதல், சோம்பியிருத்தல்-சோர்வில்லாமல் உழைத்தல், பழிப் பாவங்கள் செய்து உலகையும் பெறுதல்-புகழுக்காக மட்டுமே உயிரை கொடுத்தல், தனக்காக முயற்சி செய்தல்-பிறருக்காக முயற்சி செய்தல் என இருமையெதிர்வுகளாக பார்ப்பன-திராவிட, வைதீக-ஆவைதீக செயல்கள் விளக்குவதாக புரிந்துக் கொள்ளமுடிகிறது. இச்செய்யுளை எழுதியவர் கடலுள் மாய்ந்த இளம்பெரும் வழுதி என்கிற பெயரும் நமது ஆய்வுப் பொருளை முன்னகர்த்துவதற்கு பயன்படக் கூடிய ஒன்று. தேவெந்திரனோடு நேரடியாக போரிட்டு அவனை வென்ற பாண்டியன் ஒருவனை கேள்விப்படுகிறோம், வடிவம்பலப் பாண்டியன் என்று இப்பாண்டியனை குறிக்கின்றனர்.
                                                          கடலும் பாண்டியனும்
பாண்டியன் ஒருவன் கடலை காலால் உதைத்ததாலும், வாளால் எரிந்ததாலும் கடல் உள்வாங்கி பின்னுக்குச் சென்றது. காலம் வரும்வரை கோபத்தோடு இருந்த கடல் பிறகு சீற்றத்தோடு வந்து அவனது நாட்டையும் அழித்தது. என்று சிலப்பதிகாரமும், மதுரைக் காஞ்சியும் கலித்தொகையும் கூறுகின்றன. இதன் காரணமாக இமயம் வரை உள்ள பகுதியை கைப்பற்றி பாண்டியர்கள் ஆண்டனர் என்கின்றன இன்னூல்கள். [கலி,104] குமரிக்கு தெற்கே பாண்டியநாடு இருந்தது. [புறம்,6] பகுறுழியாற்றோடு அப்பாண்டியர்களும் பலர் அழிந்தனர். [புறம்,9] பலமலைத் தொடரோடு பகுறுழி ஆற்றுடன் குமரிக் கண்டத்தை கடல் கொண்டுப் போய்விட்டது. [சில,காடுகாண்] இவ்வாறு கடலால் அழிக்கப்பட்டோர் தென்புலத்தாராக சுட்டப்படுகின்றனர். தென்புலத்தாருக்கு கடனாற்ற புதல்வர் பெற வேண்டியப் பெண்கள் போரின் போது பாதுகாக்கப்பட்டனர். [புறம்,9] இப்பாடலில் சுட்டப் பெறுகிற கடன் என்பது முன்னோர் வழிபாட்டோடு தொடர்புடையது. தென்புலத்தார் என்போர் முன்னோர். என்னால முடிகிறது மூத்தோர் மரபில் வந்த இந்த ஆட்சி என பாண்டியன் நெடுஞ்செழியன் சொல்லுகிறான். [சில,வழக்குரை,] இத்தென் புலத்தாருள் ஒருவன் கடலுள் மாய்ந்த இளம்பெரும் வழுதி ஆவான். மேலும் கடலுள் மாய்ந்த இளம்பெரும்வழுதி என்கிற பெயரும், இவர் பாடலில் உள்ள கருத்தும் தேவெந்திர மரபோடு அவருக்கு இருந்த முரண்பாட்டை காட்டுகிறது. இந்த வகையில் இது ஆபுதிரனின் வரலாற்றோடு ஒத்துப் போகிறது.
                                                கடலுள்மாய்ந்த ஆபுத்திரனும் இந்திரனும்
ஆபுத்திரன் பாண்டிய நாட்டின் தலைநகரமான தக்கன மதுரை என்று சொல்லப்படுகிற தென் மதுரையில் நாடுவலம் குறைந்து மக்கள் பசியில் வடியபோது வலம் குறையாத ஓட்டிலிருந்து வாங்குவோர் கைவலிக்கவலிக்க உணவை அளித்துக் கொண்டிருந்தான். பழுத்தமரத்தை சுற்றும் பறவைகள் போல மனிதர்கள் மரங்கள் ஆபுத்திரனை சூழ்ந்திருந்தன. இதனால் மகிழ்ச்சியோடு அறத்தை தொடர்ந்து செய்து கொண்டிருந்தான். இந்த பேரறத்தினால் இந்திரனின் இருக்கை ஆட்டம் கண்டது. அதனால் இந்திரன் வயதான பிராமணர் போல கூன் முதுகோட கைய்யில் கோளையெடுத்து ஊன்றிய படி வந்து ஆபுத்திரனே நான் இந்திரன் வந்திருக்கிறேன். எதற்காக இவ்வறத்தை நீ செய்து கொண்டிருக்கிறாய் உனது அறத்தினால் பெரும்பயன் விளைந்திருக்கிறது. உனக்கு யாதுவேண்டும். எனக் கேட்ட போது ஆபுத்திரன் இந்திரனின் பதட்டத்தை பார்த்து விலாயெலும்பு ஒடியும் போல சிறித்தான். இம்மக்களின் பசியைப் போக்கி அவர்களின் முகத்தில் உண்டாகும் மகிழ்ச்சியை பார்த்து நான் இன்பமாக இருக்கிறேன். எனக்கு எதுவும் வேண்டாம். இம்மக்களுக்கு இந்திரலோகத்து அமுதமும் அரம்பயர் போன்ற பெண்களோ, அடிமை ஆட்களோ உனது பொன்னுலகில் இருக்கும் வசதிகள் எதுவும் வேண்டாம். உணவு உண்பதற்கு நாட்டில் மழை வேண்டும் என்றான். நூறு வேள்விகள் செய்வதன் மூலமே இந்திரப் பதவி கிடைக்கும். ஒருவர் செய்யும் பேரறத்தினாலும் இந்திரப் பதவியை பெறமுடியும். அதனால் ஒருவரும் நாட்டில் அறம் செய்யாமல் பதவியிலிருக்கும் இந்திரன் பார்த்துக் கொள்வான். ஆபுத்திரன் செய்த அறத்தைக் கண்டு பயந்துபோய் இந்திரன் வந்தான். ஆபுத்திரன் சிறிப்பு இந்திரனை அவமானப் படுத்தியதனாலும் இவனை நாட்டை விட்டே விரட்ட வேண்டும் என நினத்த இந்திரன் நாட்டில் பெருமழையை பெய்யச் செய்தான். இதனால் பாண்டிய நாட்டில் பஞ்சம் நீங்கியதனால் இனி இங்கு தனக்கு வேலையில்லை என நினைத்து இருந்தபோது சாவக நாட்டில் பஞ்சம் இருப்பதை அறிந்து வணிகர்கள் செல்லும் கப்பலில் ஏறி  சென்று கொண்டிருந்தபோது அக்கப்பல் சிறிது நேரம் மணிப்பல்லவத்தில் நின்றது. இது தான் கடைசியில் இறங்க வேண்டிய இடம் என்று எண்ணி ஆபுத்திரன் இறங்கி பார்த்த போது அங்கு மக்கள் நட மாட்டம் எதுவுமில்லை. இதை அறிந்த அவன் தவராக இறங்கி விட்டதை கண்டுகொண்டு மீண்டும் கப்பலில் ஏறிச் செல்ல வந்து பார்த்த போது அங்கு கப்பல் கிளம்பி விட்டது. இதனால் மனம் வருந்தி அச்சையப் பாத்திரத்தை கோமுகிப் பொய்கையில் வீசி விட்டு கடலால் சூழப்பட்ட மணிப்பல்லவத் தீவில் வடக்கிருந்து உயிர்விட்டான். என்று மணிமேகலை [14.ஆம் காதை] கூறுகிறது. இந்திரனோடு பகைமை கொண்டு இளம்பெரும்வழிதி கடலுள் மாய்ந்தது போல ஆபுத்திரனும் இந்திரனோடு பகைமைக் கொண்டு கடலால் சூழப்பட்ட மணிப்பல்லவத் தீவில் உயிர்விட்டான். ஆபுத்திரனின் இவ்வரலாற்றை பாத்திர வரலாற்றோடு சேர்த்து அறவண அடிகள் மணிமேகலைக்கு சொல்லுகிறார். மழைப் பொய்த்து விட்டதால் காவிரியும் வற்றி விட்டது. இதனால் சோழ நாட்டில் நிலவிய கடும் பஞ்சத்தால் ஏற்பட்ட கொடும் பசியைப் போக்க இவ்வாறு முழு விபரத்தையும் அறிந்த மணிமேகலை அப்பாத்திரத்தை எடுத்துக் கொண்டு உணவு சேகரிக்க பூம்புகார் நகரத் தெருக்களுக்குள் நுழைந்தாள்.
                                     பிக்குணிக் கோலத்து மணிமேகலையை பரிவோடு பார்த்த மக்கள்
தாய் மாதவியையும் சுதமதியையும் வணங்கி விட்டு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு பூம்புகார் தெருவில் நடந்த மணிமேகலையை கண்ட மக்கள் ஒரு பைத்தியக்காரனை பார்ப்பது போல பரிவோடு பார்த்தனர். பறக்கும் தேர்ப்படையை தனக்கு தானே செய்து வைத்துக் கொண்டிருக்கும் கோசாம்பி நகரத்தை உடைய வத்த வநாட்டு அரசன் உதயனனை உஞ்சை நாட்டு அரசன் பிரச்சோதனன் சிறை பிடித்து பிறகு உதயனனை விடுவித்தான். அப்போது மாறு வேடம் போட்டுக் கொண்டு பைத்தியக்காரனை போல ஆராவாரம் செய்த பார்ப்பனான யூகியை மக்கள் ஒன்று கூடி பரிவோடு பார்த்தது போல மணிமேகலையின் பிக்குணி கோலத்தையும் அவ்வாறே இரக்கத்தோடு பார்த்தனர். அரிசுணன் விராட நாட்டிற்கு சென்ற போது அவனுடைய அழகையும் விரத்தையும் மக்கள் ஒன்றுகூடி பெரும் வியப்பாக பார்த்தது போலவே மலர்பரிக்க மலர்வணத்திற்கு சென்ற மணிமேகலையை பூம்புகார் மக்கள் ஒன்றுகூடி பார்த்தனர். மணிமேகலையின் பேரழகைக் கண்டு வியந்த மக்கள் இவளை பிக்குணியாக்க துணிந்த மாதவியை  அவரவர் மனதுக்குள்ளேயே ஏசினர் என்று இக்காப்பியத்தின் மூன்றாம் காதையிலும்  சாத்தனார் எழுதுகிறார். 
கற்பொழுக்கத்தில் சிறந்து விளங்கும் பெண் ஒருவரிடமிருந்து முதல்முதலாக உணவைப் பெறுவதன் மூலம் பாத்திரம் வலம் குறையாமல் சுரக்கும் என்பதனால் மணிமேகலை கற்பில் சிறந்த ஆதிரியை வீட்டிற்கு சென்று அவளுடைய கையால் உணவை பெற்றாள். கற்பொழுக்கத்துடன் மழையை தொடர்புப்படுத்தி பழந்தமிழ் இலக்கியங்கள் பல இடங்களில் குறிக்கின்றன. பசியும் பஞ்சமும் நீங்க மழைத் தேவையென்பதால் இது குறித்து சுருக்கமாக விளக்கப்படுகிறது.
                                                           கற்பும் மழையும்
கற்ப்புக்கும் மழைக்கும் இருக்கும் தொடர்பு குறித்து நவீன விஞ்ஞானம் விளக்காதது போலவே பழமையான அறிவுநெறி மரபிலும் விளக்கங்கள் எதுவும் இல்லை. ஆனால் கற்புடைய பெண் மழையை பெய்யச் சொன்னால் பெய்யும் என்கிற நம்பிக்கை தொடர்ந்து சொல்லப்பட்டுக் கொண்டே  இருக்கிறது.
அப்படியென்றால் கற்பு என்பதன் பொருள்தான் யாது பலரால் பலவாறு பதில் அளிக்கப்பட்டுள்ள போதிலும் நமது புரிதலுக்காக அவ்வடிப்படையான கேள்வியை கேட்டுக் கொள்வது அவசியமாக படுகிறது. பெரும்பாலோரால் ஒரு பெண் ஆணோடுக் கொள்ள வேண்டிய உடலுறவோடு மட்டும் கற்பு சுருக்கி விளக்கப்பட்டுள்ளது. ஒருப் பெண் ஒருவரோடு உறவில் இருக்கிற போது இன்னோராணை காதலனாக, கணவனாக நினைக்காமல் இருப்பது. இவ்வாறான பெண்ணின் மனம் சார்ந்த நடத்தையாக தமிழ் இலக்கண இலக்கிய மரபுகள் கற்பை வரையருக்கின்றன. பெண்-ஆண் சமத்துவ நிலையை கொள்கையாகவும், உரிமையாகவும் ஏற்றுக் கொண்டுள்ள எமக்கு இந்த விவாதம் தேவையற்றது தான். ஆனால் பழந்தமிழ் சமூகநெறிக் கற்றலையும் உரையாடலையும், நிகழ்த்தும் ஒருமாணவன் இதை கண்டுகொள்ளாமல் கடந்துபோனால் இந்த விடுபாடு தவரான புரிதலுக்கு இட்டுச் செல்லும் அது  கூடாது என்பதற்காக கற்பு சார்ந்த விவாதம் அமைக்கப்பட்டுள்ளது. மணிமேகலைக் காப்பியத்தில் ஆதிரையும்,சிலப்பதிகாரத்தில் கண்ணகியும், அகநானூற்றில் ஐயையும் இராம காதையில் சீதையும் மேற் கொண்ட கற்பொழுக்கம் உயர்வானதாக போற்றப் படுகிறது. இவர்கள் அனைவரும் த்ததம் கணவன்கள் உடன் இல்லாத போதும் அக்காலங்களை தனித்தே கடந்தவர்கள் என்பது மட்டுமல்ல கணவன்களை நினைத்து கொண்டே அவர்களின் வருகைக்காக காத்துக் கிடந்தவர்கள் மனத் திண்மையை பரிசோதிக்கும் இச்சூழமைவின் வழி இவர்கள்  உயர்ந்த கற்பிற்குரியவர்களாக ஆக்கப்பட்டனர்.  கணவன் தொழில் அல்லது பிறக் காரணங்களால் பிரிந்து சென்ற போதிலும் மனைவி என்கிற நிலையிலிருந்து ஒருப் பெண் மாறாமல் அவ்வாறே அக்குடும்ப உறவில் நீடிக்கிறாள் என்றால் கணவன் வைத்திருக்கும் சொத்திற்கும், அல்லது கணவன் குடும்பம் வைத்திருக்கும் சொத்திற்கும் அங்கத்தினவராக அப்பெண் நீடிக்கிறாள். அவ்வாறு தமியளாக நீடிக்கும் காலத்தில் மூத்தோரை வழிபடுதல், துறவிகளை போற்றுதல், அந்தணரை காத்தல், அறவோருக்களித்தல் போன்ற கடன்களை இயல்பாக செய்ய இயலாமைக்கும் வருந்திருப்பர்.  மேற்குறித்த நால்வரை போற்றுவது புத்த, சமண நெறிநின்ற இல்லறத்தாருக்குரிய கடமையாகும். இவ்வாறு பேணும் இவர்களை சாவகநோம்பிகள் என்பார்கள். கண்ணகியும் கூட இவ்வாறான வருத்தத்தை வெளியிடுவதை சிலப்பதிகாரத்தில் வாசிக்க முடிகிறது. இங்கு அச்சையப் பாத்திரத்தில் அமுதிடும் ஆதிரியை குறித்து சுருக்கமாக விளக்குவது பயன்தரும்.
பூம்புகாரின் பெருவணிகர்களுள் ஒருவனான சாதுவனின் மனைவியாவார். சாதுவன் தன் மனைவியை விட்டுவிட்டு கணிகை ஒருத்தியின் பின்னால் சென்று தன் பொருளை எல்லாம் தொலைத்து விட்டு வட்டும் சூதும் ஆடிவந்தான். கணிகையின் வீட்டில் தங்கியிருந்த அவனை பெரியப்பெரிய செல்வெந்தர்களின் வருகையை காரணம்காட்டி அவனை வெளியேற்றிவிட செய்வது அறியாத சாதுவன் மீண்டும் வணிகம் செய்ய கப்பலில் ஏறி புறப்பட்டான். அக்கப்பல் ஒரு புயலில் சிக்கி மலை ஒன்றின் மீது மோதி உடைந்து விட்டது. அக்கப்பலிலிருந்த சாதுவனும் இறந்துவிட்டதாக பூம்புகாருக்கு தகவல் வந்தது. இதனை அறிந்த அவன் மனைவி ஆதிரியை அந்நகரிலிருந்த சான்றோரிடம் தான் தீப் புகப் போவதை சொல்லி தனக்கு ஒரு ஈமகுழியை ஏற்பாடு செய்து தரக் கேட்டுக் கொண்டாள். அதன் படி ஏற்பாடு செய்யப்பட்டது. புதுப் புடவையும் பூக்களையும் சூடிக் கொண்டு தீப் பற்றிய விரகின் மீது படத்துக் கொண்டாள். அப்போது தீ அவளை ஒன்றும் செய்யவில்லை. தீக் கூட என் உயிரைப் பரிக்காமலும் கை விட்டுவிட்டதே என்று கண்ணீர்மல்க கதரினாள், அந்த நேரத்தில் அழாதே உன் கணவன் சாதுவன் சாகவில்லை அவன் பெரும் பொருளோடு திரும்பி வருவான் என்று வானத்திலிருந்து அசிரிரி சொல்லியது. அதைக் கேட்ட ஆதிரியை என் கண்மணி திரும்பி வருவானா என்கிற மகிழ்ச்சியில் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். சொன்னது போலவே சாதுவன் சந்தரத்ததன்  கப்பலில் பெரும் பொருளோடு வீட்டிற்கு வந்தான்.  அவள் கற்போடு இருந்ததனால் தான் தீ ஆதிரியையை சுடவில்லை என்பது கருத்து. கணவனோடு சேர்ந்து அறவோர்க்கு அளிக்க வேண்டும் என்பது பொதுவிதி. இதன் படி பூம்புகாரில் தன் கணவன் சாதுவனோடு சேர்ந்து இத்தகைய அறப் பணியை ஆதிரியை செய்து வந்தாள். கற்பரசியான ஆதிரியை சொன்னால் மழையும் பெய்யும் என்பதனால் என்பதனால் மணிமேகலையும் புணையா ஓவியம் போல் ஆதிரியை வீடின்முன் நின்றாள். அதனை கண்ட ஆதிரியை மகிழ்ந்து வரவேற்று அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த கணவனையும் எழுப்பிச் சொல்லிவிட்டு அப்பாத்திரத்தில் பொருள்களை இட்டு மணிமேகலையை வணங்கி வாழ்த்தி அனுப்பினாள். ஒருவர் கற்போடிருப்பதனால் தன்வீட்டிலிருக்கும் பொருள் வலத்தைக் கொண்டு அறவோர்க்கு உதவமுடியும் என்பதை தவிர இக்கதையிலிருந்து கற்புக்கும் மழைக்கும் இருக்கும் உறவை வெளிப்படையாக அறிய முடியவில்லை. அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த கணவனை எழுப்பி சொன்னாள். என்கிற எடுத்துரைப்பை வைத்துக் கொண்டு பார்த்தால் இவ்வதிகாலை என்பது வெள்ளிமீன் தெரியும் நேரம்.  வெள்ளிமீனை போல கற்புடைய மகளீர் அதிகாலையில் எழுந்து தங்களுடைய இல்லறக் கடமைகளை செய்கின்றனர். மேலும் கற்புடைய மகளீரை வடமீனோடு உருவகப்படுத்தும் மரபும் தமிழில் காணப்படுகிறது. இது குறித்து சுருக்கமாக விளக்குவது இன்றியமையாத்தாகிறது.
                                                                 கற்பும் வடமீனும்
1         போதில்ஆர் திருவினாள் புகழுடை வடிவென்றும்
2         தீதிலா வடமீனின் திறம்இவள் திறம்என்றும்
3         மாதரார் தொழுதுஏத்த வயங்கிய பெருங்குணத்துக்
என்று கண்ணகி வடமீனோடு இனைத்து சுட்டப்படுகிறாள். தீதிலா வடமீனின் திறம் இவள் திறம்  (சிலப்.மங்கல-27)
என்றும்,
வாத்துச் சாலி யொருமீன் தகையாளை  (சிலப்.மங்-51-1)
என்றும்,
அருந்ததி அனைய கற்பின்  (ஐங்-442)
என்றும்,
வடமீன்போல் தொழுதேத்த வயங்கிய கற்பினாள் (கலி.2-21)
என்றும்,
வடமீன் புரையும் மடமொழி யரிவை  (புறம் 122.8.6)
என்றும்,
1         வடமீன் கற்பின் மனையுறை மகளிர் (சிலப் 9: 229) என்றும் இச்சிறு மீனைச் சான்றோர் பலரும் கற்புடைமகளிர்க்கு உவமை எடுத்தோதுதல் அறிக. அருந்ததிமீன் உருவிற் சிறிதாகலின் சிறுமீன் என்றார். ஆலத்தின் உடுக்கள் காட்டி அருந்ததி காட்டுவார் போல் (கைவல்யம்) என்பதனாலும், தூலாருந்ததி நியாயம் என்பதனாலும் அது சிறுமீன் ஆதலறிக. புரையும்: உவம உருபு. இந்த உருவகமும் பொதுவாக பெண் உடல் இயற்கையோடு பதிலிடப்படும் பல்வகையான வடிவங்களுள் ஒன்றாக பார்க்க முடிகிறது. இன்பம்-துன்பம் இவையிரண்டையும் அளிக்கும் ஆற்றல் இயற்கையில் இருப்பதை போல பெண்ணுடலிலும் உண்டு என்பதை மாந்த இயல் பொருண்மையின் பின்புலத்தில் வைத்து விவரிப்பது பழஞ்சமூக மெயியல் நடைமுறை சார்ந்த ஒன்றாகும். ஞாயிற்று மண்டிளக் கொள்கையை முதன்மையாக உடைய பழந்தமிழ் மெயியல் கருத்தாடலில் வரும் வடமீன் என்னும் இத்தொடர் வடக்கிற்கென்று தனியாக ஒருமீன் உண்டு என்கிற பொருளில் ஆளப்படவில்லை. வெள்ளிமீனானது வடக்கில் தோன்றினால் அதுவடமீன் தெற்கே அல்லது பிற திசைகளில் தோன்றினால் அவ்வத்திசைக்குரியதாக ஒரு தற்காலிக சுட்டாக பயன்படுத்தப்படலாம். அப்படித்தான் இந்த வடமீன் என்கிற தொடரை புரிந்து கொள்ளமுடிகிறது. கற்புடையபெண் வளத்தை வழங்கும் ஆற்றள் கொண்டவள். அதுபோல வெள்ளிக் கோள் வடத்திசையில் தோன்றும் போதுதான் மழைவளம் பெருகும் என்பதால் வெள்ளிக் கோளின் வடத்திசை தோற்றத்தை வடமீன் எனச் சுட்டினர். எழுமீன் என்பது ஏழு முனிவர்களின் கற்புடைய எழு மனைவிகளாகவும், வானில் தோன்றும் அறுமீன் என்பது ஆறு கார்த்திகைப் பெண்களாகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளது. பெண்களின் ஆச்சேபனைக் காளங்களை எட்டாம் நாள் திங்களாக உருவகம் செய்யப்படுகிறது. பெண்ணின் ஒலிவீசும் நெற்றியில் பசலைப் படர்வதை நிலவை பாம்பு விழிங்கி விட்டது போன்றதாக சங்கப் புலவர்கள் எடுத்துரைக்கின்றனர். நிலவை பாம்பு விழிங்கி விட்டதான இந்த வானியல் நிகழ்வு சந்திரக் கிரகனத்தைக் குறிப்பதாகும். கற்புடைய மனைவி-கணவனின்
2         காமாந்த காலத்தை நிலவும் உரோகினி நச்சதிரமும் ஒருநேர்க் கோட்டில் சந்திக்கும் வானியல் நிகழ்வோடு தொடர்புப்படுத்தி எடத்துரைக்கின்றனர். இச்சமூகத்தில் திருமண உறவு என்பது கூட கற்புடைய பெண்ணின் வளமைப் பெருக்கத்திற்கான ஓரறிந்தேற்பாகும். பாலிகை என சொல்லப்படக் கூடிய பலவகையான தானியங்களை உடைய மண்பாண்டத்திற்குள் கைவிட்டு அனைத்து தானியங்களையும் மணப் பெண் தொடுவதன் வழி பிள்ளைப் பேறும் உணவு உற்பத்தியும் ஒன்றோடொன்று பதிலிடப்படுகிறது. வளம் மிக்க வளத்தைத் தரக் கூடிய நிலங்கள் நீர்நிலைகள் யாவும் கற்புடைய பெண்ணாக பதிலீடு செய்யும் பெரும்போக்கு நம் மரபில் நீடித்திருக்கிறது.  கற்புடைய மகளீர் மட்டும் பிள்ளைப் பெறவும் குடும்பத்தைப் பேணவும் தகுதியுடையவர். இயற்கையான நீர் நிலைகள் வளம் சுரந்து மக்களுக்கு பசி உள்ளிட்ட வற்றை போக்குவதற்கு காரணமாக இருப்பது போல பசிக்கும் குழந்தையின் முகம் கண்டு சுரக்கும் முலையை ஊட்டும் கற்புடைய பெண்ணும் ஒன்றோடொன்று பதிலீடு செய்யப் பெறுகின்றனர். இத்தகைய ஆற்றலை உடையப் பெண் குடும்ப உறவில் நீடிப்பதனால் கற்புடையவராகிறார். பிடவூர் தித்தனின் கற்புடைய மகளான ஐயை இருப்பதனாலே அவ்வூரில் நன்றாக மழைப் பெய்கிறது. என்று அகநானூறு [அகம்4]  கூறுகிறது. அரசர்களின் மனைவிகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் பொதுவாக சோழநாட்டு பெண்களே கற்புக்கரசிகளாக இருப்பதை தமிழ் இலக்கியங்கள் சுட்டுகின்றன. பதியேழு அறியா பழங்குடிகள் வாழ்ந்த, நீர்வேளியால் சூழப்பட்டதுவுமான பூம்புகார் நகரத்தில் வாழ்க்கைப்பட்டு வாழ்ந்த வணிக குலமகளீர் கற்பு தெய்வங்களாகவும் புகழப்படுவது குறிப்பிடத்தக்கது. அல்லவை செய்யா அரசர்களும், அறவோரும், சான்றோரும் கற்புடைய மகளீரும் பூம்புகாரின் பெருமைகளாக இருந்தார்கள் என்றால் அந்நாட்டில் மிகுதியாக இருந்த நீர்வளம் அதற்கு முதன்மையான காரணமாகும். இவ்வாறான கற்புக்கரசிகளுள் ஒருவர் தான் ஆதிரியை ஆவார். இத்தகைய கற்பு கடன்பூண்ட ஆதிரியை கையால் முதன்முதலில் உணவை பெற்றால் அல்ல அல்ல குறையாமல் அச்சையப் பாத்திரம் அமுதை சுரந்துகொண்டேயிருக்கும் என்று காயச்சண்டிகை மணிமேகலைக்கு எடுத்துரைத்ததன் மூலம் மணிமேகலையும் ஆதிரியை இடம் முதலில் அமுதை பெற்றாள். சோழநாட்டில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது தான் மணிமேகலை மக்களின் பசியை ஆற்றுவதற்கு அப்பாத்திரத்தை கையில் எடுத்தாள். இனி சோழ நாட்டில் ஏற்பட்ட பஞ்சத்தை விளக்குவது தகும்.
                                                                   சோழநாட்டில் பஞ்சம்
பாண்டிய நாட்டில் ஏற்பட்டப் பஞ்சம் போலவே சோழ நாட்டிலும் மழையின்மை காரணமாக பஞ்சம் ஒன்று எற்பட்டது
னையே நிரைத் தார் அண்ணல்!இக்கால கட்டத்தில் தான் மணிமேகளை அமுதசுரபியை எடுத்துக் கொண்டு இம்மக்களின் பசியை பொக்கினாள் என்று முன்னர் குறிக்கப்பட்டுள்ளது. நீரில்லாமல்
வரண்டக் காவிரியில் திரிந்து இருக்கும் மணலைபோல தலைவியின் கூந்தல் இருந்தது என்கிற உவமை அகநானூறு உள்ளிட்ட அகப் பாடல்களில் வருகிறது. பெரும்பாலும்  இது பாலைத் திணைப் பாடல்களில் வருகிறது. வெள்ளிமீன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் சென்ற போதிலும் அரசனின் முயற்சியால் மக்கள் நலமோடும் வளமோடும் உள்ளனர் என்கிற செய்தியும் பட்டிணப் பாலை உள்ளிடப் பல பாக்களில் வருகிறது. இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து நோக்கும்போது சோழ நாட்டிலும் உண்டானப் பஞ்சத்தின் கொடுமையை உணரலாம். சக்கரவளகோட்டம் என சொல்லப்படுகிற சுடுகாட்டுக் கோட்டத்தில் உலக அறவி என்கிற அம்பளம் ஒன்று உள்ளது. இங்கு அனைவரும் செல்லுவதற்கான அருமையாக பகுக்கப்பட்ட வாசலும் உண்டு. இவ்வாசல் வழியாக பசித்தோரும், நோய் உற்றோரும் வந்து பெருங்கூட்டமாக தங்கியுள்ளனர் அழகிய கூந்தலை உடைய மணிமேகளையே எனது பன்னிரண்டு ஆண்டுகால ஆனைத்தீ என்னும் பெரும் பசிபிணியை உனது ஒருபிடிச் சோற்றால் தீர்த்தது போல நீ உலக அறவிக்குச் சென்று அங்குள்ள மக்களின் பசிப் பிணியை தீர்ப்பாயாக  என்று காயச்சண்டிகை மணிமேகலைக்கு சொன்னாள்.  இதைக் கேட்டதும் உலக அறவிக்கு சென்று அங்கிருந்த மக்களின் பசிப் பிணியை நீக்க ஆருயிர் மருந்தான உணவை வழங்கினாள் மணிமேகலை. இந்தப் பசி, பிணி பஞ்சகாலத்தில் எற்பட்டதாகும். இக்காலகட்டத்தில் ஆனைத்தீ என்னும் நோய் உருவானதை  ஒருத் தொன்மக் கதையாக  சொல்லப்படுகிறது. 
                                                       ஆனைத்தீ என்னும் பஞ்சகாலத்துநோய்
கபிலை நகரத்திற்கு பக்கத்தில் உள்ள கஞ்சனபுரத்திலிருந்து பொதிகைமலையை வழிபடுவதற்காக காயச்சண்டிகையும் அவளுடைய கணவனும் வந்தனர். அப்போது பொதிகைமலையின் அழகை வேடிக்கைப் பார்த்துக் கொண்டேச் சென்றபோது தேக்கிலையில் இருந்த நாவல்கனியை கவனிக்காமல் மிதித்துவிட்டாள் காயச்சண்டிகை. பன்னிரண்டாண்டுகளுக்கு ஒருமுறை அரிதாக கனீயும் அக்கனியை வைத்துவிட்டு சற்று தூரத்தில் உள்ள குலத்திற்கு சென்று குளித்துவிட்டு முக்கோள் முக்கரகத்தோடும் வந்த விரிசிக முனிவன் தான் உண்டு பசியாற்றுவதற்காக வைத்திருந்த நாவல்கனி காலால் தீண்டப்பட்டு விட்டதை அறிந்த பின் மீண்டும் இக்கனி எனக்கு கிடைக்க பன்னிரண்டாண்டுகளாகும் அதுவரை நீயும் தீரப் பசியோடு ஆனைத்தீ நோய்பீடித்து இருப்பாய் பூம்புகார் நகரத்திற்கு சென்று அச்சையப் பாத்திரத்திலிருந்து ஒருப் பிடி சோற்றை மணிமேகலை கையால் பெற்று உண்டப் பிறகு உனக்கு நோய் நீங்கும் என அம்முனிவன் கயச்சண்டிகையை சபித்தான். பிறகு அவலுடையக் கணவன் அவலை அழைத்துக் கொண்டு போய் பூம்புகாரில் விட்டுவிட்டு அவனும் பன்னிரண்டாண்டுகள் கழிந்தபிறகு வந்து காஞ்சனபுரத்திற்கு அழைத்துச் செல்வதாக சொல்லிச் சென்றான். என்கிறது அக்கதை. அந்தக் கதையில் வரும் பன்னிரண்டாண்டு, அத்தனை ஆண்டுகளாக நீடிக்கும் ஆனைத்தீ என்னும் பசியும் பெரும் பஞ்சகாலத்தோடு தொடர்புடையது மட்டுமன்றி சோழநாட்டில் நிலவிய பஞ்ச காலத்தில்தான் காயச்சண்டிகையும் பூம்புகாரில் இருந்தாள். இவற்றையெல்லாம் கவனத்தில் எடுத்துப் பார்க்கிறபோது இவ்வானைத்தீ நோயை பஞ்சகாலநோய் என குறிப்பிட முடிகிறது. இந்நோய் நாவல் பழத்தோடும் தொடர்பு செய்யப்பட்டுள்ளமையை விரிச்சீகமுனிவன் கதையிலிருந்து பெற முடிகிறது.தங்கள் தவப் பயனை நீட்டிக்கும் அருமருந்தாக நாவல் பழம் இருந்ததனை முனிவர்களும் அறிந்து அவ்வாறே பயன் கொண்டனர். இந்தியத் துணைக் கண்டத்திற்கு நாவலந்தீவு என்னும் பெயர் இப்பயன்பாடு காரணமாக வழங்கப்பட்டது.  
மேலும் சோழநாட்டோடு வணிகத் தொடர்புடைய சாவகத் தீவிலும் பஞ்சம் ஏற்பட்டது. அண்டவியல் மற்றும் புவி அமைப்பியல் சார்ந்த நிகழ்வுகளாக மழைப் பஞ்சமும் கடல்கோளும் ஏற்படக் கூடியன. புவித் தட்டமைப்புக் கோட்பாட்டின்படி தமிழகத்தின் தட்டும் சாவகத் தட்டும் ஒன்றோடு ஓன்று மிக நெருக்கமானவை. இதனோடு மணிமேகலைக் காப்பியக் கதையமைப்பின் படியும் சாவக நாட்டுப் பஞ்சம் விவரிக்கப்படுகிறது.
                                                           சாவக நாட்டுப் பஞ்சம்
பாண்டிய நாட்டில் ஏற்பட்ட பன்னிரண்டாண்டுகள் பஞ்சம் போல சாவக நாட்டிலும் ஏற்பட்ட பன்னிரண்டு ஆண்டுகாலப் பஞ்சத்தை புண்ணியராசன் என்கிற அரசன் பொக்கினான் என எடுத்துரைக்கிறது இக்காப்பியம். இந்நாடில் உள்ள செடிக் கொடி மரங்கள் , விலங்குகள் பறவைகள், மனிதர்கள் என அனைத்து உயிர்களும் மடிந்துக் கொண்டிருந்தன. தாங்கள் பெற்றக் குழந்தைகளையும் கவனிக்காமல் அவர்களுக்கு மனமிரங்கி உணவளிக்காமல், கிடைப்பதை தனியாக உண்ணும் நிலைக்கு தாய்மாற் தள்ளப்பட்டனர். பன்னிரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து இருந்த பஞ்சத்தினால் சாவக நாட்டில் இத்தகைய கொடுமை நிகழ்ந்தது. இவையனைத்தும் நீ இங்கு வருவதற்கு முன்னால்  நிலவிய சூழலாகும் உனது வருகைக்கு பிறகு இந்நாடு மழைவளம் மிகுதியாகி செழித்துக் காணப்படுகிறது. அரசே அண்ணலே நான் சொல்லும் இவ்வுண்மையை கேட்டு உணர்ந்துக் கொள்வாயாக, என்று மணிமேகலை புண்ணியராசனுக்கு சொன்னாள்.
எம் கோ வாழி! என் சொல் கேண்மதி
நும் கோன் உன்னைப் பெறுவதன் முன் நாள்  25-100
பன்னீராண்டு இப் பதி கெழு நல் நாடு
மன் உயிர் மடிய மழை வளம் கரந்து ஈங்கு
ஈன்றாள் குழவிக்கு இரங்காளாகி
தான் தனி தின்னும் தகைமையது ஆயது
காய் வெங் கோடையில் கார் தோன்றியதென
நீ தோன்றினையே நிரைத் தார் அண்ணல்!
சாவக நாட்டு அரசனான இப்புண்ணியராசன் முன் பிறவியில் ஆபுத்திரனாக தோன்றி தென்மதுரையில் பஞ்ச காலத்தில் அச்சையப் பாத்திரத்திலிருந்து உணவை அனைவருக்கும் அளித்து பசிப் போக்கிய அறவோன் என்பது இங்கு குறிக்கத்தகும். 
                                                       கடல்கோளுக்குமுந்தையநிலை
சாவக நாடு,பாண்டியநாடு, சோழநாடு ஆகிய மூன்று நாடுகளிலும் கடும்பஞ்சம் ஏற்பட்டது குறித்து இதுவரை விளக்கப்பட்டது. அண்டவெளியில் கோள்நிலை திரிவதனால் இப்பஞ்சம் ஏற்படுகிறது. குறிப்பாக வெள்ளிக் கோளை முதன்மையாக உடைய திரிபினால் பஞ்சம் ஏற்படுகிறது. மனிதனின்  பார்வையில் தான் இது திரிபே தவிர இயல்பாக பார்த்தால் இயற்கையான சுழர்ச்சி அல்லது மாற்றமாகும். சுருங்கி விரியும் தன்மைகொண்ட அண்டவெளியில் உள்ள மீன்களும் கோள்களும் அவ்வாறே சுருங்கவும் நிலைப் பாதையில் இயங்கவும், பிறகு விரியவும், பெருகவும் பெருக்கநிலையை தொடர்ந்து வெடித்துச் சிதரவும் தன்மை உடையது. இந்நிலைகளில் கோள்கள் சுருங்குதல் விரிந்து பெருகுதல் வெடித்தல் ஆகிய இருநிலைகளும் தீய நிகழ்வுகளாக மக்கள் நம்புகின்றனர். பிறக் கோள்களில் ஏற்படுகின்ற மாற்றம் சூரிய குடும்பத்தில் ஒன்றான புவிக் கோளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அரிதான இத்தகைய நிகழ்வுகள் பழகிப் போன வாழ்க்கையை மனிதர்களிடமிருந்து பிரித்து விடுவதனால்  ஒருவிதமான நெருக்கடியை மனிதர்கள் உணருகின்றனர். அண்டவியல் பவுதீக இயக்கத்திற்கும் மனித வாழ்க்கைக்கும் உள்ளத் தொடர்பை தங்கள் தவ வலிமையால் அறிய முயன்றோர் மெயியல்வாதிகளாக வடிவமைந்தனர். நாளடைவில் தாங்கள் உணர்ந்ததை விளக்குவது இவர்களுக்குரிய முக்கியக் கடமைகளாயின. இதனால் மனிதப் பண்பேற்றம் செய்யப்பட்ட இயற்கை நிகழ்வுகளையும் இயற்கைப் பண்பேற்றம் செய்யப்பட்ட மனித விழுமியங்களையும் பதிலிடப்பட்டு ஒருங்கிணைத்து மெயியல் வர்க்கத்தார் ஊர் ஊராகச் சென்று எடுத்துரைத்தனர். இதனால் நம்பிக்கை சார்ந்த பண்பாட்டு நிலையாக்கம் நடந்தது. தூயக் கற்புடையவர் சொன்னால் தூவும் மழை, இந்திரன் சாபத்தால் இல்லை மழை, கூந்தல்-மேகம், நெற்றி-எட்டாம்பிறை, நீர்ச்சுழி-கொப்புள், மேலும் நிலத் தெய்வம், நீர்த் தெய்வம் [போன்றவற்றை கண்டுகொள்க] இப்பதிலீட்டு உருவகங்கள் யாவும் இலக்கிய சம்பிரிதாய வரிகள் என்று நாம் நினைக்கலாம் ஆனால் பழங்காலத்தில் இலக்கியவாதிகள் யாவரும் மெயியல் வாதிகளாகவும், மெயியல் வாதிகள் இலக்கிய வாதிகளாகவும் இயங்கினர் என்கிற உண்மையை அறிவோருக்கு இந்த நினைப்பு தோன்றாமல் போகலாம். புத்த இலக்கியம், சமண இலக்கியம் என்று வகைமைப்படுத்தியோருக்கும் இது புரிந்திருக்க கூடும். பொதுவாக அனைத்து சமய மெயியல் குழுக்களுமே ஏதோ ஒரு வகையில் பவுதீக இயக்க விள்ளக்கங்களிலிருந்தே த்ததம் சிந்தனைகளை முன் வைக்கின்றனர். நிலம், நீர், தீ, காற்று என நான்கு அல்லது ஆகாயத்தோடு சேர்த்து ஐம்பூதங்களாக இயற்கைக் கூறுகள் அறியப்பட்டிருந்தது.  இத்தகைய ஐம்பூத வினைமுறைகளை அறிந்தோர் பழங்காலத்தில் பூதவாதிகள் எனப்பட்டனர்.
முன்பே குறிப்பிட்டதுபோல பூதவாத மெயியலை அடிப்படையாக கொண்டு அனைத்து சமயமெயியல் குழுக்களும் தங்களுடைய சிந்தனைகளை விளக்கினர். இதன் காரணமாக ஆதிபொருள்முதல் வாதமாக திகழக் கூடிய பூதவாதம் தனிப் பெரும் சமய அமைப்பு சார்ந்த மெயியலாக உருவாகவில்லை.
இறைமறுப்பு வாதிகளாக திகழும் சமண, புத்த, பூர்வமீமாம்சை சமய மெயியல்வாதிகள் இயற்கைத் தனிமங்களின் பவுதீகவியலை மனித நடத்தை மற்றும் கருத்துப் புலப்பாட்டோடிணைத்து உடலியல்=உளவியல் சிக்கல்களை விளக்கினர். இவ்வாறாக ஒன்றோடு ஒன்றை இணைத்து அல்லது ஒன்றின் மீது ஒன்றை படியவைத்து  தங்கள் விளக்கத்திற்காக உருவாக்கப்பட்ட தொடரமைப்புகள் மனித தன்னிலைகளாக இருக்கும் நான்களை அறிவதை நோக்கி சமூகத்தை உந்தியது. உவமை, உருவகம், ஆகுபெயர், படிமம் உள்ளுரை, இறைச்சி, மந்திரம், பிசி, நொடி என விஞ்ஞானப் பூர்வமான அழகியலாகவும் மற்றொரு நிலையில் விரிவடைந்தது. பொதுவாக மெயியல் வாதிகளை முனிவர் என்று சொல்லுவதுண்டு. முற்றும் உணர்ந்தோரே முனிவர் என்கிற தகுநிலைக்குரியவர். முற்றும் என்பதில் உள்ள முற்று ஆவது புலத்துறை முற்றுவதாகும். வானியல், புவியல், மாந்தவியல் உள்ளிட்ட பல புலங்களை உணர்ந்தோரே புலத்துறை முற்றியோர் ஆவர். புலத்துறை முற்றியக் கூடலூர்க் கிழார் என்கிற புலவரின் புறநானூற்று செய்யுலை [புறம்229.] வாசித்துணர்ந்தோர்க்கு இக்கருத்து புலப்படும். பதினெண்கீழ்க் கணக்கு, பதினெண்மேல்கணக்கு, [சங்க இலக்கியம்] ஐம்பெரும், ஐஞ்சிறுகாப்பியங்களை தமிழில் எழுதியுள்ள புலவர்கள் அனைவரும் மெயியல்வாதிகள் ஆவர்.  அகலிரும்விசும்பு, ஞாயிற்றுமண்டிளம் உள்ளிட்ட பல தொடர்கள்   சங்கச் செய்யுள்கள் உள்ளிட்ட பல பழந்தமிழ் இலக்கியங்களில் வருகின்றன. இயற்கையின் பவுதீக இயங்கியலை மனித இயங்கியலோடு படியவைத்து உருவகமாக்கும் இப்புலப்பாட்டு தொடர்களை கவிதைக்காக தற்செயலாக உருவாக்கப்பட்டதாக கருதமுடியாது. இந்தியத் துணைக் கண்டத்தை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட பழந்தமிழின் நெடுமரபை பின் தொடர்ந்து கற்கும் யாருக்கும் இத்தொடர்களை ஓரழகியல் வித்தையாக மட்டும் சுருக்கிப் பார்க்கதோன்றாது. அண்டவியல் புவியியல் குறித்த அறிதல் மாந்தவியல் விளக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டது போல தான் இப்போதும் நிகழ்கிறது.
2004, டிசம்பர் 26.ஆம்நாள் சாவா, சுமித்திரா, இந்தோநிசியா இலங்கை வழியாக தமிழகம் வரை வந்த சுனாமி என்னும் ஆழிப் பேரலை நாம் வாழும் காலத்தில் எதிர்கொண்ட கடல்கோளாகும். சாவா, இந்தோநிசியா, சப்பான் இலங்கையின் ஒரு பகுதி போன்ற வற்றில் இதன் தாக்கம் பெரியளவிலிருந்தது. தமிழகத்தில் கன்னியாகுமாரி, கடலூர்மாவட்டம் தேவனாம்பட்டிணம், சென்னை பட்டிணப்பாக்கம் போன்றவற்றில் உயிர் உடமைசெதம் இருந்தது. 2000.த்திலிருந்து 2004 வரை மழையின்மை காரணமாக ஆங்காங்கே கஞ்சித் தொட்டிகள் வைக்கும் அளவிற்கு பஞ்சம் ஏற்பட்டது. இக்காலக்கட்டத்தில் ஆங்காங்கே நிலநடுக்கமும் தமிழகம் உள்ளிட இந்தியத் துணைக் கண்டத்தில் உணரப்பட்டது. விவசாயிகளின் தற்கொலையும் நடந்தது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் மகாத்மா காந்தி தேசிய ஊரக நூறுநாற் வேளைத் திட்டம் 2004.இல் மத்தியில் ஆட்சிக்கு வந்த காங்கிரச் கூட்டணியால் நடை முறைப்படுத்தப்பட்டது. இதேபோலத்தான் பழங்காலத்திலும் கடல்கோள் வருவதற்காக மழையின்மையும் அதனால் பெரும் பஞ்சங்களும் ஏற்பட்டது. இத்தகைய பஞ்சகாலத்தில்தான் ஆபுத்திரனும், மணிமேகலையும் தோன்றி மக்கள் பசிப்போக்க கடனாற்றினர். இதுவரை பஞ்சகால நடைமுறைகள் குறித்து விளக்கப்பட்டது இனி கடல்கோள் குறித்து விளக்குவது பயன்தரக் கூடும்.
                                                          கடல்கோள்
பழந்தமிழகத்தில் வெவ்வேறு காலங்கலில் ஒன்றுக்கும் மேற்பட்ட கடலகோள்கள் நிகழ்ந்துள்ளன. இதனால் தென்மதுரை, கபாடபுரம், பூம்புகார் உள்ளிட்ட நகரங்கள் கடலுக்குள் மூழ்கிவிட்டன. இதன் காரணமாக பாண்டியரும் சோழரும் வட இந்தியாவை நோக்கி படைநடத்தி நிலங்களை கைப் பற்றினர். பழந்தமிழ் இலக்கியங்களில் இதற்கான சான்றுகள் உள்ளன. குமரிக்கு தெற்கிலிருந்த குமரி கண்டம் அல்லது இலெமோரிய கண்டம் இக்கடல்கோளால் அழிந்து விட்டது. பாண்டிய நாடாக அறியப்படும் தென்குமரி அழிவு நிகழ்ந்தது உண்மையென்றும் அப்படியொநிகழ்வு எதுவும் நடக்கவில்லை என்றும் ஆய்வு உலகில் இருவேறுக் கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன. இப்படியோர் அழிவு நிகழவில்லையென்றால் ஒன்றுக்குமேற்பட்ட புலவர்கள் ஏன் இந்நிகழ்வை குறிக்கவேண்டும். 1970.களுக்கு பிறகு பிறந்தக் குழந்தைகள் 1965.இல்  கடல்சீற்றம் நிகழவில்லை அதில் பாம்பன் பகுதி கடலுக்குள் மூழ்கவில்லை என்று சொல்லுவதற்கு ஒப்பானதாக எதிகருத்தாளர்களை கருதவேண்டும்.
ஆபுத்திரன் தென்மதுரையிலிருந்து அங்கிருந்த மக்களின் பசியை போக்கியதாக மணிமேகலைக் காப்பியம் எடுத்துரைக்கிறது. இனி இதுகுறித்து சிறிது விளக்குவது தகும்.
                                               கடல்கொண்ட தென்மதுரை
பாண்டியர்களின் பழைய தலைநகரம் தென்மதுரை. இது குமரிக்கு தெற்க்கிலிருந்தது. கடலற்ற குமரியின் தென்னிலப் பரப்பில் நாற்பத்தொன்பதுநாடுகள் இருந்ததாக சிலப்பதிகார உரையாசிரியர் அடியாருக்கு நல்லார் எழுதுகிறார். அவற்றுள் ஏழு தென்பாண்டிநாடு இருந்தது. நாட்டு எண்ணிக்கை சார்ந்து கருத்து மாறுபாடுகள் கொள்வதற்கு வாய்ப்பிருந்தாலும் தென்னிலப் பரப்பை பல புலவர்கள் பாண்டியர்களோடு இணைத்து விவரிப்பதை மறுப்பதற்கு இல்லை. மணிமேகலைக் காப்பியத்தில் வரும் தென்மதுரை இறையனார் களவியல் உரையில் பாண்டியர் நிருவிய தமிழ் முச்சங்கங்களுள் முதல் சங்கம் தென் மதுரையில் நடைப் பெற்றதாக கூறுகிறது. இலங்கையிலும் கூட மதுரை என்கிற நகரம் உள்ளது. கடல் தோன்றிய போதும் இலங்கை குமரியின் தெற்கில் தான் இருக்கிறது. கடல்கோளுக்கு முன் இலங்கையும் ஒரெ நிலப்பரப்பாக இருந்தது. இப்போதுள்ள இலங்கையை பாண்டியர்களும் ஆண்டனர். பாண்டியரை பாண்டு என்று சிங்களமொழி சாசனங்களிலும் கதைகளிலும் கூறப்படுகிறது. பாண்டிய அரசனின் இந்திர இருக்கையை அதன் அதிர்வை பாண்டுக் கம்பளம் என்று மணிமேகலைக் காப்பியம் [காதை14.] குறிப்பிடுகிறது. இரண்டாம் தமிழ்ச் சங்கம் இருந்த கபாடபுரமும் கடலுள் மூழ்கியது. இதன் பிறகு தற்போதுள்ள மதுரை நகரம் உருவாக்கப்பட்டு மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடத்தப்பட்டது என்கிறது களவியல் உரை. தென் மதுரை, கபாடபுரம், பூம்புகார் ஆகிய மூன்று நகரங்கள் அழிந்திருப்பதை கொண்டு தமிழகத்தில் மூன்று கடல்கோள் நிகழ்ந்துள்ளது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
                கடல் வெள்ளம் குறித்த வடமொழிக் கதைகள்
குமரிக் கண்டம் அல்லது தென்னாடு கடலுள் மூழ்கியது குறித்து புறநானூறு, [6., 9.] இறையனார் களவியல் உரை, சிலப்பதிகாரம் [காதை10.], கலித்தொகை [104] போன்ற பழந்தமிழ் இலக்கியங்கள் நீண்டக் கதையாக அல்லாமல் ஓரீரு வரிகளில் சுட்டுகின்றன.
கடல்கோள்களைப்பற்றித் தமிழிலக்கியத்தில் உள்ள செய்தி களுக்கு அப்பால் , சமற்கிருத்ததிலுள்ள பிராமண இலக்கியங்களிலும் தொன்மங்களிலும்கூடக் கடல்கோளைப் பற்றிய கதைகள் உள்ளன :
விண்டு மீன் வடிவத்தை எடுத்த கதைச் சதபத பிராமணத்தில் தான் முதன்முதலில் சொல்லப்பட்டுள்ளது . அக்கதையில் குடித்தலை வனான ( பிரசாபதியான ) நான்முகன்தான் மீனாக உருவகப்படுத்தப் பட்டுள்ளான் . வைவச்சுதமனு எனப்பட்ட சத்தியவிரதன் என்பானே மாந்தரினத்தின் மூதாதை யெனச் சதபத பிராமணம் சொல்கின்றது . 3 ' வைவசு ' என்றால் ' எமன் ' என்று பொருள்படுமென அபிதான சிந்தாமணி கூறுகிறது. 10எமனின் திசை , தென்திசை தென்திசையைக் குறிக் கின்ற சமற்கிருதச் சொல்லே ' வைவசு ' என்பது இதனால் புலனாகிறது . தென்னவன் என்றழைக்கப்பட்ட பாண்டியன் , சமற்கிருத நூல்களில் ' வைவசு ' என்று புனைந்துரைக்கப்பட்டிருக்கிறான் . பாண்டியன்தான் மாந்தரினத்தின் மூலமும் மூதாதையும் என அது சொல்லாமல் சொல்கிறது. என எழுதும் குணா மேலும் கூறுவதாவது பாண்டியன்தான் வைவச்சுத மனுவென்றும் , மாந்தரினத்தைப் படைத்தவன் என்றும் சதபத பிராமணம் இலைமறை காயாகச் சொல் கிறது . வைவச்சுத மனுதான் நான்முகன் சொல்லக்கேட்டு உலகிலுள்ள உயிர்களை யெல்லாம் படைத்தானென மாபாரதம் கூறுகிறது . தமிழ கத்தை ( திராவிடத் தேசத்தை ஆண்டவன்தான் வைவச்சுத மனுவென மச்சபுராணம் குறிப்பிடுகிறது . ' குமரிக்கண்டம் ' எனும் பெயரையே குறிப்பிட்டு , அது கடலில் மூழ்கிவிட்டதாக மார்க்கண்டேய புராணம் சொல்கிறது . கடல்கோள்களால் பாண்டியநாடு மூழ்கியதைப் பற்றிய தமிழ்த் தொன்மங்களின் மொழிபெயர்ப்புகளாகவும் திரிபுகளாகவுமே சமற்கிருத நூல்களிலும் புராணங்களிலும் வருகிற கதைகள் உள்ளன வென்பது இவற்றால் புலனாகிறது .
[தமிழர் தொன்மை பக்,283,287,288]
இத்தரவுகளை கொண்டும் குமரிக்கு தெற்கிலிருந்த தென்மதுரையும் கடலுள் மாய்ந்ததை அறியலாம். ஒருங்கிணைந்தப் பண்பாட்டை கொண்ட இலங்கை முன்காலத்தில் தமிழகத்தோடு ஒன்றாகவே இருந்தது, என்கிறநிலையில் இலங்கை தரவுகள் குறித்தும் விளக்குவது பயன்தரும்.
இலங்கையிலும் மூன்று கடல்கோள் நிகழ்ந்தது பற்றி செய்திகள் உள்ளன. இதுகுறித்து இவ்வாறு இராசமாணிக்கனார் எழுதுகிறார். இலங்கையை அழித்த கடல்கோள்கள்‌ பல. அவற்றுள்‌
முதலில்‌ நடந்தது கி.மு. 2387-இல்‌ என்றும்‌, இரண்டாம்‌
கடல்கோள்‌ கி.மு. 504-இல்‌ நடந்தது என்றும்‌, மூன்றாம்‌
கடல்கோள்‌ கி.மு. 306-இல்‌ நடந்தது என்றும்‌ மகாவம்சம்‌,
இராசாவழி என்னும்‌ இலங்கை வரலாற்று நூல்கள்‌
கூறுகின்றன. இவற்‌.றுள்‌ இரண்டாம்‌ கடல்கோளாற்றான்‌
இலங்கையின்‌ பெரும்‌ பகுதி அழிந்தது என்று இலங்கை
வரலாற்று நூல்கள்‌ கூறுகின்றன. இங்ஙனம்‌ இலங்கையின்‌
பெரும்‌ பகுதியை அழித்த அக்கடல்கோளே
கபாட்புரத்தை உள்ளிட்ட தமிழகத்துச்‌ சிறு பகுதியை
அழித்திருத்தல்‌ கூடும்‌ என்று கோடலில்‌ தவறில்லை.என்று
1, Vide ‘Tamil Polil’, Vol. 13 py, 289, 300; Vol.15, article on
‘Tolkappiyam and the Sangam Literature’. Ogreva men Quit
இதனை மேற்கோள் காட்டி தமது சங்க கால சோழர் என்கிற கட்டுரையில் குறிப்பிடுகிறார். புலவர்கள் ஒன்று கூடி சங்கம் அமைத்ததனாலேயே கூடல்நகரம்  அல்லது கூடல் மாநகரம் என்கிற பெயரும் மதுரை நகரத்தை சிறப்பாக சுட்டுவதாகும். கூடல், கூடுதுறை, திரும்புதுறை  போன்ற நகரங்கள் இன்றும் இலங்கையில் உள்ளன. தென்புலத்தார் என்கிற நினைவேந்தல் தொடர்பான கருத்தாக்கம் குமரிக் கண்ட அழிவோடு உறவு உடையது. இக்கருத்து இக்கட்டுரையின் முன்பகுதியிலும் குறிக்கப்பட்டுள்ளது. மேலும் வேங்காலூர் குணா உள்ளிட்ட தமிழிய ஆய்வாளர்களும் இக்கருத்தை சுட்டுகின்றனர். தற்போது ஆய்வு உலகில் வலுவடைந்துவரும் இக்கருத்தை மேலும் உறுதிப்படுத்த குமரிக் கடலாய்வுத் தேவையை கோரும் அதேநேரத்தில் இலங்கையில் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள தொல்லியல் எச்சங்களையும்  அவைசார்ந்த  கருத்து மூலங்களையும் ஒருங்கிணைப்பதுவும் தேவையாகிறது. மணிமேகலைக் காப்பியமும் இரத்தினதீபம், சமந்தமலை, மணிப்பல்லவம் உள்ளிட்ட இலங்கை இடங்களை விவரிக்கிறது. இவற்றோடு நால்பெரும் தீவு, இரண்டாயிரம் தீவு என்பவை இலங்கைத் தீவை ஒட்டியப் பகுதிகளாக இக்காப்பியத்தில் எடுத்துக் காட்டப்படுகிறது. மணிமேகலையில் குறிப்பிடப்படுகிற மணிப்பல்லவம் கூட தென்புலத்தார் துஞ்சும் முதுகாடாகத்தான் இருக்கிறது.சாவகநாட்டு அரசனான புண்ணியராசன் முன் பிறவியில் ஆபுத்திரனாக இருந்தபோது அவன் உயிர் தங்கியிருந்த உடலின் எலும்புக் கூட்டை தோண்டி அவனுக்கு அடையாளங்காட்டுவது குறிப்பிடத்தக்கது. வழுக்கையாற்றுப் பிராந்தியத்திலும், கந்தரோடைப் பகுதியிலும் மற்றும் பொன்பரிப்பு, மாந்தை உள்ளிட்டப் பகுதிகளிலும் பழங்கால மக்களின் எலும்புகூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் நாகர்கள் வாழ்ந்துள்ளனர். அமானுசிய சக்த்தி கொண்டவர்கள், பாதாளவாசிகள் என்றும் பாலி,பிராகிருத, சமச்கிருத நூல்கள் குறிப்பிடும் இவர்கள் தென்னிந்தியாவை சேர்ந்த திராவிடர்கள் என்று இலங்கையின் தொல்லியல் அய்வாளர்களான மெண்டிச், பரணவிதான உள்ளிட்டோர் விளக்குகின்றனர். இவை அனைத்தும் கடல் தீவுகளாள் அழிக்கப்பட்ட இடங்கள் என்பது கவனத்தில் கொள்ள வேண்டியதாகும். பூம்புகாருக்கு தென்கிழக்கில் நாகநாடு இருந்தது. அந்நாட்டு இளவரசியான பீளிவலையோடு காதல் கொண்ட சோழ அரசன் நெடுமுடிக் கிள்ளி களவு புணர்ச்சியில் ஈடுப்பட்டு விட பின்னொரு நாளில் அவள் வரவேயில்லை. ஆனால் ஒருவன் கடல் மீது நடந்து வந்து அவ்வரசனை பார்த்து நாக நாட்டிலிருந்து வருகிறேன் என தன்னை அறிமுகம் செய்து கொண்ட அவன், நாக நாட்டரசி கருவுற்றிருக்கிறாள் அது உன்னுடைய வாரீசாகும், அக்குழந்தை பிறந்த உடன் உன் நாட்டை கடல் வழியாக வந்தடையும் என்று சொன்னான். பண்டு அறிவுடையேன் பார்த்திப கேளாய்
நாக நாடு நடுக்கு இன்று ஆள்பவன்
வாகை வேலோன் வளைவணன் தேவி
வாசமயிலை வயிற்றுள் தோன்றிய
பீலிவளை என்போள் பிறந்த அந் நாள்
இரவி குலத்து ஒருவன் இணை முலை தோய
கருவொடு வரும் எனக் கணி எடுத்து உரைத்தனன்’ [மணி, காதை24.] அவன் சொன்னபடியே ஒரு குழந்தை தொண்டைக் கொடி [நீரில்மூழ்காமல் மிதப்பதற்கான ஒரு வகையான கொடி] கட்டப்பட்ட நிலையில் வந்தது. அவன்தான் சோழரின் இன்னொரு தலைநகரமான காஞ்சிபுரத்தை ஆட்சியாண்ட தொண்டைமானிளந்திரையன். இக்கதை மணிமேகலைக் காப்பியத்தின் 23., 28.ஆம் காதையிலும், பெரும்பாணாற்றுப்படையிலும் எடுத்துரைக்கப்படுகிறது. இந்நாகநாடு பாதாளநாடாக சொல்லப்படுகிறது. இந்நாடு கடலுக்குள் மூழ்கிவிட்டது. இந்நிகழ்வு பழங்காலத் தமிழகத்தில் ஏற்பட்ட கடல்கோள் ஒன்றை எடுத்துக்காட்டுகிறது. குறிப்பாக வங்கக் கடலில் ஏற்பட்ட பேரிடராக இதனை காணலாம். இலங்கையின் வடகரை பகுதியில் பல நாக சிற்றரசுகள் இருந்தன. நாகதீபம், தீபவம்சம் போன்ற புராண கதைகளுக்கான அடிக் கருத்தை ஆராய்ந்து உணர்வதிலிருந்து பார்த்தால் இவற்றிற்கு ஆதாரமாக இருப்பது இந்த நாக சிற்றரசுகளே ஆகும். நாகநாட்டு இளவரசியின் சோழவேந்தனுக்குரிய வாரிசான தொண்டைமான் இளந்திரையன் உள்ளிட்ட வரலாற்றுக் கதைகளை அல்லது நிகழ்வுகளை கொண்டு பார்த்தால்  நாக அரசுகளுக்கும் தென்னிந்தியாவிற்கும் உள்ள வலுவான உறவு பிடிப்படுகிறது. இவற்றோடு புவியல்ரீதியான  ஒருங்கிணைந்த திராவிட கலாசார நிலைகளை தெரிந்து கொள்வதற்கு தொல்லியல் எச்சங்களே உதவக் கூடும்.
கந்தரோடை அகழ்வை அடுத்து அனுராதபுரத்தின் பழைய தலை நகர் பகுதியிலும் அகழ்வு மேற்கொள்ளப்பட்டது . ( Deraniya -gala S. 1972 ) இவ்வகழ்வின்போது இப் பகுதியில் ஆரம்பத்தில் வேடர்களின் முன்னோடிகளாகிய குறுணிக்கற்கால மனிதர் உபயோகித்த கல்லாயுதங்களும் , வெளிக்குப்பின்பு பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கறுப்புச்சிவப்பு நிற மட்பாண்டங்களும் இவற்றைத் தொடர்ந்து வரலாற்றுக்கால மட்பாண்டங்களும் ஏனைய சின்னங்களும் வெளிக்கொணரப்பட்டன, . இவ்வாய்வை நடத்திய திரு . சிரன் தெரணி யாகலை என்ற அறிஞர் இப்பெருங்கற்காலம் கி . மு . 400 ம் ஆண்டளவில் இங்கு ஆரம் பித்திருக்கலாம் என்றும் வரலாற்றுக்காலம் கி . மு . 200 - ம் ஆண்டில் தொடங்கி இருக்கலாம் எனவும் கருத்து வெளியிட்டார் .
முதன் முதல் பெருங்கற்கால மக்களே இப்பகுதியில் குளந்தொட்டு நெல்விவசாயம் மேற்கொண்டதற்கான சான்றும் கிட்டியது . இவ்வாய்வு பலவிதத்த்திலும் முக்கியம் பெற் றது . இதன் மூலம் இலங்கையில் முதன் முதலில் விஞ்ஞான ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மட்டுமின்றி இந்நாட்டின் நாகரி கத்தை உருவாக்கியவர்கள் பெருங்கற்கால மக்களே என்பதும் வரலாற்றுக் காலம் இம் மக்களின் நாகரிகத் தொடர்ச்சி என்பதும் வெளியாயிற்று . இவ்வாய்வில் திட்ட வட்ட மாக வட இந்தியாவிலிருந்து இங்கு சிங்கள மக்கள் குடியேறியதிற்கு எதுவித சான்றும் கிடைக்கவில்லை என்பதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது .
தனது தொல்லியலும் ஆதிக் குடிகளும் என்னும் நூலில் இவ்வாறு விளக்கும் இலங்கை தொல்லியல் பேராசிரியர் க. சிற்றம்பளம் மேலும்,
இவ்ஈமச் சின்னங்கள் , படைத்த குளங்கள் , தொழில்கள் மேற்கொண்ட வயல்கள் ஆகிய நான்கும் இப்பண்பாட்டின் பிரதான அம் சங்களாக விளங்கின , இன்று தென்னிந்தியா வில் திராவிட மக்கள் வாழ் பிரதேசங்களில் இவ் ஈமச்சின்னங்கள் பரந்து காணப்படுகின்றன . இவற்றை விரிவாக ஆராய்ந்த அறிஞர் இவை திராவிடருடையதே என்றும் , கி.மு . 1000 ஆண்டளவில் - இவர்கள் இத்தகைய ஈமச்சின்னங்களைப் படைக்கத் தொடங்கினாலும் கூட இப்பண்பாட்டு அம்சங்கள் கிறிஸ்துவிற்குப் பிற்பட்ட ஒரு சில நூற்றாண்டுகளுக்கும் தொடர்ந்து வளர்ச்சி பெற்றன எனவும் கருதுகின்றனர் .  இவ்வாறு எழுதும் இலங்கை தொல்லியல் பேராசிரியர் க. சிற்றம்பளம் தென்னிந்தியா கலாசாரத்தோடு உறவுடைய எலும்பு கூடுகள்  குறித்து விவரிப்பதாவது,
( 1980 - ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் வழுக்கையாற்றுக் கழிமுகத்துக் கிட்ட உள்ள தும் கடற்கரையோரமாக உள்ளதும் காக்கைதீவு வளை குடாவிற்கு நேரே எதிராக அமைந்ததுமான ஆனைக்கோட்டை மண்கும்பிகளில் ஒன்றில் பெருங்கற்கால பண்பாட்டைச் சேர்ந்த கலாச்சாரப் பொருட்கள் கிட்டின . இம் மண் கும்பியில் உள்ளமண் வெட்டி எடுக்க முற்பட்டபோதே இத்தகைய சான்றுகள் வெளிவந்தன . இவற்றை இப்பகுதியில் மேலாய்வில் ஈடு பட்டிருந்த யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைக்காக  A , B என இரு அடக்கங்களுக்கும் பெயர் சூட்டப்பட்டது.  இவ்விரு அடக்கங்களும் சுமார் 10 அடி இடைவெளியில் தான் மேற்கொள்ளப்பட்டுள்ளன . இவ்வெலும்புக் கூடுகளின் நீளமும் சுமார் 5 அடி யாகும் . இவற்றின் A எலும்புக் கூட்டின் முழுப்பாகமும் பூரணமான நிலையில் கிடைக்கவில்லை . இடைமட்டுமுள்ள பகுதி பூரணமான நிலையிலும் ஏனையவை பாகங்களாகவும் கிடைத்துள்ளன . ஆனால் B எலும்புக்கூடோ எனில் பூரணமான நிலையில் மீட்கப்பட்டுள்ளது . இவற்றுள் A எலும்புக் கூட்டைப்பற்றி சற்று விரிவாக ஆராய்ந்தால் இதன் இடைவரை கைகள் நீளவிடப் பட்டு கைகட்டிய நிலையில் காணப்பட்டு இதன் தலை இடப்பக்கம் சரிந்தும் காணப்படுகிறது . B எலும்புக்கூட்டைப் போன்றே இதனின் தலைப்பக்கம் மேற்குத் திசையிலும் கால்ப்பக்கம் கிழக்குத் திசையையும் நோக்கி காணப்படுகிறது . A எலும்புக் கூட்டின் தலைமாட்டில் ஒரு மட்பாண்ட வட்டிலில் சுறா மாலையையும் ஒரு வெண்கல முத்திரை யையும் கொண்ட கறுப்பு சிவப்பு நிற வட்டில் காணப்பட்டுள்ளது .
வட மாகாணத்தில் திருக்கேதீஸ்வரத் திலும் இத்தகைய்தொரு எலும்புக்கூடு 1950-1953 - ம் ஆண்டுக் காலப் பகுதியில் திரு . சண்முகநாதனால் அகழ்ந்தெடுக்கப்பட்டது . ( Shanmuganathan S. 1960 ) அளவிலும் அது அமைந்திருந்த திசையை பொறுத்த மட்டிலும் ஏன் ஆனைக்கோட்டை A எலும்புக்கூட்டைப்போல் கைகட்டிய நிலையிலும் ஒத்துக்காணப்பட்டுப் பூரணமான நிலையில் காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.[தொல்லியலும் ஆதிக் குடிகளும் ப,19]
இத்தகைய விவரிப்புகள் ஒருங்கிணைந்தப் புவி சார் கலாசாரமண்டளத்தையே காட்டுகிறது. இத்தகைய ஈம சின்னங்கள் தென்னிந்திய தமிழக அரசியல் பண்பாட்டு கருத்தாடலில் வரலாறாக தொடரும் தென்புலத்தார் என்கிற சுட்டுதலுக்குரியவராக விளக்க முடியும். பொதுவாக கடல்கோள் நிகழ்வதற்கு முன்னால் பெரும் பஞ்சம் நிலவுவது வழக்கம். இப்படியானதொரு பஞ்சத்தின் போது  ஈமசின்னங்கள் மனித அழிவினால் உருவானது என விளக்கவும் வாய்ப்புள்ளது. இத்தருணத்தில் இம்மாதிரியான நீண்ட விளக்கங்கள் கடல்கோள் குறித்த பேசுபொருளை   தடமாற்றிவிடக் கூடும் என்பதால் தவிர்த்துக் கொள்ளப்படுகிறது. 
பீளிவலை கதையில் வரும் நாகநாட்டு அழிவோடு பூம்புகார் அழிவும் இனைத்து சுட்டப்படுகிறது. பூம்புகார் அழிவுக்கு பின்பு கஞ்சிபுரம் சோழ நாட்டின் புதிய தலைநகரமாக வடிவமைக்கப்படுகிறது. இத்தலைநகரத்தில் முதல் சோழ அரசனாக இளங்கிள்ளி அமர்ந்தான். இதுகுறித்து விரிவாக விளக்குவதற்கு முன்னால் கடல்கோள் குறித்து விளக்குவது பயன்தரக் கூடும்.
                         கடல்கொண்ட பூம்புகார்
பீளிவலை அல்லது அவருடைய வாரிசு வரும் என்று சோழ அரசன் நெடு முடிக்கிள்ளியிடம் கடல்மீது நடந்து வந்த நாகநாட்டு சாரணன் சொன்னான். தீவகசாந்தி என்னும் மூத்தோர் வழிபாட்டு விழா [இந்திரவிழா] செய்யாமல் போனால் பூம்புகார் நகரத்தை கடல் கொள்ளும் என்பதவும் மணிமேகலை தெய்வத்தாலும் இடப்பட்ட சாபமாகவும் இந்திரனாலும் விடப்பட்ட சாபமாகவும் இது இருப்பதனால் இந்திர விழா எடுப்பதை மறந்தால் உறுதியாக நகரத்தை கடல்கொள்ளும் என்று அச்சாரணனால் எடுத்துரைக்கப்படுகிறது.
காவல் மா நகர் கடல் வயிறு புகூஉம்
மணிமேகலை தன் வாய்மொழியால் அது
தணியாது இந்திர சாபம் உண்டு ஆகலின்
ஆங்குப் பதி அழிதலும் ஈங்குப் பதி கெடுதலும்
வேந்தரை அட்டோய்! மெய் எனக் கொண்டு இக்
காசு இல் மா நகர் கடல் வயிறு புகாமல்
வாசவன் விழாக் கோள் மறவேல் என்று’[மணி,24, 69=73] என்று இக்காப்பியம் கடல்கோள் வருவதை  எடுத்துரைக்கிறது. சிலப்பதிகாரத்திலும் பூம்புகார் பதியேழு அறியா பழங்குடிகள் வாழ்ந்து மறைந்த பழையப் பூம்புகார் கடளுள் மூழ்கிய பூம்புகார் கடந்த கால நினைவிலிருந்து நிகழ்கால கூற்றாக எடுத்துரைக்கப்படுகிறது. காவிரி நாடனான சோழரை அரசனாக கொண்டு வாழ்ந்த பசியும் பகையும் இல்லாத நிலையில் வேறெங்கும் செல்லாத அந்நகரத்து மக்கள் உடல் அளவில் அழிந்திருந்தாலும் சான்றாண்மை உடைய புகழ் என்றென்றும் நடுக்கமில்லாமல் நிலைத்திருக்கும். இருடிகர் நிரைந்த இமயத்தை போலவும் அகத்தியன் தவம் செய்த பொதிகை போலவும் சான்றோர் நிரைந்தது பூம்புகார். என கடல்கொண்ட பூம்புகாரின் சிறப்பை வியந்துரைக்கிறது. மணிமேகலைக் காப்பியத்தில் எடுத்துரைக்கப்பட்டது போல நாகநாட்டோடு இனைத்து பூம்புகார் சிலப்பதிகாரத்திலும் எடுத்துரைக்கப்படுகிறது. கடல்கோள் குறித்து பழந்தமிழ் இலக்கியங்களில் இத்தகைய வலுவான ஆதாரங்கள் இருந்த போதிலும் கடல்கோள் உண்மையிலேயே நிகழ்ந்ததா, அதில் பூம்புகார் உள்ளிட்ட தமிழக நகரங்கள் அழிந்ததா போன்ற வினோதமான வினாக்கள் ஆய்வு உலகில் தொடர்ந்து முன்வைக்கப் படுகிறது. இதனோடு தொடர்புடைய கடலடி ஆய்வுகள் சார்ந்த கண்டு பிடிப்புகளையும் அது சார்ந்த முயற்சிகளையும் முன் வைப்பது இன்றியமையாத்தாகிறது.
                                   புவித் தட்டுக் கோட்பாடு
இன்று பொதுவாக அனைத்துலகணாடுகளை ஏழுக் கண்டங்களாக பகுத்து சொல்லப் படுகிறது. ஆசியா, ஐரோப்பியா, ஆச்த்திரேலியா, அமரிக்கா, ஆப்பிரிக்கா, அண்டாட்டிக்கா என இக்கண்டங்கள் பெயரிடப்பட்டுள்ளன. இந்தப் புவி ஏழு தட்டுகளை கொண்டு அமைந்திருப்பதால் ஏழு கண்டங்களாக பகுத்தறியப்பட்டது. அந்த அந்த தட்டுகளின் மீது அவ்வக் கண்டங்கள் முழுமையாக அமைந்திருக்க வில்லை சிறிது மாறுபாடுகளும் உண்டு என்கிற கருத்து பிற்காலத்தில் கண்டறியப்பட்டது. தட்டுகள் இடம் பெயர்ந்து கொண்டிருப்பதால் இம்மாற்றங்கள் உண்டாகிறது. ஏழு பெரியத் தட்டுக்களையும், ஏழு சிறியத் தட்டுக்களையும் கொண்டதாக இப்புவி அமைப்பு இப்போது விஞ்ஞானிகளால் விளக்கப்படுகிறது.
அண்டார்டிக்கா தட்டு , இந்திய - ஆத்திரேலியத் தட்டு , யூரேசியத் தட்டு , பசிபிக் தட்டு , வட அமெரிக்கத் தட்டு , தென் அமெரிக்கத் தட்டு , ஆப்பிரிக்கத் தட்டு என்னும் ஏழு பெரிய புவித்தட்டுகளுடன் , பிலிப் பைன்சு தட்டு , கோக்கோசு தட்டு , நாசுக்கா தட்டு , இசுகோசியா தட்டு , புவான் டிஃபூக்கா தட்டு , கரிபியன் தட்டு ஆகிய ஆறு சிறிய புவித்தட்டுகளும் உள்ளன . – இப்புவித் தட்டுகளின் விளிம்புகளில் அவ்வப்போது தொடர்ந்து நிகழ்ந்து வரும் நில நடுக்கங்களும் எரிமலை வெடிப்புகளும் இப்போது இருக்கும் பெரிய புவித் தட்டுகளில் ஓரிரண்டை உடையச் செய்தால் , புதிதாக ஓரிரு சிறிய புவித்தட்டுகள் தோன்றவும் செய்யலாம் . அவ்வாறு புதிதாகத் தோன்றும் புவித்தட்டுகள் வெறும் கடலாகவும் இருக்கலாம் ; நிலமும் கடலும் அடங்கியதாகவும் ஆகலாம் .
புவி தட்டுகள் ஒன்றையொன்று மோதி அலுத்துவதால் எரிமலை வெடிப்புகள்,  நில நடுக்கங்கள், கடல் சீற்றங்கள் மற்றும் கடல் கோள்கள், நில அமிழ்வுகள் உள்ளிட்டவை நிகழுகின்றன. தட்டுகளின் அசைவு இயக்கத்தினால் ஒரேக் கண்டமாக இருந்த இப்புவி ஏழு கண்டங்களாக பிளவுற்றது என ஆய்வாளர்கள் எடுத்துக் காட்டி விளக்கியுள்ளனர். மூன்று கடல் கோள்கள் குறித்து பழந்தமிழ் இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. முதலாம் பனியூழி காலத்தில் குமரிகண்டம் என்னும் பெரு நிலப்பரப்பு அமிழ்ந்து கடலான போது அல்லது கடலுக்குள் அமிழ்ந்த போது இந்தியத் துணைக் கண்டத்தின் வடக்கில் பனிமலையான இமையமலை தோன்றியது. இந்நிகழ்வின் போதுதான் தக்கன மதுரை என்று மணிமேகலைக் காப்பியத்தில் குறிப்பிடப்படும் தென் மதுரை [முதலாம் தமிழ்ச் சங்கம் இருந்த நகரம்] அமிழ்ந்தது என நம்புவதற்கு இடம் உள்ளது. இது குறித்து லெமோரியா கண்டக் கோட்பாடுகள் மேலை நாட்டு ஆய்வாளர்களான ச்காட்டெலியட், சிலேட்டர் உள்ளிட்டோரின் எழுத்துக்களால் காண முடியும். இது குறித்த மேலும் விவரங்களுக்கு பன்மொழிப் புலவர், க.அப்பாதுரை எழுதியுள்ள குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு என்கிற நூலை வாசித்தறிக. குமரி கடல் கோள், பூம்புகார் கடல் கோள் குறித்து கண்டப் பெயர்ச்சிக் கோட்பாடு மற்றும் புவித் தட்டு அசைவியக்க கோட்பாடுகளை பயன்படுத்தி வெங்காலூர் குணா தமது தமிழர் தொன்மை என்கிற நூலில் விளக்கியுள்ளார். குமரி நிலப்பரப்பு அமிழ்ந்த போது அதறகு இடான நிலப் பரப்பு வடக்கில் மேலெழுந்தது. இதற்கு வரலாற்றுக்கு முந்தைய கட்டத்தில் வடமரிக்கா அமிழ்வையும் எழுகையையும் எடுத்துக்காட்டி அவர் எழுதுவதாவது,
புவியின்மேல் பல்வேறு அழுத்தங்கள் உள்ளன . இந்த அழுத்தங் களால் புவிப் புறணியின் நொய்ம்மையான இடத்தில் நிலவியல் பிளவு தோன்றுகிறது . இந் நிலவியல் பிளவால் , பிளவுத்தள மேற் பாறையில் ( Hanging Wall ) முழுமையான நில அமிழ்வு நிகழ்கிறது . நில அமிழ்வின் அளவைப் பிளவடிப்பாறையின் ( Footwall ) பெயர்ச்சியைக் கொண்டு அறியலாம் . 826
புவியின் புறணி , நெகிழ்வாயுள்ள மென்பாறை மண்டிலத்தின் ( Asthenosphere ) மீது மிதக்கிறது . அதில் ஓர் இடத்தின் மீது சுமை கூடி னால் , நிலச்சமனிலையை ( Isostatic Balance ) நிலைப் படுத்துவதற்காக ! அந்தப் புறணி கீழே இறங்குகிறது . இதை நிலச்சமனிலை நில அமிழ்வு ( Isosiatic Subsidence ) என்கின்றனர் . இத்தகு நிகழ்வுக்கு நேர்மாறாக , ஓரிடத்தில் அமிழ்ந்த புறணி மீண்டும் மேலெழுவதை நிலச்சமனிலை ! நிலஎழுச்சி ( Isostatic Rebound ) என்று கூறுவர் .எனக் கூறும் அவர்
புவிப்புறணியின் மேல் படிந்திருந்த பனிப்படலத்தின் தடிப்பு , கூடியதால் நேர்ந்த நிலச்சமனிலை நில அமிழ்வுக்கும் , அந்தப் பனிப் படலம் உருகியதால் வந்த நிலச்சமனிலை நில எழுச்சிக்கும் வரலாற்றுக் காலத்திற்கு முன் வட அமெரிக்காவில் மழைநீரைத் தேக்கி வைத்த போனெவில் ( Bonneville ) ஏரியைச் சான்று காட்டுவர் . ஒரு காலத்தில் அந்த ஏரியில் நீரின் கொள்ளளவுக்கும் மேல் பெருமளவில் நீர் தேங்கிய தால் , அதன் அடியிலிருந்த புவிப்புறணி 61 மாத்திரி ( 200அடி ) ஆழத் திற்குத் தாழ்ந்ததாம் . ஏரியின் நீர் வற்றிய போது , அந்தப்புறணி மீண்டும் மேலெழுந்ததாம்.” புவித் தட்டுகளுக்கிடையே நிலவும் அளுத்தங்களால் புவியில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகின்றன. விலகும் புவித்தட்டுகளின் விளிம்புகள் கடலுக்குள் இருந்தால் அவற்றிற்கு அடியிலுள்ள குழைம மண்டிலத்திலிருந்து பாறைக்குழம்பு ( Magma ) பீறிட்டு மேலெழுந்து குளிர்ந்து நடுக்கடல் மலைத் தொடராகவும் பள்ளத்தாக்காகவும் உருவாகிறது . பாறைக் குழம்பில் ஒரு பகுதி கடலடி எரிமலைகளாகிறது . அதன் இன்னொரு பகுதி விலகும் புவித் தட்டுகளுக்கிடையில் தோன்றும் பிளவுக்கு மேல் படர்ந்து எரிமலைப் பாறைகளாகிப் புதிய புவிப்புறணித்திட்டாகிறது . விலகுகிற புவித்தட்டுகளுக்கு இடையில் கடலுக்கடியில் தோன்றுகிற மலைத் தொடர்களும் திக்கற்கள் ( Basall ) என்னும் எரிமலைப் பாறைகளாலானவை , 830 1
கடலுக்கடியிலுள்ள விலகும் புவித்தட்டுகளின் விளிம்புகளில் குறைந்த ரிக்டர் அளவு நில நடுக்கங்கள் குறைந்த ஆழத்தில் தோன்று கின்ற ன . 831
விலகும் புவித்தட்டு விளிம்புகள் இரு கண்டங்களுக்கு இடையிலிருந்தால் , அவற்றிற்கு இடையில் தோன்றும் பிளவில் புதிய கடல் ஒன்று தோன்றும் . செங்கடலே அதற்கொரு சான்று . 321
குமரிக் கண்டம் குமரிக் கடலானதையும் இவ்வாறுதான் மதிப்பிடமுடியும். புவித்தட்டின்கீழ் அடிச்செருகிய போது மேலெழும்பி மறைந்துபோன தெனின் , அதற்கு ஈடான நிலப்பரப்பு இந்தியத் தட்டின் தென்பகுதியில் கடலில் அமிழ்ந்திருக்க வேண்டுமன்றோ ? அவ்வாறு அமிழ்ந்ததால் , கடல் மட்டம் மேலெழும்பி அங்கிருந்த குமரிக்கண்டத்தை மூழ்கடித் திருக்காதோ ? இன்றிலிருந்து 11 . 700 ஆண்டுகளுக்கு முன்னர்தானே அவ்வாறு நேர்ந்திருக்கும்? எனக் கூறும்  குணா மேலும்
விந்திய மலைக்கு வடக்கேயிருக்கும் பரந்த வண்டல் மண் படிவு ரூாக்கியில் 10000 அடி அமம் வரையிலும் , வடக்குப் பிகாரில் 6,000 அடி ஆழம் வரையிலும் படிந்திருக்கிறது . அந்த அளவுக்கு அந்தப் பேரேரி மேற்கேயிருக்கும் கராச்சியில் தொடங்கிக் கிழக்கே வங்க தேசம் வரையில் மிகப் பெரிய வண்டல் மண் படிவாக மேலெழும்பியுள்ள தெனின் , அதற்கு ஈடான அளவில் குமரி முனைக்குத் தெற்கேயிருந்த நிலப்பரப்பு கடலில் மூழ்கியிருக்க வேண்டுமன்றோ என விளக்கியுள்ளார். [தமிழர் தொன்மை,ப,345.] மேலும் குமரி கடலில் முறையான ஆய்வு நடத்தப்பட்டால்  அந்த விவரங்களை வைத்துக் கொண்டு பல உண்மைகளை  விளக்க முடியும். தற்போதைக்கு பூம்புகார் தொடர்பான ஆய்வு மட்டும் வங்கக் கடலில் நிகழத்தப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக் குறையால் இவ்வாய்வுப் பணி இப்போதைக்கு நிறுத்தப் பட்டிருந்தாலும் இதுவரை பூம்புகார் தொடர்பான ஓரிரு தடையங்கள் கிடைத்துள்ளது. இனி இது குறித்து விளக்கப்படுகிறது.
பழங்காலத்தில் நிகழ்ந்த மூன்றார் கடல் கோளின் போது தான் நாகநாடு உள்ளிட்ட பூம்புகார் வங்கக் கடலுள் அமிழ்ந்தது. இந்திய ஆச்த்திரேலிய தட்டும் மியான்மர் தட்டும் வங்கக் கடலுக்கடியில் அமைந்துள்ளது. இந்திய ஆச்த்திரேலியத் தட்டை மியான்மர் தட்டு அளுத்துவதனால் இப்பகுதியில் கடல் சீற்றங்களும் கடல்கோள்களும் நிகழ்கிறது என்று கடல்சார் ஆய்வு வள்ளுனர்கள் விளக்கியுள்ளனர்.
                                                       வங்கக் கடலில் பள்ளத்தாக்கு

இந்திய அறிவியல் கழகம் 2008 இல் வெளியிட்ட நூலில் திரு . வி . சுப்பிரமணியன் , திரு . கே . எசு . கிருட்டினா , திரு . எம் . வி . இரமணா , திரு எசு . ஆர் . மூர்த்தி ஆகிய ஆய்வாளர்கள் கூட்டாக எழுதிய கட்டுரையில் ( Marine geophysical investigations across the sNb marine canyowl , northern Bay of Bengal ) ஓரளவு வட பகுதி வங்காள விரிகுடாவில் ஆய்வு நடந்தது பதிவு ஆகியுள்ளது .
புவி ஈர்ப்பு , பொருண்மை , காந்தவியல் தன்மை பற்றிய ஆய்வுகள் வடக்கு வங்க விரிகுடாவில் வடக்கு வடகிழக்கு , தெற்கு / தென்மேற்குத் திசையில் 300 மீட்டர் ஆழமும் 18 கிலோ மீட்டர் விரிவும் கொண்டு படிப்படியாக இறங்கும் சரிவுகளுடன் கடற்பள்ளத்தாக்கு இருப்பதாகச் சொல்லியுள்ளனர் . கடற் கரையின் அமும் சில இடங்களில் 900 மீட்டரில் இருந்து 1459 மீட்டர்களாக வங்கக் கடலில் உள்ளது . கடற்பள்ளத்தாக்கின் இரு புறமும் 100 - 150 மீட்டர் கனமுள்ள இயற்கைக் கழிவுகளும் தாதுக்களும்
மூடியுள்ளன . 10 முதல் 20 மீட்டர் வரை கொப்புளம் போலக் கடற்கரை மேல் எழும்புவதால் இவ்வாறு பள்ளத்தாக்கில் இரு புறமும் 100 மீட்டர் முதல் 150 மீட்டர் வரை துகள்களோ / வேது எதுவோ மூடியுள்ளது.
அறிவியல் அறிஞர்கள் கடற்பள்ளத்தாக்கைக் கண்டறிந்தனர்.
மியான்மர் தட்டு இந்திய ஆச்த்திரேலிய தட்டை உரசி அலுத்துகிறது. இதனால் இத்தட்டு வடக் கிழக்காகச் செல்கிறது. இதன் விளைவாக கடலின் நீரோட்டங்கள் மாறுகிறது. இப்பள்ளத்தாக்கை அறிந்த கிரகாம்பல் குழுவினர் 1991முதல் 1993.வரை நாகை மாவட்டத்தின் வழியாக கடலில் இரங்கி பூம்புகாரை தேடினர்.
வங்காள விரிகுடா 2 , 172 , 000 கி . மீட்டர் பரப்புடைய கடலாகும் . கண்டங்களின் இடப்பெயர்வுக் கோட்பாடு கூறுகிற படி இந்தியாவையும் ஆசுதிரேலியாவையும் உள்ளடக்கிய பெருந்தட்டு வங்காள விரிகுடாக் கடலுக்குக் கீழே இருக்கிறது .
மேலும் வங்கக் கடல் குறித்து ஆய்வாளர் நந்தி கூறுவதாவது அதில் இந்தியத் தட்டு வடகிழக்கு நோக்கி மெள்ள நகர்கிறது . சுந்தா பள்ளம் என்று சொல்லப்படும் கடற்பள்ளம் உள்ள இடத்தில் இந்தியத் தட்டும் மயன்மார் தட்டும் ஒன்றாடொன்று மோதும் போது இந்தியத் தட்டு தாழ்ந்து மயன்மார்தட்டு உயர்கிறது . மயன்மார் தட்டு மேவேறி உட்காருவதால் ஏற்படும் அழுத்தம் காரணமாக இந்தியத் தட்டு கீழே போகிறது .
இந்த உரசல்கள் காரணமாக எரிமலைகள் வெடிப்பதும் கனாமி எனும் ஆழிப்பேரலையும் ஏற்படுகின்றன . கடற் பள்ளங்களும் பள்ளத்தாக்குகளும் உருவாகின்றன . இந்தியத் தட்டு வடகிழக்காக நகர்வதால் கடற்கரை மாறுகிறது . கடலரிப்பு நேரிடுகிறது . கடலில் கண் முன்னேயே பல பகுதிகள் மறைகின்றன . காலங்காலமாக நம் ஆறுகள் கொண்டு வந்து கொட்டும் வண்டல் மண் கடலடியில் மறையும் நம் நகரங்களையும் நாகரிகத்தையும் மூடுகின்றன . மூடிய இடங்களில் புதையுண்ட வரலாற்றை மீட்டெடுப்பதுவே நம் முன்னுள்ள பெரிய சவாலாகும்.” [கடலடியில் தமிழர் நாகரிகம், ப.28.]
Centre for Trophical Marine Ecology , Fehrenheistrasse 6 D - 28359 . Berman , Germany Bundesanstalt Geowissenschaften und Rohstoffe ( BGR ) Stilleweg - 2 . D - 30655 , Hanover , Germany Nils Bohar Institute of Geofysish Afdeling Danosh centre for Earth Sciencies , Julian Marics Veg 302010 , Copenhagen , Denmark .
இந்த நிறுவனங்கள் ஆய்வில் வெளி வந்துள்ள Deep Sea Re srarch Par | l : Topical studies in Oceanography இந்நூல் வங்கக் கடல் குறித்த பலவிவரங்களை அளிக்கிறது.
தென் தமிழகத்தின் கடற்கரையில் இருந்து 5 கி . மீட்டர் தூரத்தில் 23 அடி ஆழத்தில் கடலடியில் மனிதனால் கட்டப்பட்ட கற்சுவர் ஒன்று கண்டறியப்பட்டது . ஆங்கில எழுத்தான யூ வடிவில் பெரியதொரு குதிரையின் இலாடம் போன்ற வடிவில் 85 மீட்டர் நீளமும் 2 மீட்டர் உயரமும் கொண்ட அந்த மதிற் சுவரின் பருமன் 1 மீட்டராகும் .
கிரகாம் ஆன்காக் இந்திய அரசு நிறுவனமான சுடலியலுக்கான தேசிய நிறுவனம் 1991 மார்ச்சுத் திங்களில் தமிழ் நாட்டின் நாகை மாவட்டத்தில் தரங்கம்பாடிக்கும் பூம்புகாருக்கும் இடையே கடலடியில் ஆய்வில் ஈடுபட்டது அப்போதுதான் இது கண்டு பிடிக்கப்பட்டது. இது கல்லாலான கட்டிடமாகும். இது முதலில் நிலப்பரப்பில் கட்டப்பட்டு பின் கடலில் மூழ்கியிருக்கலாம் என்று ஆய்வுக் குழு தெரிவிக்கிறது. இதன் காலம் கி.மு. நான்காம் நூற்றாண்டிற்கு முந்தையது எனவும் கணிக்கப்பட்டுள்ளது. பூம்புகார் தேடலில் இது ஒரு முக்கிய முன்னேற்றமாகும். பூம்புகார்க் கடலடிக் கட்டுமானத்தைக் கடலில் மூழ்கி மீண்டும் ஆராய்ந்த ஆன்காக் , பனிப்படலங்களைப் பற்றிய வல்லுநரும் தரம் ( Durham ) பல்கலைக்கழகத்தின் நிலவியலாருமான கிலென் மில்னிடம் கருத்துக் கேட்டபோது , 23 மாத்திரி ஆழத்திலிருக்கும் 11 , 000 ஆண்டுக் காலத் தொன்மை வாய்ந்த அக் கட்டுமானம் , பண்டைய எகிப்திலும் மெசொப்பொத்தாமியாவிலும் கண்டெடுத்த நினைவுக் கட்டடங் களைவிட 6 , 000 ஆண்டுகள் பழமையானவையெனக் கூறினார் . 1871
மேலும் , 17 , 000 - 7 , 000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இலங்கை உள் ளிட்ட தென்னிந்தியா , குமரிமுனைக்கும் தெற்கேயும் ஒரு நீண்ட நிலப் பரப்பைக் கொண்டிருந்தது என்றும் , அந் நிலப்பரப்பு நிலநடுக்கோட் டையும் தொட்டு நின்றது என்றும் விளக்கினார் . 12 , 000 - 10 , 000 ஆண்டு களுக்குமுன் குமரிக்கண்டம் தமிழகத்தின் தொடர்ச்சியாயிருந்ததை யும் , கடைசிப் பனியூழிக் காலம் முடிந்து கடல்மட்டம் உயரத் தொடங் கியபோது , அவ்வளவு பெரிய நிலப்பரப்பு கடலில் மூழ்கியது என்ப தையும் அவ் விளக்கம் உறுதிப்படுத்தியது . 788
volcanic eruptions - generate - tsunamis & catid = 1340 & / emid = 2059 021 - 22 . http : / / www . thejakartapost . comwnews2013 / 12 / 24 / indonesia - cave - reveals history - ancient - tsunamis . html 823 - 24 . https : / / en . wikipedia . org / wiki / Subsidence 825 . https : / / en . wikipedia . org / wiki / Subsidence ; https : / / en . wiki - pedia . org / wiki 2011 _ 7 % C5 % 8Dhoku _ earthquake _ and _ tsunami 826 - 28 . https : / / en . wikipedia . orghviki / Subsidence 829 . http : / / www . fac . org / a / tsunami assessment / impact . html 830 - 31 . http : / / www . sms - tsunami - warning . com / pages / tectonic platesw . Vulmy NJ97cs
832 . https : / / en . wikipedia . org / wiki / Red _ Sea _ Rift 833 - 34 . http : / / www . indiana . edw - g103 / plate / plate2 . html 835 . https : / / en . wikipedia . org / wiki / Geography _ of _ Seychelles 836 . https : / / en . wikipedia . org / wiki / Seychelles _ microcontinent 837 . https : / / en . wikipedia . org / wiki / Mascarene Plateau ; http : / / www . uoguelph . ca / - geology / rocks _ for _ crops / 46seychelles . PDF 838 . http : / www . eolss . net / sample - chapters / c01 / - 16 - 03 - 07 . pdf 839 . https : / / en . wikipedia . org / wiki / List _ of _ earthquakes _ in _ In
majors - oceans - of - the - world / 321971 776 . Spencer Wells , The Journey of Man : A Genetic Odyssey , Allen Lane , an imprint of Penguine Books , London , 2002 , p 78 . 777 . Source : Ms . Preminda Kundra ' s M . Phil . Dissertation , JNU , 1984 , pp 1 - 17 ) 778 . http : / / www . britannica . com / science / continental - island 779 . http : / / www . yourarticlelibrary . com / geography / oceanography / ocean - bottom relief - with - the - floors - of - the - three - majors - oceans - of - the - world / 32 1971 780 . http : / / education . nationalgeo - graphic . org / encyclopedia continental - shelf 781 . https : / / en . wikipedia . org / wiki / Indian _ Ocean 782 . Khadg Singh Vaidya , The Making of India : Geo - dynamic Evolution , Mac millan , 2010 , p 487 . )
www . omicsgroup . org / journals / a - gravit - and - bathymetric - study - in - the - south - east - continental - margin - ofindia - jrsg - 1000149 . php ? aid = 58717 ) 784 . https : / / en . wikipedia . org / wiki / Geology of India 785 . SM . Ramasamy , Satellite Sensed Landmass - South of Cape Comorin ( Kanyakumari ) , https : / / ancientamilcivilization . wordpress . com 786 - 78 . Graham Hancock , http : / / www . crystallotus . com / Lemuria / 04The Lost Continent . htm 789 . http : / / www . tamilguardian . com / article . asp ? articleid = 256 790 - 91 . https : / / tamilresearch . wordpress . com 2012 / 06 / 10 / 11000 - years - ago - chocha - port - poompuhar - submerged - in - seas 792 . S . Christopher Jayakaran , The Lemuria myth , http : / / www . frontline . in / static / html / f12808 / stories / 20110422280809000 . htm 793 . http : / / www . decoded - science . org / large - earthquake - off - sumatra - in - april 2012 - heralds - tectonic plate - breakup / 18325 794 . https : / / en . wikipedia . org / wiki / Ninety East Ridge 795 - 96 . http : / / www . sundaytimes . lk / 100627 / Plus / plus _ 18 . html 797 - 809 . http : / / www . yourarticlelibrary . com / geography / oceanography / coral reefs - ideal - condition - types - and - theories - of - origin - of - corals / 322187 ) 810 . gfiger uit , Lede op u sur Bouw ( _ mg ) , 01 . 06 . 2011 81

 கெடுவாய்ப்பாக நிதிப் பற்றாக் குறையால் இக்கடலாய்வு பாதியிலேயே நின்று விட்டது. இவ்வாய்வு குறித்த அரிக்கை முறையாக இந்தியத் துணைக் கண்டத்து அரசிடமிருந்து வரவில்லை. இக்கடலாய்வு முழுமையாக நடைப் பெறாத நிலையிலும் அரசிடமிருந்து முறையான அரிக்கை வராத நிலையிலும் விரிவாக சொல்லுவதற்கு எதுவுமில்லை. ஆய்வு தொடர்ந்தால் மேலும் பலப் பொருட்கள் கிடைக்கலாம் என்பது மட்டும் உறுதி. இக்கால ஆய்வு விவரங்கள் முறையாக வெளி வராத நிலையில் பழங்கால தமிழ், பாலி, பிராகிருத, சமச்கிருத, சிங்கல மொழி இலக்கியங்களிலிருந்து கடல் கோளால் அழிந்த நகரங்களுக்கான தரவுகளை தருவதை தவிர்க்க முடியாது. அந்த வகையில் இராசாவலி என்னும் பாலி நூல் இலங்கையில் நடந்த கடல் கோளை எடுத்துரைக்கிறது. அவன் மகன் கோதாபயன் , அவனின் போன் காகவண்ணத்சன் ( காவன்நீசன் , காகத்தின் வண்ணமுடைய நீசன் ) ஆகியோர் மாகமை அரசின் ஆட்சியை ஒருவர் பின் ஒருவராக மேற்கொண்டனர் . இறுதியிற் கூறிய அசேனின் மனைலி சுழனி அரசன் நீசனின் மகனாவள் . இத்திகளின் மானி தீசனின் உடன் பிறந்தானுடன் கள்ளக் காதல் கொண்டிருந்தாள் , இது வெளியாயதும் அவன் நகரைவிட்டு வெளியேறினன் . வெளியேறிய இவன் , பிக்குவின் வேடந்தரித்த தூதன் மூலம் அவளுடன் முயங்கள் தொடர்பு கொண்டிருந்தான் . இத்தூதன் தலைமைப் பிக்குவின் பணியாளர்களுள் ஒருவனாகச் சேர்ந்து பிக்குவின் கூட்டத்தாருடன் அரண்மனைக்குப் போகும் பொழுது அரசியின் கண்ணைக் கவரும் வகையில் தன் தலைவனின் முடங்களைக் கீழே போட்டான் . அவப்பேறாக , ஓலையில் எழுதிய முடங்களாதலின் , அது விழும் பொழுது ஓசை உண்டாக்கியது . முடங்கல் தொடர்பு கண்டு பிடிக்கப்பட்டது . அரசன் சினங் கொண்டு தூதனைக் கொன்ற தன்றியும் தலைமைப் பிக்குலையும் ஐயங்கொண்டு கொன்றான் . அப்பொழுது கடல் பொங்கிக் கரையை அழித்தது . அக்காலத்தில் கடலானது கழனியிலிருந்து பதினைந்து மைல் தூரத்திலிருந்தது என இராசாவலி என்னும் நூல் கூறும் . உடலின் கொந்தளிப்பை அடக்கி அமைவுபடுத்த அரசன் பொன்னாலாய கலம் ஒன்றில் தன் மகள் தேவியை இருத்திக் கடலில் விட்டாள் . கடல் அவளைத் தென் திசை கொண்டுசென்று ஒரு கோயிற் ( விகாரைக் ) கருகாமையில் கரைசேர்த்தது . அதன் பின்னர் அவள் வியாரதேவி என்னும் பெயருடன் காக வண்ணதீசனின் பட்டத் தரசியாதினன் , அவர்களின் மக்களே , பிற்காலத்து வீரர்களாகப் புகழ்பெற்ற காமனி அபயனும் தீசறும் .
இக்கதையில் வரும் காகதீசன் கடலை அமைதிப்படுத்த தன் மகளை கடலில் விட்டது குறிப்பிடத்தக்கது. கடலை அமைதிப் படுத்துவதை மணிமேகலைக் காப்பியம் தீவகசாந்தி செய்தல் எனக் குறிக்கிறது. இந்திரனுக்கு விழா எடுப்பதன் மூலமே கடல் அமைதி பெறும், நாடும் செழிப்படையும் என்று இக்காப்பியம் எடுத்துரைக்கிறது. இக்கதையில் வரும் காகதீசன் என்கிற பெயர் காகந்தி சோழன் பெயரொடு உறவு கொண்டுள்ளது. அது போல இவ்வரசனின் மகள் யாமதேவி பரதவரின் யாம வழிபாட்டை நினைவூட்டுகிறது. இது தமிழ் மரபில் கடலணங்கு என்றும் சொல்லப்படுகிறது. இதற்கான மரபு பட்டிணப் பாலையில் காண முடிகிறது. மணிமேகலைத் தெய்வமும் கூட கடலிலிருக்கும் காவல் தெய்வம் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. மணிப்பல்லவத் தீவை காவல் புரிபவளாக தீவத் திலகை இருப்பதுவும் கவனிக்கப்படக் கூடிய ஒன்று. இயற்கை நிகழ்வுகளை மனித நடத்தைகளாகவும் மனித நடத்தைகளை இயற்கை நிகழ்வுகளாகவும்  ஒன்றோடு ஒன்று பதிலிடப்படுவது பண்பாட்டு விளக்கங்களாக அமையக் கூடியது. சமூகமும் அரசாங்கமும் அறமற்ற [ஒழுங்கற்ற] செயல்களை செய்வதனால் மழைவரட்சி கடல் சீற்றம் உள்ளிட்ட பேரிடர்கள் வரும் என்பது சமய மெய்மை வாதிகளின்  எடுத்துரைப்புகள் என்றாலும் இது மனித சமூக உளவியலோடு தொடர்புடையது.
                                                          பேரிடருக்கான காரணங்கள்
மண்ணும் விண்ணும் அரசனின் ஆளுகைக்கு உட்பட்டது. இவற்றில் நிகழும் நன்மை, தீமை இவையிரண்டும் அரசனையேப் போய்ச் சேரும், என்பது மட்டுமல்ல இந்நிகழ்வுகளுக்கான காரணம் அரசனின் செயல்களாகும்.
                                       கோநிலை திரிந்தால் கோள் நிலையும் திரியும்
மனித நடத்தைகளை இயற்கை நிகழ்வுகளாக பதிலிடுதல் என்பது பழங்கால தமிழ் மரபில் முறைப் படுத்தப்பட்ட சிந்தனையாக இருந்தது. இயற்கையை போல செய்யும் தொன்மையான பாவனை சடங்கை எடுத்துக் கொண்டாலும் சரிதான் இத்தகைய பதிலீட்டு உருவகங்கள் மனித வாழ்வின் நீக்க முடியாத சாரமாக இருக்கிறது. மீத்தொல் மனிதர்களால் தற்செயலாக நிகழத்தப்பட்ட இப்போலச் செய்தல் தொல் மெய்மை மரபில் இக்கருத்தாக்கம் விரிவுபடுத்தப்பட்டு நிலைப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக எழுத முடியும் என்றாலும் ஆய்வுப் பொருளின் தேவைக் கருதி சுருக்கமாக விளக்கப்படுகிறது.
உலகத்தில்  உள்ள எல்லாவகையான நன்மைகளையும் பெற்று பசியும் பிணியும் நீங்கி நாடு வளம் சுரந்து மக்கள் மிகுந்த நலம் பெற்று இருப்பதற்கான காரணம் அவர்கள் கடைபிடிக்கும் நந்நெறி ஒழுக்கங்களாகும். இவ்வாறல்லாமல் மக்கள் அறநெறி தவரி தீய ஒழுக்கங்களை மேற்கொள்வார்களாயின், மழைப் பெய்யாமல் நாடு வரண்டு பசியும் பிணியும் மிகுந்து மக்கள் துன்புறுவார்கள். மக்கள் நல்லொழுக்கத்தில் நிலைத்திருப்பதற்கு அரசனின் செம்மையான ஆட்சிமுறையே காரணம். எனவே இவ்வுலகில் நிகழும் நன்மை=தீமை இவ்வனைத்திற்கும் அரசனின் செயல்களே காரணம் என்று அறவோராகிய சான்றோர் வகுத்தளித்தக் கொள்கையாகும். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் இவ்வைம்பெரும் பூதங்களும் நன்மை-தீமை ஆகியவற்றை அரசனுடைய செயல்பாடுகளை பொருத்தே விளைவிக்கின்றன. என்பது அறவோரின் கொள்கையில் மிக முக்கியமானது. இக்கால மனித நலச் சிந்தனையிலிருந்து விலகி விட்ட அறிவியல் கொள்கை படி இது மூடநம்பிக்கையாக்க் கூட தோன்றலாம், ஆனால் நாட்டு மக்களின் நலவாழ்வை நெறிப்படுத்துதல் என்கிற வகையில் பழங்கால அறவோரின் இக்கருத்தாக்கம் கவனிக்கத்தக்க ஒன்று. படைப்புக் கடவுள் என்னும் கருத்தாக்கத்தை மறுத்து இயற்கை விதிகளை தம்மளவில் அலந்து அறிந்து சொன்ன பண்டைய அறிவியல் அல்லது பகுத்தறிவு சமயவாதிகளால் முன் வைக்கப்பட்ட கருத்தாக்கம் இது என்பது நமது கூடுதல் கவனத்திற்குரியது.
கோன்நிலை திரிந்திடிற்  கோள்நிலை திரியும்
கோள்நிலை திரிந்திடின் மாரி வறங்கூரும்.  (மணிமே - 7: 8-9)
என்று மமணிமேகளைக் காப்பியம் எடுத்துரைக்கிறது. சங்கப் புலவர்களால் உருவாக்கப்பட்ட இக்கருத்தாக்கம் குறைந்தது காப்பிய மரபு வரை மிகத் தீவிரமாக சொல்லப்பட்டிருக்கிறது. ஐம்பெரும்=ஐஞ்சிறும் காப்பியங்களை ஆக்கியோர் அனைவரும் படைப்புக் கொள்கையை கடுமையாக மறுத்தோர் என்பது குறிப்பிடத்தக்கது.
மனித நல வாழ்வை முதன்மைப் படுத்தி நெறிப்படுத்தும் ஓர் உயர் மரபின் இக்கருத்தாக்கம் பின்பற்றுவதற்குரியது.
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு  (குறள் - 558)
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.  (குறள் - 559)
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.  (குறள் - 560)
கோன்நிலை திரிந்திடிற் கோள்நிலை திரியும்
கோள்நிலை திரிந்திடின் மாரி வறங்கூரும்.  (மணிமே - 7: 8-9)
முடிகெழு வேந்தர் மூவ ருள்ளும்
படைவிளங்கு தடக்கைப் பாண்டியர் குலத்தோர்
அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம்
பழவிறல் மூதூர்ப் பண்புமேம் படுதலும்
விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும்
ஒடியா வின்பத் தவருடை நாட்டுக்
குடியும் கூழின் பெருக்கமும் அவர்தம்
வையைப் பேரியாறு வளஞ்சுரந் தூட்டலும்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிதலும்  (சிலப் - மதுரை-23. கட்டுரை)
என்னும் சிலம்பும்,
கோள் நிலை திரிந்து நாழி குறைபடப் பகல்கள் மிஞ்சி
நீணிலம் மாரி யின்றி விளைவஃகிப் பசியும் நீடிப்
பூண்முலை மகளிர் பொற்பிற் கற்பழிந் தறங்கண் மாறி
ஆணையிவ் வுலகு கேடாம் அரசுகோல் கோடின் என்றான். (சிந்தா - 255)
என்னும் சிந்தாமணியும், கூறுகிறது.
கடும் பஞ்சமும் கடல் சீற்றமும் எற்படுவதற்கான காரணம் அரசனின் அறநெறிப் பிழைகளேன்பதனை மேலேக் காட்டப்பட்ட எடுத்துக்காட்டுகளிலிருந்து அறியலாம். இதனை விரிவாக விவரிக்கும் மணிமேகலைக் காப்பியத்திலிருந்து பூம்புகார் அழிவிற்கு காரணமான ஒன்றை மட்டும் விளக்குவது தேவையானது. 
சோழ அரசனின் ஒரேயொரு வாரிசான உதயகமரன் கொல்லப்பட்டதனால் சோழன் நெடுமுடிக் கிள்ளி இந்திரனுக்கு விழா எடுப்பதை மறந்து விட்டான். இதனால் இந்திரன் கோபன்கொண்டு சபித்தான். நாக நாட்டு இளவரசி நாகினியான பீளிவலையோடு காதல் கொண்ட அரசன் அவளுடைய நினைவிலே மூழ்கி விட்டதாலும் மணிமேகலை தெய்வத்தின் நெடுமொழியான சாபத்திற்கும் ஆளானான். நாட்டு நலத்தில் கவனம் செலுத்தாமல் தன் சொந்த நலத்தில் கவனம் செலுத்தியதனால்  மேற்கண்டோரின் சாபத்திற்கு உள்ளானான். இதனால் கடும் பஞ்சமும் கடல் சீற்றமும் வந்து பூம்புகாரை அழித்தது, என்பது இக்காப்பியத்தின் கருத்தாகும். 
                                            பேரிடர் காலத்து அரசாங்கப் பணிகள்
பேரிடர் காலத்தில் நாட்டு மக்களுக்கு அரசு நிருவாகம் உதவி செய்வது ஒன்றும் புதிதல்ல. இது அரசமைப்புத் தோன்றிய காலம் தொட்டு நடைபெறக் கூடியதாகும் நாட்டு மக்களுக்கு பணிவாய்ப்புகளை ஏற்படுத்துதல், பசிப் பிணியைப் போக்க அற அட்டில் சாலை அமைத்து[Cominity Kitchen] உணவு வழங்குதல்,  நகரம் பாதிக்கப்பட்டிருந்தால் சான்றோரையும், அறவோரையும், பொதுமக்களையும் மாற்று நகரத்தை உருவாக்கி அங்கு குடியமர்த்துதல் போன்றவற்றை பழங்கால தமிழக அரசர்கள் செய்துள்ளதை பழந்தமிழ்  இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. இனி இவ்வகையான எடுத்துரைப்புகள் குறித்து விளக்குவது இன்றியமையாததாகிறது.
                       அட்டில்சாலையும் [Cominitykitchen] அருந்துனர்சாலை [Cominity dainninghall]
பேரிடர் காலம் மனித சமூகத்திற்கு பெரும் சவாலாக அமைவது. அச்சமும் பதட்டமும் இவற்றோடு மக்களை முதலில் தாக்குவது வறுமையும் கூட. இதனால் குற்றச் செயல்களும் உயிரிழப்பும் சாதாரணமாக நடக்கும்.  உயிர் பலியை தடுக்க வேண்டியது ஆளும் அரசருக்குரிய முதன்மை கடமையாகும். இக்காலங்களில் உணவளித்து மக்களின் பசிப் போக்கி காப்பாற்றும் முயற்சியை அரசர்கள் செய்துள்ளனர். கொரொனா காலத்தில் மக்களின்  சமுதாய சமையல் கூடம் Cominitykitchen அமைத்து அனைத்து கட்சியினரும் சேர்ந்து சமைத்து பொதுமக்களுக்கு உணவை வழங்கியதை கேரள அரசு செய்தது.  இந்தியத் துணைக் கண்ட வரலாற்றில் இதற்கான முன் மரபுகள் உண்டு. புத்த அரசனான நந்தன் கி.மு. நான்காம் நூற்றாண்டில் தன் தலை நகரான பாடலிபுரத்தில் பஞ்சம் ஏற்பட்ட போது அரசாங்க செலவில் பொது சமையல் கூடம் வைத்து அனைத்து மக்களுக்கும் உணவளித்தான். இதனால் சாணக்கியரால் அம்மன்னனின் ஆட்சியை கவிழ்க்க முடியவில்லை என்று கேள்விப்படுகிறோம். இந்நிகழ்வை கொண்டு கி.மு. முதலாம்நூற்றாண்டில் வாழ்ந்த அசுவகோசர் சவுந்திரியானந்தம் என்கிற முதல் சமச்கிருத நாடக நூலை எழுதியுள்ளார். உண்மையில் தமிழக மூவேந்தர்கள் தத்தம்  தலை நகரங்களில் பொதுமக்களுக்கு உணவளிக்கும் பொதுசமையல் கூடங்களை வைத்திருந்தனர். இக்கூடம் அட்டில் சாலை என்று பழந்தமிழ் இலக்கியங்கள் குறிக்கின்றன. குறிப்பாக சேர நாட்டிலும் சோழ நாட்டிலும் பஞ்ச காலத்து உணவுக் கூடங்கள் சிறப்பாக இயங்கின. மழைப் பொழிவிற்கு காரணமான வெள்ளிக் கோளானது வட திசையிலிருந்து விலகி கடும் வெப்பத்தை உண்டாக்கி அதன் விளைவாக நாடு வரண்டு பஞ்சம் ஏற்பட்டாலும் அரசாங்க சேமிப்பிலிருந்து உணவை அளித்து மக்கள் துயர் நீக்கினான் சேர அரசன். வலையல் அணிந்த மகளீர் நெல்லை  உறலிலிட்டு உலக்கையால் குற்றி புடைத்து அரிசியை உலையிலிட்டு  சோற்றை வடித்து பொதுமக்கள் பசியாற உணவு வழங்கப்பட்டது. உணவை உண்ட அனைவரும் சேர அரசனை வாழ்த்தி கொண்டே சென்றனர். என பதிற்றுப்பத்து எடுத்துரைக்கிறது. இவ்வாறாக உணவு சமைக்கும் கூடத்திற்கு அட்டில் சாலை என்று பெயர்.
          உண்மருந் தின்மரும் வரைகோ ளறியாது
          குரைத்தொடி மழுகிய வுலக்கை வயின்றோ
          றடைச்சேம் பெழுந்த வாடுறு மடாவின் 20
          எஃகுறச் சிவந்த வூனத் தியாவரும்
          கண்டுமதி மருளும் வாடாச் சொன்றி
          வயங்குகதிர் விரிந்து வானகஞ் சுடர்வர
          வறிதுவடக் கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி
          பயங்கெழு பொழுதோ டாநிய நிற்பக் 25
          கலிழுங் கருவியொடு கையுற வணங்கி
          மன்னுயிர் புரைஇய வலனேர் பிரங்கும்
          கொண்டற் றண்டளிக் கமஞ்சூன் மாமழை
          காரெதிர் பருவ மறப்பினும்
          பேரா யாணர்த்தால் வாழ்கநின் வளனே. 30
[பதிற்25, 18-30.]
மழை மக்களின் பசியைப் போக்க மறந்தாலும் மன்னன் மறப்பதில்லை என்பது இதன் கருத்து.
பூம்புகாரில் புத்தப் பள்ளிக்கு பக்கத்தில் சமுதாய சமையல் கூடமான அட்டில் சாலையும் பொதுமக்கள் உண்ணுவதற்குரிய உணவுகூடமான அருந்துனர்சாலையும் இருந்தது என மணிமேகலைக் காப்பியம் எடுத்துரைக்கிறது.
பொருள் புரி நெஞ்சின் புலவோன் கோயிலும்
அருள் புரி நெஞ்சத்து அறவோர் பள்ளியும்
அட்டில் சாலையும் அருந்துநர் சாலையும்
கட்டு உடைச் செல்வக் களிப்பு உடைத்து ஆக
[மணி காதை22]
நீராடிய ஆண்யானை போல துணிக் கட்டி கவிழ்க்கப்பட்ட சோற்றுப் பானையிலிருந்து வடியும் கொழுப்பு நிரைந்த கஞ்சி தெருவெங்கும் ஆறுபோல பாய்ந்தது. அதை மிதித்து கொண்டே மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து உணவை வாங்கி செல்வதனால் அவ்விடம் சேற்று வயல் போல உருமாறியது. இத்தகைய புகழ்வாய்ந்த அட்டில் சாலை புத்தப் பள்ளிகு பக்கத்தில் பூம்புகாரில் இருந்தது என பட்டிணப் பாலை கூறுகிறது.
அறநிலைஇய அகனட்டிற்
சோறுவாக்கிய கொழுங்கஞ்சி
யாறுபோலப் பரந்தொழுகி
ஏறுபொரச் சேறாகித்
தேரொடத் துகள் கெழுமி
நீறாடிய களிறுபோல
வேறுபட்ட வினையோவத்து
வெண்கோயில் மாசூட்டுந் ... 50

தண்கேணித் தகைமுற்றத்துப்
பகட்டெருத்தின் பலசாலைத்
தவப்பள்ளித் தாழ்காவின்
[பட்40-52.]
புத்தப் பள்ளிக்கு பக்கத்தில் பொது மக்களுக்கு உணவளிக்கும் அட்டில் சாலையிருந்தது என்பதன் பொருள் புத்த அறவோர் பஞ்ச காலத்தில் மக்களுக்காக உணவளிக்க மேற்கொண்ட முயற்சியை காட்டுகிறது.
                                                      தலைநகர் உருவாக்கம்
இயற்கைப் பேரிடரை எதிர்கொண்டு நம்மை காத்துக் கொள்ளும் பயிற்சியில் நவீன சமூகம் இப்போதுத்தான் மெல்ல மெல்ல ஈடுபட்டு வருகிறது. ஆனால் கடந்த ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே [இந்த கால வரையறை முடிவான கருத்தல்ல]  பேரிடரை வெற்றிகரமாக எதிர்க் கொள்ளுவதற்கான பயிற்சியும் அனுபவமும் பழந்தமிழருக்கு இருந்தது. தொலை நோக்குடைய திட்டங்களை முன்வைத்து பழந்தமிழரசர்கள் கடனாற்றியுள்ளனர், என்பதற்கு பூம்புகார் அழிவை முன்கூட்டியே அறிந்து பூம்புகார் நகர அமைப்பு போலவே காஞ்சிபுரத்தை உருவாக்கியதை பெருமையோடு குறிப்பிடலாம்.  இது குறித்து சுருக்கமாக விளக்குவது இன்றியமையாத்தாகிறது.
சோழ அரசன் நெடுமுடிக் கிள்ளி பூம்புகாரை தலைநகராக கொண்டு சோழ நாட்டை ஆண்டுகொண்டிருந்த போது அவன் மகன் உதயக்குமரன் கொல்லப்பட்டதனாலும் நாக இளவரசியோடு கொண்டிருந்த காதலாலும் தன் கடமையை மறந்து இந்திரவிழா எடுக்காமல் துயரத்திலிருந்தான். அப்போது கடல் மேல் நடந்து வந்து சாரணன் ஒருவன் பூம்புகாரின் மேல் இந்திர சாபமும் மணிமேகளைத் தெய்வத்தின் நெடு மொழியும் உள்ளது. இக்காலத்தில் இந்திரவிழா செய்யத் தவரினால் பூம்புகாரை கடல் கொள்ளும் என்று சொல்லிச் சென்றான். பூம்புகார் அழிவை தற்போது தடுக்க முடியாது என்பதை அறிந்த அரசன் அந்நகரத்திலிருந்த அறவோர், சமயக் கணக்கர் உள்ளிட்ட சான்றோரை அழைத்து நீங்கள் அனைவரும் வஞ்சி மாநகரத்திற்கு சென்று பாதுகாப்பாக இருங்கள் பிறகு நம் நாட்டிற்கே உங்களை அழைத்துக் கொள்கிறேன் என்று சொல்லி சான்றோர் அனைவரையும் வஞ்சி மாநகரத்திற்கு அனுப்பிவைத்தான். இக்காலகட்டத்தில் நெடுமுடிக் கிள்ளியும் இறந்து விட்டான். அதனுபின் ஆட்சிக்கு வந்த இளங்கிள்ளி பூம்புகார் நகரத்தை போலவே காஞ்சிபுரத்தை அமைத்து பூம்புகாரிலிருந்த மக்களையும் உடமைகளையும் அப்படியே காஞ்சிபுரத்திற்கு கொண்டுச் சென்றான். இத்தருணத்தில்தான் பூம்புகார் கடலுள் மூழ்கிவிட்டது. காஞ்சிபுரத்தை சோழ நாட்டுத் தலை நகரமாக்கி முதல் முதலாக ஆட்சியாண்டவன் இளங்கிள்ளி ஆவான். காஞ்சிபுர கட்டுமானத்தில் புத்தப் பள்ளிகளும் கட்டி முடிக்கப்பட்டதை அறிந்த மாதவியும் சுதமதியும் வஞ்சியிலிருந்து காலாற நடந்துவந்து புதிய சோழ தலை நகரத்தை அடைந்தனர். சமயக் கணக்கரோடு உரையாட வஞ்சி மாநகரம் சென்ற மணிமேகலை அங்கிருந்த தனது தந்தை வழி பாட்டனான மாசாத்துவனை சந்தித்து பேசி  மணிமேகலா தெய்வம் மற்று அது பொறாஅள்
அணி நகர் தன்னை அலை கடல் கொள்க என
இட்டனள் சாபம் பட்டது இதுவால்  25-200
கடவுள் மா நகர் கடல் கொள பெயர்ந்த
வடி வேல் தடக் கை வானவன் போல
விரிதிரை வந்து வியல் நகர் விழுங்க
ஒரு தனி போயினன் உலக மன்னவன்
அருந் தவன் தன்னுடன் ஆய் இழை தாயரும்
வருந்தாது ஏகி வஞ்சியுள் புக்கனர்
பரப்பு நீர்ப் பௌவம் பலர் தொழ காப்போள் மேற்சொன்ன விவரங்களை அறிந்து கொண்டு காஞ்சிபுரத்திலும் நிலவிய பஞ்சத்தை அறிந்து  உள்ள மக்களுக்கும் உணவளிக்கவும் புத்த சமயப் பணிகளை செய்யவும்  வந்தாள்.  ஆருயிர் மருந்தே அ நாட்டு அகவயின் கார் எனத் தோன்றி காத்தல் நின்கடன் என-இவ்வாறு பசிப்பிணியுழந்து சாதலுறும் அரிய உயிரினங்களுக்கு அமிழ்தத்தைப் போன்ற நீ இப்பொழுது அந்தக் காஞ்சி நாட்டகத்தில் முகில் போலத் தோன்றி அவற்றின் பசிப்பிணி அகற்றிக் காப்பது நினக்குக் கடமைகாண் என்று; அருந்தவன் அருள ஆயிழை வணங்கி-செய்தற்கரிய தவத்தை மேற்கொண்டவனாகிய அம்மாசாத்துவான் திருவாய்மலர்ந்தருள அது கேட்ட மணிமேகலை அவ்வேண்டுகோட் கிணங்கி அவனுடைய திருவடிகளிலே வீழ்ந்து வணங்கி விடை கொண்டவளாய் என்க.என பெருமழைப் புலவர் இவ்வாறு உரைப்பது கண்டும் அறியமுடிகிறது. தனது பாட்டன் மாசாத்துவன் இடமிருந்து விடைபெற்ற மணிமேகலை வஞ்சி மாநகரத்திலிருந்து வான் வழியாக காஞ்சிபுரத்தில் வந்திரங்கி மேற்கு திசையை நோக்கி வணங்கிவிட்டு வடக்கு வாசல் வழியாக அறவோர் வணத்திற்குள் சென்ற மணிமேகலையை கண்ட கஞ்சுகனான அரசப் பணியாளன்  இளங்கிள்ளியிடம் சென்று  அரசே அமுத சுரபி கொண்டு உணவளித்து பசிப் போக்க மழை போன்ற மணிமேகலை இந் நகரத்திற்கு வந்திருக்கிறாள் என்று சொன்ன உடன் கந்தில் பாவை சொன்ன வாய்மைகள் ஒவ்வொன்றாக நிகழ்கிறது என சொல்லி மணிமேகலையை வரவேற்றான்.  சோழ அரசன் இளங்கிள்ளி காஞ்சிபுரத்தில் மணிமேகலையை வரவேற்று வணங்கி புத்தப் பள்ளி குறித்த விவரங்களை எடுத்துச் சொன்னான் என்று மணிமேகலைக் காப்பியம் எடுத்துரைக்கிறது.
            பேரிடர் பழந்தமிழ் பண்பாட்டின் நடத்தையும் கற்கையும்
மனிதனால் கட்டுப்படுத்தமுடியாத இயற்கைப் பேரிடர் ஏற்பட்ட காலத்திலும் பழங்கால முடியரசர்கள் குடிமக்களுக்கு நல்வாழ்வை உறுதிப்படுத்தினர். மக்களால் மதிக்கப்படும் அறவோரை வல்லுனராக  Indilagence அரசு அங்கிகரிப்பது, அவர்கள் காட்டும் நெறிமுறைகலை கொண்டு திட்டங்களை வகுத்தளிப்பது,  மக்கள் நல்வாழ்வுப் பணியிலீடுபடும் தன்னார்வத் தொண்டர்கள் சமயநிறுவனத்தை சார்ந்தோராக இருந்தாலும் அவர்களை ஊக்கப்படுத்துவது. பேரிடர்காலத்தில் அரசு பொதுமக்களுக்காக பொதுசமயல்கூடங்களை விரிவாக அமைத்தல், அமர்ந்து உண்ணுவதற்கான பொது கூடங்களையும் அமைத்தல், இத்தகைய சிறப்புவாய்ந்த பணியில் ஆர்வமுள்ள பொதுமக்களையும் கண்டறிந்து ஈடுப்படுத்துதல், உதவும் உள்ளங்களை கண்டறிந்து அவர்கள் தரும் பொருள்களையும் பெற்று மக்களுக்கு வழங்குதல், சான்றோர், மூத்தோர், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் பாதுகாத்தல் உள்ளிட்ட பலவற்றை திட்டமிட்டு பழந்தமிழ் அரசுகள் செய்தன. அண்டைநாட்டு அரசும் பேரிடர்காலத்தில் புகலிடம் தேடி சென்றோரை அரவணைத்து தாய்நாட்டில் இருந்ததுபோலவே கட்டிட அமைப்புகளை உருவாக்கி அறவோரை பாதுகாத்தனர் என்பது இக்கால அகதிகளை நடத்தும் அரசுகள் கற்றுக் கொள்ளவேண்டியதாகும். புதிய நகரத்தையே உருவாக்கி அங்கு பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரையும் குடியமர்த்துவது இதனோடு கவனிக்கத்தக்கது. கொரோனா என்னும் செயர்க்கைப் பேரிடர் மக்கள் தொகைப் பெருக்கத்தினால் வாங்கும் சக்தியற்ற மக்கள் கூட்டம் பெருகுவதனால் சந்தை பொருளாதாரம் பாதிக்கிறது என்னும் தப்பெண்ணம் கொண்ட அதிகார குழுக்களால் ஏற்படுத்தப்பட்டது.
இப்போது இயற்கைப் பேரிடர் என்றால் புயலும் அதனால் உருவாகும் வெள்ளமும் தான்.  அதுவும் கூட வெள்ளமெல்லாம் வடிந்து நகரம் நல்லதோர் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதை அறிந்தப் பிறகுதான் ஆட்சியாளர்கள் ஆகாயமார்கமாக வந்து சிங்கப் பார்வை பார்த்து சேதாரத்தை சொல்ல ஆதாரம் தேடுகின்றனர். பொதுமக்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்த மக்களோடு மக்களாக இருந்து பாடுப்பட்ட பழங்கால முடியரசின் செயல்கள் பல மடங்கு வியப்பையும் பெரமித்ததையும் தருகிறது.
குடிமக்களின் படுக்கையரை குளியலரை தொடங்கி உடலில் உள்ள மரபணுக்கள் வரை தகவலாக சேகரித்து கண்காணித்து வரும் இக்காலகட்டத்தில் கொரொணா என்னும் செயர்க்கையான பேரிடரை உலக நாடுகள் முன் கூட்டியே அறியாமல் விட்டது அதிர்ச்சியையும், வேதனையும் ஏற்படுத்துகிறது. நாட்டுமக்களால் உழைத்து பொருளாகவும் பண்டமாகவும் வரியாக வழங்கப்பட்ட செமிப்பிலிருந்துதான் பழங்கால அரசர்கள் பேரிடர்காலத்தில் பேருதவி செய்தனர். இக்காலத்தில் ஒவ்வொரு நாடும் உள்நாட்டு உற்பத்தியை பெருக்குவதன் மூலமே தற்சார்பு பொருளாதார வலிமையை பெறமுடியும்.
                                            
இயற்கைப் பேரிடரையே எதிர்க் கொள்வதற்கான பயிற்சியும் திட்டங்களும் பரவலாக இல்லாத சூழலில் மனிதர்களை அழிக்க செயர்க்கைப் பேரிடரை உருவாக்கியுள்ளனர் வள்ளாதிக்கவாதிகள். சமத்துவம் சகோதரத்துவம் சுதந்திரம் ஆகிய முப்பெரும் கொள்கைகளை ஏற்றுக் கொண்டதாக கடந்த முந்நூறு ஆண்டுகளாகவோ அல்லது அதற்கு குறைவாகவோ ஆன காலத்தில் மார்தட்டிக் கொள்ளும் வளர்ந்த உலக நாடுகளின் நிலை என்ன என்பது முக்கியத்துவம்வாய்ந்த கேள்வியாகும். சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம் ஆகிய முப்பெரும் கொள்கையை நவீனசமூக அரசியலில் ஆரம்பகாலத்தில் பெரும் செல்வாக்கு செலுத்தியது என்றாலும் சந்தை பொருளாதாரத்தின் பெருவெளி வரிவடையவிரிவடைய மனிதம்சார்ந்த இக்கொள்கையின் மதிப்பு சரிந்துவிட்டது. இப்பேரிடரை கையாளுவதில் வளர்ந்த அனைத்து நாடுகளும் படுதோள்வியடைந்துவிட்டன. பொருள்வளம்சார்ந்த தொழில்வாய்ப்புகளும், அவற்றை கையாளுவதற்கான நெறிமுறைகளும் கட்டுப்படுத்தும் அதிகாரமும் வளர்ந்தநாடுகளின் அரசுகளிடம் இல்லை மாறாக தனியார் முதலாளிகளிடம் உள்ளது. அமரிக்கா போன்ற நாடுகளில் அரசலுவலகங்களில் மக்களுக்கான பொதுநிருவாகன் நடப்பதில்லை இலாபி செய்யும் இடமாகவே அரசுக் கட்டிடங்கள் இருக்கின்றன. அரசுப் பணியாளர்கள் என்னும் பெயரில் இரகசிய கண்காணிகளே உளவுகின்றனர். ஒருப் பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம், அமரிக்கப் பேர்ரசின் இரகசியங்கள் போன்ற நூல்கள் இக்கருத்தை வெளிப்படுத்துகின்றன. பன்னாட்டு நிதி நிறுவனம் [I.M.F.] கூட அரசு பொதுத் துறைகளையும் பணிகளையும் குறைத்து தனியார் துறைகளையும் பணிகளையும் பெருக்குவதற்கே நிதி ஒதுக்கீடு செய்து ஊக்கப்படுத்துகிறது. சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் ஆகிய முப்பெரும் கொள்கையை ஏட்டளவிலாவது ஏற்றுக் கொண்ட நாடுகள் மேற்கண்ட இந்நிறுவனத்தின் இத்தகைய கொள்கையை மாற்றினால் அரசு என்கிற கருத்தாக்கம் அதன் உண்மையான பொருளை எட்ட முயற்சிக்கும். இல்லையென்றால் அதன் கண்காணி நிலையும் விரைவில் உதிர்ந்துபோகும்.காரல் மார்க்கச் சொல்லும் முதலாளிய சர்வாதிகார அரசுகளைத்தான் கண்காணி அரசுகள் என்று சொல்லுகிறோம், காரல்மார்க்சின் உதிரும் அரசுகள் என்கிற கட்டுரை இக்கருதுகோளை விரிவாக விவாதிக்கிறது.  
சமத்துவம், சகோதரத்துவம்,  சுதந்திரம் ஆகியமுப்பெரும் கொள்கை நவீனசமூகத்தின் கண்டுபிடிப்பல்ல, பழங்குடி சமூக அமைப்பிலிருந்து வரித்துக் கொள்ளப்பட்டவை. உலகவரலாற்றில் 2600.ஆண்டுகளுக்குமுன்பே இக்கொள்கையைபரப்ப கவுதம புத்தர் சங்கம் என்கிற பேரமைப்பை தொடங்கினார். சமத்துவமாக சார்ந்துவாழ்வதின் பயனையும், சகோதரத்துவமாக மாற்றங்களை எற்றுக் கொள்ளும் பக்குவத்தையும், சுதந்திரமாக துன்பங்களை எதிர்கொள்ளும் துணிவையும், பொதுமக்களின் துயர்துடைக்கும் கரணையையும் சங்கத்தோர் கற்றுக் கொண்டு கற்பித்தனர்.
இந்தியத் துணைக் கண்டத்திற்கான அரசியல் அமைப்பும் சமத்துவம், சகோதரத்துவம்,சுதந்திரம் ஆகியமுப்பெரும் கொள்கையை மிகமிக அடிப்படையாக கொண்டது. புத்தநேறியிலிருந்தே இக்கொள்கைகளை எடுத்துகொண்டதாக அண்ணல் அம்பேத்கர் நாடாளமன்றத்தின் நேர் உரையாடலிலும், எழுத்திலும் குறிப்பிட்டுள்ளார். பொதுத் துறை ஒன்றைக் கூட புதிதாக உருவாக்காத தற்கால மத்திய அரசு 23. இருபத்துமூன்று பொதுத் துறைகளை தனியாருக்கு விற்றுவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மக்கள்நலன்சார்ந்த முப்பெரும் கொள்கையை வளர்ந்த நாடுகள் கைவிட்டது பொலவே இந்தியத் துணைக் கண்ட அரசும் கைவிட்டுவிட்டது என்பதைத்தான் மேற்கண்ட செய்தி உட்பட நமக்கு தெரிவிக்கிறது. பஞ்சகாலத்தில் குற்றங்கள் பெருகுவது இயல்பு என்பதை அறிந்த கறிகால் சோழன் வணிகப் பாதையில் கொள்ளையடித்த கூட்டத்தாரை கண்டுபிடித்து அவர்களுக்கு முறையாக பயிர்ச்சியளித்து சுங்கச் சாவடியில் அரசுப் பணியாளர்களாக அவர்களை அமர்த்தினான் என்று பொறுனராற்றுப் படை என்னும் பழந்தமிழ் நூல் கூறுகிறது. இக்காலத்தில் சுங்கச் சாவடிகள் அனைத்தும் தனியார்வசம் இருப்பது குறிப்பிடத்தக்கது. புத்தப் பிக்குனியான மணிமேகலை முதல் பெண் அரசியல் கைதியாக சிறைக்குள் வைக்கப்பட்டநிலையில் அங்கு உள்ள கைதிகளுக்கு அறச் சிந்தனைகளை எடுத்துரைத்து சிறைகைதிகள் அனைவரையும் அறவோராக மாற்றி சிறைக் கூடத்தை அறக் கோட்டமாக வடிவமைக்கிறாள். இதுவும் பேரிடர்காலத்தில் நடைபெற்ற பணி.  இந்தப் பணிகுறித்தும் மணிமேகலைக் காப்பியம் எடுத்துரைக்கிறது. 
            பழந்தமிழ் பண்பாட்டுச் சொல்லாடலில் அறவோர்
பழந்தமிழரின் மிக தொன்மையான பண்பாட்டை தொல் இலக்கியங்கள் வழி பெரும்பாலும் அறியமுடிகிறது. பழங்கால கல்வெட்டுகளும் அகழாய்வுகளும் இலக்கியத் தரவுகளை உறுதிப்படுத்த துணைப் புரிகின்றன. பழந்தமிழ் இலக்கியங்களை ஆக்கியோர் வினையின் நீங்கிய முனிவர் ஆகிய அறவோர் பெருந்தொகையினராவர். எட்டுதொகை-பத்துப்பாட்டு, பதினெண்கீழ்கணக்கு, தொல்காப்பிய இலக்கணம் உட்பட ஐம்பெரும்-ஐஞ்சிறும் காப்பியங்களை வாசிக்கிறபோது அறம்சார்ந்த பழந்தமிழரின் பண்பாடு தொடர்ச்சியாக பேணப்படுகிறது. இதன் காரணமாக இவற்றை பழந்தமிழ் இலக்கியங்கள் என சுட்டமுடியும். இவ்வனைத்து இலக்கியங்களையும் ஆக்கியோர் புத்த-சமண-ஆசீவக மரபில்வந்த அறவோர் என்பது குறிப்பிடத்தக்கது.
பழந்தமிழரின் மிகத் தொன்மையான அரசியல் பண்பாட்டை வீரநெறிப்பட்டதென்றும், இயற்கைநெறிப்பட்டதென்றும் கருத்தினங்கள் வகைப்படுத்தி விளக்கப்பட்டுள்ளது. தமிழை ஒத்த மிகப் பழமையான கிரேக்கம், சுமேரியம், எகிப்த் உள்ளிட்ட இலக்கியங்கள் வீரநிறியை அடுத்ததாக இறைவனை ஏற்றுக் கொண்ட சமயநெறியினை பாடுப் பொருளாக கொண்டுள்ளன.
வீரத் தலைவர்களின் வீரசாகசங்களை புகழ்ந்துரைத்து போர்செய்யத் தூண்டி தொடர்ந்து அரசர்களை போர்நெறியில் நிலைப்படுத்துவதே வீரநெறி இலக்கியமாகும். இலியது, ஒடிசியில் எடுத்துரைக்கப்படும் டராய் நகரப் போரை சான்றாக கொள்ளமுடியும். சங்க இலக்கியத்தில் வரும் போர் குறித்த பெரும்பாலான பாடல்கள் போரினால் உண்டாகும் வெருமையையும் துன்பங்களையும் நிலையாமையையும் எடுத்துக் காட்டுவதற்காக மட்டும் போரின் கடுமை விதந்தோதப்படுகின்றன. செவியறிவுருத்துறையில் வரும் பாடாண் திணைப் பாடல் எண்ணிக்கையையும், காஞ்சித் திணைப் பாடல் எண்ணிக்கையையும் கொண்டு இக்கருத்தை அறியமுடியும்.பொதுமக்கள் குடியிருக்கும் ஊருக்கு வெளியில் களம் அமைத்து போர்புரியவேண்டும் என்பது தொடங்கி பல அறநெறிகள் போரின் போதும் பின்பற்றவேண்டும் என்பதை கொண்டும் தமிழரின் அறம் சார்ந்த அரசியல் பண்பாட்டை அறியமுடியும்.  இன்பத்திற்கான அழகியலாக இயற்கையை பாடுவது இயற்கைநெறி இலக்கியமாகும். சங்க இலக்கியத்தில் மனிதசாரத்தின் புலப்பாடற்ற இயற்கை விவரிப்பை காணமுடியாது. குறிஞ்சி பூத்தது என்றால் அது வெரும் குறிஞ்சியைமட்டும் குறிக்காமல் பெண்ணை குறிக்கிறது. பெண்ணொருத்தி உடலுறவுக்கான பக்குவத்தை அடைந்து விட்டாள் என்பதைத்தான் பூத்தக் குறிஞ்சியின் படிம்மாகும். தாவரங்களின் விவரிப்பு தொடங்கி அண்டவெலி நிகழ்வு வரை உள்ள இயற்கை இயங்கியல் மனித நடத்தையாக பதிலிடப்படுகிறது. அதேபோல மனித நடத்தையும் இயற்கை இயங்கியலாக பதிலிடப்படுவதுண்டு. அரசன் தனது நெறியிலிருந்து தவரினால் பஞ்சம் கடல்கோள் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர் வரும் என்பது முன்னதற்கும், கற்புடையவர் சொன்னால் மழைப் பெய்யும் என்பது பின்னதற்கும் சான்றுகளாகும். இவைகுறித்து மேலே விளக்கப்பட்டுள்ளது. இயற்கை செயல்களின்மீது மனிதப் பண்பையும் மனித செயல்களின்மீது இயற்கைப் பண்பையும் மாற்றீடுசெய்வதன்வழி இயற்கை நியதிகளோடு ஒத்தியலுகிற நல்வாழ்வையே மக்களுக்கு எடுத்துரைத்தனர். இவ்வாறான எடுத்துரைப்புகளை செய்வோர் உலகப் படைப்புக் கொள்கையை ஏற்காத இறைமறுப்பாளர்கள் என்பதையும் புரிந்துக் கொள்ளவேண்டும். இயற்கை நெறிக் கொள்கையை ஏற்காதவர் இறைப் பற்றாளராக மாறமுடியும். சுயநலமும் சுய இன்பத்தையும் தேடும் ஒருமன அமைப்பின் தலைமையாக இறையென்னும் கருத்தாக்கம் தேவையான ஒன்று. இத்தகைய இறைப் பற்றாளர்களான பார்ப்பனப் புலவர்களின் பாடல்களும் இத்தொகுப்பில் சிறிது உண்டு. உணவு உடை, நிலக் கொடை ஆகியவற்றை வேள்வி செய்வதன்மூலம் இப்பார்ப்பனர் பெற்றனர். இவையனைத்தும் அரசின் பொது வருவாயிலிருந்து அவர்களுக்கு அளிக்கப்பட்டது. அரசர்களை தொடர்ந்து போரில் ஆழ்த்துவதன்வழி இவ்வனைத்தையும் கொடையாக பெறமுடியும் என்பதை உணர்ந்த இவர்கள் போர் செயல்களை புகழ்ந்து பாடினர்.  தாயை இழந்த குழந்தைப் போல உனது பகைவர் நாட்டுமக்கள் அலரித் துடிக்கவேண்டும் என்று பரணர் போரை ஊக்கப்படுத்துகிறார். இவர் வைசேடிகவாதியாக அறியப்படுகிறார். பாலை கவுதமனார் அவருடைய மனைவியோடு சொற்கம் புகுவதற்கு ஆயிரக் கணக்கான வேள்விகளை ஆண்டுகணக்கிள் நடத்துவதற்கு சேர அரசன் ஒருவன் அரசின் பெரும்பகுதி வருவாயை செலவிட்டான் என்று பதிற்றுப்பத்து கூறுகிறது. எனினும் இறைக் கொள்கையாளர்கள் தனிப் பெரும் சமய நிறுவனமாக பழந்தமிழகச் சூழலில் குறிப்பாக மூவேந்தர் ஆட்சிகாலத்தில் உருவாகியிருக்கவில்லை. கருத்துமுதல்வாதிகளுக்கும் பொருள்முதல்வாதிகளுக்கும் தொடர்ந்து தத்துவசண்டை  நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் பொருள்முதல்வாதக் கருத்துக்களே பழந்தமிழ் இலக்கியங்களில் மேலோங்கி உள்ளன. பொருள் முதல்வாத தத்துவங்கள் பழந்தமிழ்ப் பண்பாட்டின் அடிவேராக இருப்பதனால் அறவோரின் கொள்கைகள் இப்பண்பாட்டை மேலும் செழுமைப்படுத்தின. நிலையில்லாத உலகில் அறச் செயல்களை மேற்கொள்ளுவதன்மூலமே நிலைபெறமுடியும் என்று நிலையாமைக்குள்ளும் நிலையான அறம்சார்ந்த மனிதப் பண்பை கண்டு அரசர்களுக்கு அறிவுருத்தினர்.
அதிகார வேட்கையோடு சண்டையிட்டு அயல்நாட்டு மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் அழிக்கும் அரசர்களிடம் உலகின் நிலையாமையை எடுத்துரைத்து கொடை உள்ளிட்ட அறப் பண்புகளை தேவையென வலியுருத்தினர். நிலையாமையை எடுத்துரைக்கும் நிலையிலும் உலகம் அழிந்துவிடும் என்றோ, உலகம் இறைவனால் படைக்கப்பட்டது என்றோ அறவோர் ஆன பழந்தமிழ் புலவர்கள் கூறவில்லை. இயற்கையின் ஐம்பூதங்களும் தொடர்ந்து வினைப் புரிந்துக் கொண்டிருக்கின்றன. அண்டவெளியில் உள்ள மீன்களும் கோள்களும் இயங்கி கொண்டிருக்கின்றன. இதனால் உலகில் உள்ள அனைத்து பொருள்களும் மாறிக் கொண்டிருக்கின்றன. அது மனித நடத்தையிலும் வெளிப்படுகிளது இவ்வகையான மாற்றமே நிலையாமையாகும். என்பதை கண்டு விளக்கும் அறவோரின்  இக்கருத்தாக்கத்தில் நில்லா உலகு என்னும் தொடர் மிக முக்கியமானது. இனி இதகுறித்து சிறிது விளக்கப்படுகிறது.
            நில்லா உலகு என்னும் தத்துவம்
இயற்கை இயங்கியலை புரிந்து கொண்ட நலமான வளமான வாழ்வை இவ்வுலகோருக்கு பரிந்துரைக்கும் பழந்தமிழ் புலவர்கள் நில்லா உலகு என்கிற கருத்தை அலுத்தமாக முக்கியத்துவம் தந்து உரைப்பதற்கான காரணம் என்ன?
மழையின்மை  கடல்கோள் போன்ற இயற்கைப் பேரிடரால் உலகில் உள்ள அனைத்து பொருள்களிலும் பண்புமாற்றம் அளவுமாற்றம் ஆகியன ஏற்படுகிறது இயல்புக்கு மாறான இம்மாற்றங்கள் மக்கள் வாழ்வில்  பெருந்துயரத்தை ஏற்படுத்துகிறது இப்பேருண்மையை அறிந்ததனால் நில்லா உலகு என்கிறகருத்தாக்கத்தை அலுத்தமாக முன்வைக்கின்றனர. பாண்டியர் மற்றும் சோழர்குறித்த பாடல்களில் பேரிடர் காலத்தை நினைவூட்டும் கடல் சார்ந்தப் படிமங்கள் நிலையாமையை வலியறுத்த புலவர்களால் எடுத்துரைக்கப்படுகிறது. அலையால் கடற்கரையில் கொண்டு சேர்க்கப்பட்டுள்ள மணலை விட அதிக எண்ணிக்கையில் பலமன்னர்கள் இவ்வுலகை ஆண்டு மாய்தபோதிலும் ஆண்டுகள் பல கழிந்தப் பின்னும் சில அரசர்களே மலர்தலை உலகத்தில் அவர்கள் செய்த அறச்செயல்களாலே புகழோடு வாழ்கின்றனர். என்கிறது மதுரைக் காஞ்சி. 
வெடிபடக் கடந்து வேண்டுபுலத் திறுத்த
பணைகெழு பெருந்திறற் பல்வேல் மன்னர்
கரைபொரு திரங்கும் சுனையிரு முந்நீர்த்  235
திரையிடு மணலினும் பலரே உரைசெல
மலர்தலை யுலகம் ஆண்டுகழிந் தோரே   ’ [மது.கா.]
குமரியின் தென்னிலப்பரப்பிலிருந்த பக்குறுழி ஆறும் மன்னரின் செய்கைக்கு பதிலிடப்படுகிறது.
எங்கோ வாழிய குடுமி தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே”  (புறம்-9)
இத்தகையப் பேரிடர்களை எதிர்கொண்ட அனுபவம்தான் இதுபோன்ற படிமக் காட்சிகளின் மூலம் நில்லா உலகம் என நிலையாமைக் குறித்தும் பழந்தமிழ் இலக்கியங்களில் தொடர்ந்து எடுத்துரைக்கப்பட்டுவருகிறது. சங்கம் வைத்து இலக்கிய இலக்கணங்களை தொகுக்க வேண்டியத் தேவையும்                 கூட பேரிடர் காலத்தில் உருவான பண்பாடுகளையும் அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட நிலையாமை அல்லது மாற்றம் என்னும் பேருண்மையையும் மனிதசமுதாயதிற்கு கைமாற்றவேண்டியே ஆகும். ஆசிவகம், பூதவாதம், சமணம், புத்தம் ஆகிய பொருள்முதல்வாத சிந்தனைப் பள்ளிகள் இருந்தபோதிலும் பேரிடர்காலத்தில் மக்கள் பணியாற்றியோராக புத்த அறவோரையே காணமுடிகிறது. கவுதம புத்தரின் வருகைக்குமுன்னால்வரை அனைத்து சமயத்தை செர்ந்த துறவிகள் அனைவரும் பொதுமக்களோடு அண்ணியமான மவுனசாமியார்களாக இருந்தனர். இவர்கள் உணவுத் தேவைக்காக மட்டும் எப்போதாவது ஊருக்குள் சென்றுவருவர். கவுதம புத்தர்தான் பாகுப்படுத்தப்பட்டிருந்த அனைத்து சமூகப் பிரிவு மக்களையும் ஒன்று கூட்டி அவர்களுடைய துன்ப துயரங்களை கேட்டு அதற்கேற்ப ஆலோசனைகளை எடுத்துச் சொன்னார். நாற்பத்தைந்து ஆண்டுகாலம் தொடர்ந்து மக்களின் பல்வேறு துயரங்களோடு பழகி நல்வாழ்வுக்குரிய தனது கண்டுபிடிப்புகளை சொல்லிக் கொண்டேயிருந்தார். சாதி, மொழி, பாலிணம், வர்க்கம் கடந்த மனிதநேசத்தை கருணையாக [மைத்திரி-Compation] கையளித்தார். புத்தம், சங்கம், தம்மம் என்கிற மும்மணி நடைமுறைகளை உண்டாக்கி சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் ஆகிய முப்பெரும் கொள்கையை சங்கத்தின் மூலமாக பொதுமக்கள் அனைவருக்கும் பரப்ப காரணமானார். அந்தரசாரணர் சிலாதலத்தின்மேல் நின்றுகொண்டு பொதுமக்களிடம் உரையாற்றுவதுக் குறித்து சிலப்பதிகாரமும் எடுத்துரைக்கிறது. இந்த புத்த தாபதரான அந்தரசாரிகள் மருத்துவம் விஞ்ஞானம் உள்ளிட்டவற்றிலும் தேர்ந்தவர்கள். கவுதம புத்தர் இராசகிருக மலையின்மேல் நின்றுகொண்டு அவர் கண்டறிந்த பேருண்மைகளை முதல்முதலாக தனது சீடர்களுக்கு உரைத்ததில் இவ்வுரை மரபு தொடங்குகிறது. அதுமுதல் புத்தரும் புத்த அறவோரும் ஊரு ஊராகச் சென்று பொதுமக்களை ஒருங்கிணைத்து மலைமீதோ அல்லது மேடான பகுதியிலோ நின்றுகொண்டு உரையாற்றினர். பொதுவாக தெற்காசியப் பகுதி முழுவதும் மலைகள் தோறும் பாதச் சுவடுகள் கள்மேல் செதுக்கப்பட்டிருபதை காணலாம். புத்தர் அல்லது புத்த அறவோர் அவ்விடத்திற்கு வந்துபோனதற்கான அடையாளமாகும். மணிப்பல்லவத்தில் உள்ள புத்தப் பீடிகை, சமந்தமலைக் குறித்து மணிமேகலைக் காப்பியம் எடுத்துரைக்கிறது. பொருள்கள் ஒன்றையொன்று சார்ந்து இயங்குகின்றன, உலகில் உள்ள அனைத்து பொருள்களும் வினாடிகள் தோரும் மாறிக் கொண்டேயிருக்கின்றன என்கிற கவுதம புத்தரின் கண்டுபிடிப்பு  பழந்தமிழ் இலக்கியங்களில் நில்லா உலகமாக எடுத்துரைக்கப்படுகிறது. மழைப் பஞ்சம் கடல்கோள் ஆகிய இயற்கைப் பேரிடரிலிருந்து பழந்தமிழர்ப் பண்பாட்டில் நிலையாமை கருத்தாக்கம் பேரனுபவமாகவும் இருப்பதன்வழி மனிதன் இயற்கையை கையாளுவதுக் குறித்த புரிதலை உருவாக்குவதன் தேவையிலிருந்து அறவொழுக்கம் என்னும் பொருளுடைய திணை என்னும் தம்மக் கொள்கைகள் அறவோராள் வகுத்தளிக்கப்பட்டன. சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் ஆகிய முப்பெரும் கொள்கைகளை வகுத்துக் கொண்டு புத்த அறவோர் களத்தில் பணியாற்றியதனால்தான் சாவகம் தொடங்கி இலங்கை உள்ளிட்ட பழந்தமிழகத்தில் ஏற்பட்டப் இயற்கைப் பேரிடரின் போதும் ஆருயிர் மருந்தான  உணவளித்து  மக்களை காத்தோராக புத்த அறவோர் இருக்கின்றனர்.
இக்கட்டுரையை முடிப்பதற்குமுன் இறுதியாக ஒன்றை சொல்ல விரும்புகிறேன். அரசுகளே பழந்தமிழ் இலக்கியங்களில் வரும் அரசர்கள் பின்பற்றிய அறங்களை நீங்களும் பின்பற்றுங்கள். என்ன அறம் அது எனக் கேட்பீரானால் உங்கள் நாட்டுமண்ணில் வாழும் உயிர்களுக்கெல்லாம் உண்ண  உணவு, குடியிருக்க இடம், உடுக்க உடை ஆகியவற்றை ஏற்படுத்தி தாருங்கள். இவற்றில் எது ஒன்று குறைந்தாலும் உங்கள் நாட்டிற்கு அது பேரிடராகவே அமையும்.
அறம் எனப்படுவது யாது? எனக் கேட்பின்
மறவாது இது கேள் மன் உயிர்க்கு எல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது  25-230
கண்டது இல் எனக் காவலன் உரைக்கும்
என் நாட்டு ஆயினும் பிறர் நாட்டு ஆயினும்
நல் நுதல்! உரைத்த நல் அறம் செய்கேன்
 [மணி,  காதை25, 223-232]


No comments:

Post a Comment