பனம்பழம்..
முனைவர். இரா. பெரியதுரை
நீண்ட பகல்
பொழுதையும் குறுகிய இராத்திரியையும் கொண்ட அந்தக் கோடை காலம் தான் எல்லா
காலங்களையும் விட எனக்கு மிகவும் பிடித்திருந்தது. குளிர்காலத்தின் காலைப்
பொழுதுகளும், கோடை காலத்தின்
பொன்னந்தி மாலைப்பொழுதுகளும் மனதை ஏதேதோ செய்யும். அதிலும் கிராமத்துக் கோடை காலம்
என்பது மகிழ்ச்சிக்கு மட்டுமே இயற்கையால் அருளப்பட்டது என்று தான் நான் சொல்வேன்.
ஏழைத்தாயைப் போல கையில் எதுவும் இல்லாமல் இலைகளை உதிர்த்து நிற்கும் மரங்கள், கன்னி கழிந்த
மணப்பெண்ணை போல; பசுமையை இழந்து
துளிர்க்க காத்திருக்கும் புல்வெளிகள், கோடை வெப்பம் தணிக்க இயற்கையின் கொடைகளான பழங்களும் நுங்கு
பதினேரும், கால்நடைகளை
குளிப்பாட்ட சின்ன ஊரணி, மனிதர்கள்
குளிக்க பெரிய ஊரணி, இவைதான் எங்கள்
முந்தைய தலைமுறை பெருசுகள் எங்கள் தலைமுறைக்கு விட்டு வைத்த ஆஸ்தி பெட்டகங்கள்.
இவ்வளவு செய்த என் பாட்டன்மார்கள் குடிதண்ணீருக்கு வழி செய்யாமல்
விட்டுவிடுவார்களா என்ன? எங்கள் கிராமத்து
மேற்கு எல்லையில் தேங்காய் தண்ணீர் கிணறு ஒன்றும் தோண்டி வைத்திருந்தார்கள்..
பெயருக்கு ஏற்றது போல அது தேங்காய் தண்ணீரை போல சுவையான நீர். கோடைகால பூக்களை போல
சுப்புத்தாய், வள்ளியம்மா, மாறிச்செல்வி, பொன்னுத்தாயி, சொறி சிரங்கு
இசக்கியம்மாள், தொட்டா சிணுங்கி
செல்லத்தாயி போன்ற வயசுப் பிள்ளைகளை அந்த சாயங்காலப் நேரத்தில் தான் அந்த
கிணற்றுக்கு தண்ணீர் எடுக்க வரும்போது பார்க்க முடியும். எல்லாப்
பருவத்தினருக்கும் தேவையான தேடல்களும், எதிர்பார்ப்புகளும், மகிழ்ச்சியும் அந்தக் கோடை காலத்தில் புதைந்து கிடந்தன..
பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கு நீண்ட விடுமுறை, அறுவடை முடிந்த விவசாயிகளுக்கு நீண்ட இரண்டு மாத ஓய்வு, கோடைகால கோயில்
கொடை விழாக்களுக்கு வந்திருக்கும் உறவுகள், விளையாட்டு, அரட்டை, கடந்த கால சம்பவங்கள்,, முடிந்து போன காதல், துளிர்க்கத் துடிக்கும் காதல், சின்ன சின்ன
சண்டைகள் இப்படிப்பட்ட எல்லா நிகழ்வுகளுமே; எங்கள் இழந்த குளம் கிராமத்தை இன்னும் உயிர்ப்போடு
வைத்திருக்கின்றன.
திருநெல்வேலி
நகரத்திலிருந்து 15 மயில் தொலைவில்
தான் அந்த கிராமம் அமைந்திருக்கிறது. கிராமத்துக்கான சில அடையாளங்களை இழந்தாலும்; இன்னும் பல
அடையாளங்களை இழக்க மறுத்து எங்கள் கிராமம் அமைதிப் போராட்டம் செய்து
கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். நீண்ட கால போராட்டத்துக்கு பிறகு 36 ஹெச் அரசு
பேருந்து தினமும் நான்கு நேரம் எங்கள் கிராமத்துக்கு வர ஒத்துக் கொண்டிருக்கிறது.
அந்தப் பேருந்தில் தினமும் வரும் ஓட்டுனர் நடத்துனர் யாரா இருந்தாலும் சரி; உறவுக்காரர்களைப்
போல மாறிவிடுவார்கள் எங்களுக்கு. எங்கள் ஊர் அம்மா பொண்ணு அக்காவின் அலப்பறையை கூட
அந்த அரசு பேருந்தின் ஓட்டுநர்களும் நடத்தினர்களும் ரசிக்க தான் செய்தார்கள்.
வேகவேகமாய் வயல் வேலைக்கு போய் வரும் அம்மா பொண்ணு அக்கா வேறு சேலை மாற்றி வரும்
வரை சண்டை போட்டு அந்தப் பேருந்தை நிறுத்தி வைத்து விடுவாள்.. அம்மா பொண்ண அக்கா
குணத்துல தங்கம் என்று தான் சொல்ல வேண்டும். வயல் வேலை இல்லாத நேரத்தில் பீடி
சுற்றுவது தான் அந்த கிராமத்தின் பெண்களின் தொழில். அம்மா பொண்ணு அக்கா
போன்றவர்கள் அந்த அரசு பேருந்தில் தான் அருகில் இருக்கும் முக்கூடல் கிராம பிடிக்
கடையில் பீடியை கொடுத்துவிட்டு, மறுமுறை அதே பேருந்தில் திரும்பியும் வந்து விடுவார்கள்
தினமும்.
அம்மா பொண்ணு அக்கா
உயரமாகவும் குண்டாகவும் கொஞ்சம் அழகாகவும் தான் இருப்பாள். பாளையங்கோட்டை
நகரத்தில் இருந்த அவளது அத்தை மகனை தான் காதலித்து அவள் திருமணம் செய்து
கொண்டிருந்தால்.. கிராமத்து கருவக்காட்டுக்குள்ள வெளிக்கு போய் பழகியிருந்த அம்மா
பொண்ணு அக்காவுக்கு அந்தக் கழிவறை அனுபவம் புதியதாக இருந்திருக்கிறது. இரண்டு
நாட்களாக அடக்கியே வைத்திருந்திருக்கிறாள். கிராமத்துக்கு வந்திருந்த அம்மா
பொண்ணாக்கா கணவனோடு போக மாட்டேன் என்று அழுது கொண்டிருந்தாளாம். காரணம் கேட்டதற்கு
வெளிக்கிப்போன விவகாரத்தை சொன்னாளாம். நான் சிறுவனாய் இருந்தபோது சில நேரங்களில்
என்னையும் கருவ காட்டுக்கு வெளிக்கு போக துணையாக அழைத்துச் சென்றிருக்கிறாள்.
எனக்கு கண் தெரியாது என்பதை தெரிந்து தான் என்னை? ஒருவேளை அழைத்து போயிருப்பாளோ? நானும் என்
கிராமத்திலும் பள்ளியிலும் என்னால் எவ்வளவு முடியுமோ! அந்த அளவிற்கு குறும்புகளை
பண்ணத்தான் செய்திருக்கிறேன்.. நான் கொஞ்சம் பெரிய பையனாய் வளர்ந்த பிறகு ஒரு நாள்
அம்மா பொண்ணு அக்காவிடம்; அக்கா இப்ப
எல்லாம் என்னை வெளிக்கு போக துணைக்கு ஏன் கூப்பிடுவதில்லை என்று கேட்டே விட்டேன்.
அதற்கு உன்னை எல்லாம் இப்போ நம்ப முடியாத அப்பா என்று அவள் சொல்லிவிட்டால். சில
நேரங்களில் நான் பண்ணுகிற சேட்டைகளை பார்த்துவிட்டு, குதிரையை அறிந்து தான் கடவுள் கொம்பை
கொடுக்கவில்லை என்றெல்லாம் என் கிராமத்துக்காரர்கள் சொன்னதும் உண்டு. நாச்சியார்
மகனுக்கு வால் ஒன்னு தான் முளைக்கவில்லை என்று சிலர் சொல்லியும் இருக்கிறார்கள்.
என் அம்மா பெயர் நாச்சியார் என் அம்மாவுக்கு அவ்வளவு மரியாதையும் உண்டு எங்கள்
கிராமத்தில்.
செருப்புகள்
எதுவும் அணியாமல் வெற்றுக் கால்களோடு ஒரு வவ்வாலை போல அந்த கிராமத்து மண்ணில் நான்
வட்டமடித்த நாட்களை என்னால் இன்று வரை மறக்க முடியவில்லை. கால்நடை கழிவுகளும், மனிதக்
கழிவுகளும் என் பாதங்களில் வண்ணம் பூசிய நாட்களை நான் கடந்து போக தான்
நினைக்கிறேன் ஆனாலும் அந்த நாற்றம் பிடித்த நாட்கள் இன்னும் என் நினைவில் வந்து
போய்க் கொண்டு தான் இருக்கின்றன. கருவேல முட்கள் என் பிஞ்சு பாதங்களில் காவியம்
வரைந்த நாட்களை எப்படி மறக்க முடியும் என்னால்? நான் ஒரு கோடை விடுமுறையில் அந்த கிராமத்துக்கு
வந்திருக்கும் போது தான் அந்த துக்ககரமான சம்பவம் நடந்திருந்தது.. அம்மா பொண்ணு
அக்காவின் இளம் கணவன் ஒரு மின்சார விபத்தில் இறந்து போயிருந்தார். மழைக்காலங்களில்
மின் விளக்குகளை சுற்றி வரும் தும்பிகளை போல சிறகடித்து பறந்து கொண்டிருந்த அம்மா
பொன் அக்கா நடைப்பினமாய் முடங்கிப் போனால். எங்கள் கிராமத்துக் காற்றில்
கலந்திருந்த அம்மா பொண்ணு அக்காவின் நிறை முத்துக்கள் கோர்த்த கொலுசொலியும், கொஞ்சிப் பேசும்
கண்ணாடி வளையல்களின் ஒளியும் மௌனித்துப் போயிருந்தன. ஒரு பெண்ணின் ஸ்பரிசத்தை
முதன்முறையாக எனது பதின் பருவ வயதில் பொன்னுதாய் அக்காவின் மடியிலும், மென்மையான
மார்பிலும் விவரம் தெரிந்தும், விவரம் தெரியாமலும், நான் எத்தனை முறை களமாடியிருப்பேன்?
எனக்கு கண்
தெரியாது என்பதால் அத்தகைய தீண்டல்களுக்கு அவள் என்னை அனுமதித்து இருப்பாளா? அல்லது அத்தகைய
தீண்டல்கள் அந்த வயதில் அவளுக்கு தேவைப்பட்டிருக்குமா? ஒருவேளை அவள்
என்னை சிறுவன் என்று நினைத்து போனால் போகட்டும் என்று விட்டு இருப்பாளோ! அது
எனக்குத் தெரியாது. ஆனால் அவளின் திருமணம் வரை என்னோடு மிகவும் நெருக்கமாக தான்
இருந்தாள்.. நான் விடுமுறைக்கு வீட்டுக்கு வரும்போது எல்லாம் எல்லோருமே அவளிடம்
என்னைத்தான் போய் பேச சொன்னார்கள் ஆனால் அவள் யாரிடமும் பேசுவதில் விருப்பம்
இல்லாமலேயே இருந்தால். இளவயதில் ஏற்பட்ட அவளது காதல் கணவனின் அகால மரணம் அவளை
உருக்கொலைய வைத்திருந்தது. சிலரின் வாழ்க்கையில் விதி எப்படி எல்லாம் போக்கு
காட்டி விடுகிறது? காலத்தால்
மட்டும் தானே காயங்களுக்கு மருந்து போட முடியும்? அம்மா பொண்ணு அக்கா பெயரில் ஒரு தென்னந்தோப்பு
இருந்தது. அதை விற்கும் முயற்சியில் அவளின் பெற்றோர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போதுதான் அந்த தோப்பை விற்பதில் அவளுக்கு விருப்பம் இல்லை என்பதை அவள்
பெற்றோரிடம் தெரிவித்து இருந்தால். அந்த தென்னந்தோப்பு தான் பொன்னுத்தாய்
அக்காவின் வாழ்வாதாரமாய் இறுதிவரை இருந்தது... பொண்ணு தயக்க என்னை விட பத்து வயதுக்கு
பெரியவள்.. எப்போதுமே எனது கோடை விடுமுறையை அந்த கிராமத்தில் கழிப்பதில் தான் நான்
மிகவும் ஆர்வமாக இருந்தேன். கோடை விடுமுறையில் வந்திருந்த நான் ஒரு அந்தப் பெரிய
ஊர் அணியில் குளித்துக் கொண்டிருந்தேன் எனது கால் சட்டையை கழற்றி கரையில் இருந்த
ஒரு கல்லில் வைத்து விட்டு.
கோடை வெயிலுக்கு
அந்த பெரிய ஊரினியில் குளிப்பது சுகமாகத்தான் இருந்தது எனக்கு. கோடை வெயிலில் ஊரணி
நீரின் மேல் பகுதி கதகதப்பாக இருக்கும். ஆழத்திலிருந்து கொப்பளிக்கும் நீர்
சில்லென்று உடலின் எல்லா பகுதியையும் குளிர்விக்கும் சுகம் இருக்கிறதே; குளித்துப்
பார்த்தவர்களுக்குத்தான் அந்த சுகம் புரியும். ஒரு வழியாக ஆனந்த குளியல் போட்டு
முடித்த நான் எனது உடலின் பாதிப்பகுதி நீரில் மூழ்கி இருக்க கரையில் கழற்றி
வைத்திருந்த கால் சட்டையை துலாவி பார்த்தேன். அது அந்த இடத்தில் இல்லாததால்
திடுக்கிட்டுப் போனேன். பிறந்த மேனியோடு வெளியேயும் வர முடியாது. மேல கரையில்
குளித்துக் கொண்டிருந்த இசக்கியம்மாளை கூப்பிட்டு எனது கால் சட்டையைத் தேடித் தரச்
சொன்னேன். எங்கு தேடியும் எனது கால் சட்டை கிடைக்கவில்லை. கடைசியில் அவளின் பாவாடை
தான் என் மானத்தை காப்பாற்றியது. நிர்வாணமாய் ஊருக்குள் வருவதை விட பாவாடையில்
வருவது எனக்கு உசத்தியாகவே தெரிந்தது..
அந்தக் காட்சியை
பார்த்தவர்களும் பார்க்காதவர்களும், என்னை பார்க்கும் போதெல்லாம் கொஞ்ச காலம் சிரித்துக் கொண்டே
தான் இருந்தார்கள். ரொம்ப காலத்துக்கு பிறகு அம்மா பொண்ணு அக்கா எனக்கு நடந்த
சம்பவத்தை நினைத்து விழுந்து விழுந்து சிரித்தது எனக்கு மகிழ்ச்சியை தந்திருந்தது.
பின்னர் தான் தெரிந்தது என்னுடைய நண்பர்கள் தான் என்னுடைய கால் சட்டையை கபளீகரம்
செய்தது.
நான் படித்துக்
கொண்டிருந்த பார்வையற்றோர் பள்ளியிலும் எனக்கென ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கத்தான்
செய்தார்கள். ஒவ்வொரு நாளும் அதிகாலை நாலு மணிக்கு எல்லாம் விடுதி அறைகளில் உள்ள
ஒலிபெருக்கிகளில் கிறித்துவ பாடல்களை சத்தமாக ஒலிக்கச் செய்து எழுப்பி விட்டு
விடுவார்கள். விடுதிக்காப்பாளரின் இந்த செயல் என் போன்றவர்களுக்கு எரிச்சலையே
தந்திருந்தது. நான் ஒரு நாள் விடுதிக்காப்பாளர் இல்லாத நேரத்தில் அவள் அறைக்குச்
சென்று டேப் ரிக்கார்டரில் இருந்த கிறிஸ்தவ பாடல் கேசட்டை வெளியே எடுத்து விட்டு; திரைப்படப் பாடல்
கேசட்டை கச்சிதமாய் பொருத்திவிட்டேன். மறுநாள் அதிகாலை 4 மணி
சுவாரசியத்துக்காக நான் காத்துக் கொண்டிருந்தேன். தண்ணி குடம் எடுத்து தங்கம் நீ
நடந்து வந்தால் தவிக்குது மனசு தவிக்குது என்ற பாடல் விடுதி வளாகத்தில் இருந்த
ஒலிபெருக்கிகளில் அலறி ஒலித்தது. அந்த அழகான அதிகாலைப் பொழுது ஆக்ரோஷமாய் மாறி
இருந்தது. எவன் இந்த வேலையை செய்திருப்பான் என்ற விசாரணையும் தொடங்கியது. குறை
பார்வை கொண்ட சாமிக்கண்ணு என்ற பையன் என்னை காட்டிக் கொடுக்கும் எட்டப்பன் வேலையை
மிகவும் கச்சிதமாய் செய்து முடித்து இருந்தான் நான் சிலுவையில் அறையப்படும்
இயேசுவைப் போல முதல்வரின் நரைக்கு கொண்டு. செல்லப்பட்டேன்.. எனக்கு அடிசூட்டும்
விழாவும் மிக விமர்சியாக அங்கு நடத்தப்பட்டது. அதிலும் ஒரு நல்ல காரியம் எனக்கு
நடக்கத்தான் செய்திருந்தது எனது அந்த துயரமான நேரத்தில் எனது வகுப்புத் தோழி
ஜெபமலர் எனக்கு ஆறுதலும் அறிவுரையும் சொல்ல கிடைத்திருந்தால்.
அவளின் பரிசுத்தமான
அன்பு என்னை வசீகரித்து காதலில் கொண்டு போய் நிறுத்தி இருந்தது. எனது குறும்புகளை
எல்லாம் நான் குறைத்துக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்த தொடங்கியிருந்தேன்.
அவளின் பெற்றோர் பனை விவசாயம் செய்து கொண்டிருந்தார்கள். ஜெபமலரை பார்க்க
வரும்போது எல்லாம் அவளின் பெற்றோர் பனை மரத்திலிருந்து கிடைக்கும் பொருட்களை
தின்பண்டமாக கொண்டு வருவார்கள். கருப்பட்டி பதநீர் நுங்கு பனங்கிழங்கு பனம்பழம்
எல்லாமே எங்களுக்கும் கிடைக்கும். எனக்கு பணம் பழம் தான் மிகவும் பிடிக்கும். அதிலும்
நெருப்பில் சுட்ட பனம்பழத்தில் இருந்து வரும் வாசனையும், சுவையையும்
இப்போது நினைத்தாலும் என் நாக்கில் எச்சில் ஊறுகிறது.. ஒரு பனைமரம் எவ்வளவு
சுவையான பொருட்களை கொடுத்துக் கொண்டே இருக்கின்றன.? ஜெபமலரின் ஒவ்வொரு வார்த்தையையும், ஒவ்வொரு
செயலையும், அவளின் ஒவ்வொரு
அசைவையும் நான் அணு அணுவாய் ரசிக்க தொடங்கி இருந்தேன். நானும் ஜெபமலரும் பள்ளியில்
படிக்கும் வரை எந்த சர்ச்சைகளிலும் சிக்கியதே கிடையாது. அவள் ஒரு நாளும் என் பெயரை
சுந்தரம் என்று சொல்லி அழைத்ததே கிடையாது. எப்போதும் அவள் என்னை வானம் பார்த்தான் என்று
தான் கூப்பிடுவாள்.. நான் எப்போதும் பேசும்போது மேலே பார்த்தபடி தான் பேசுவேன்
அதனால்தான் எனக்கு அந்தப் பெயர். அவள் ஒவ்வொரு செயலை செய்யும் போதும் இயேசுவே
இரட்சியும் தும்மினாலும் கூட அப்படித்தான் சொல்வாள்..
மரக்கிளைகளில்
குதூகளிக்கும் பறவை கூட்டங்களை நோக்கி வேடன் குறி பார்த்து கல்லை எரிவதைப் போல
மேல்நிலைப்பள்ளி தேர்வு முடிவும் வந்திருந்தது எங்களைத் தேடி. போதி மரத்தில் ஞானம்
பெற்ற பறவைகள் பறந்தன பல திசைகளைத் தேடிக் கொண்டு. சிலர் சொந்த முயற்சியில்
கல்லூரியில் சேர்ந்து கொண்டனர்.. சிலர் மறுவாழ்வு இல்லங்களில் அடைக்கலம்
புகுந்தனர். சிலர் நன்கொடையாளர்களின் உதவியால் கல்லூரியில் சேர்க்கப்பட்டனர்.
பெண்கள் சிலர் வீடுகளுக்குள்ளேயே தங்கள் வாழ்க்கையை சுருக்கி கொண்டனர். பள்ளியில்
என்னோடு படித்த பல பார்வையற்ற நண்பர்கள் என்ன ஆனார்கள் என்றே எனக்கு இதுவரை
தெரியவில்லை. நான் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் ஆங்கிலத் துறையில்
சேர்ந்திருந்தேன். ஜெபமலர் பாளையங்கோட்டையில் உள்ள தென்னிந்திய திருச்சபை
நடத்தக்கூடிய ஒரு கிறிஸ்தவ கல்லூரியில் சேர்ந்திருந்தால்.. புத்தகம் என்ற பெயரில்
பிரெயிலில் காதல் கடிதங்களை கட்டு கட்டாக ஜெபமலருக்கு நான் அனுப்பினேன். அவளும்
எனக்கு அனுப்பி கொண்டே இருந்தால். அவள் விடுதியில் உள்ள தொலைபேசி எண்ணையும் எனக்கு
கொடுத்திருந்தால். பெற்றோரைத் தவிர ஆண்கள் யாரும் தொலைபேசியில் பேசக்கூடாது
என்பதையும் அவள் எனக்கு சொல்லி இருந்தாள். நான் விடுமுறைக்கு ஊருக்கு வரும்போது
தான் ஜெபமலரோடு தொலைபேசியில் பேச முடிந்தது.. அம்மா பொண்ணு அக்கா தான் ஜெபமலரின்
அக்காவாக மாறி இருந்தால்.. அம்மா பொண்ணு அக்காவை தவிர என் காதல் விவகாரம் எங்கள்
வீட்டில் யாருக்கும் தெரியாது.
என் வீட்டில்
கொஞ்சம் வசதி இருந்த போதிலும் நான் எதுவும் இல்லாதவனாகவே நடத்தப்பட்டேன்.
பொறுப்பில்லாத அப்பா, பங்காளிகளாக மாறி
இருந்த என் சகோதர சகோதரிகள்,.
பெரிய அளவில்
என்னை கண்டு கொள்வது கிடையாது. ஆனால் என் அம்மாவின் கை மட்டும் எப்போதும் எனக்கு
தாராளம் காட்டியிருந்தது. அதே சமயத்தில் நான் விடுமுறையை முடித்து கல்லூரிக்கு
செல்லும் வரை அம்மா பொண்ணு அக்கா மட்டும் எனக்கு பணம் கொடுக்காமல் ஒருபோதும்
அனுப்பியதே கிடையாது. என் அம்மா நோய்வாய்ப்பட்டிருந்த காலங்களில் அம்மா பொண்ணு
அக்கா தான் எனக்காக என் அம்மாவை அக்கறையோடு கவனித்துக் கொண்டிருந்தாள். எனக்கு
இருந்த ஒரே உறவு என் அம்மா அவளும் ஒரு நாள் இறந்து போனால்.. நான் அழுது அழுது ஒரு
கட்டத்தில் சுயநினைவை இழந்தவனாய் மயங்கி விழுந்து விட்டேன். அம்மா பொண்ணு அக்கா
தான் என்னை அள்ளி அணைத்துக் கொண்டு என் தங்கமே உனக்கு நான் இருக்கிறேன் டா என்று
சொன்ன ஆறுதல் மொழிகள் அவள் இருக்கும் திசையை நோக்கி இன்றும் என்னை வணங்கச்
சொல்கிறது. நான் அம்மா பொண்ணாக்காவுக்காகஇதுவரை எதுவுமே செய்திருக்கவில்லை.
கல்லூரி படிப்பை முடித்த நான் வேலைக்கான போட்டித் தேர்வு எழுதுவதில் என்னை
மும்முரமாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தேன்.. காலம் தன் கணக்கை முடிக்கும்
கட்டாயத்திலிருந்து இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஜெபமலர் வீட்டிலும்
அடுக்கடுக்கான பிரச்சனைகள் தலை காட்டத் தொடங்கியிருந்தன.. பனை விவசாயம் கொஞ்சம்
கொஞ்சமாக குறைந்து கொண்டே. போய்க்கொண்டிருந்தது. வாழ்வாதாரமாய் இருந்த பனி மரங்களை
வெட்டி விரகு களுக்காக செங்கல் சூளைகளுக்கு அனுப்பி கொண்டிருந்தார்கள் எல்லோரும்.
ஜெபமலர் வீட்டு பணம் காடும் அதற்கு தப்பவில்லை.
ஜெபமலரின்
அப்பாவும் இறந்து போயிருந்தார். அவளின் அண்ணன் தம்பிகளெல்லாம் அவர்களுக்கான
பாகங்களை பங்கு வைத்துக் கொண்டனர். ஜெபமலர் மட்டும் தான் அந்த குடும்பத்தில் ஒரே
பெண் பிள்ளை. கண் தெரியாத ஜெபமலருக்கும் அவளின் அம்மாவுக்கும் சொத்தில் கொஞ்சம்
அதிகமாகவே பிரித்து கொடுத்திருந்தார்கள். ஜெபமலரை பார்ப்பதற்காக நானும் அம்மா
பொண்ணு அக்காவும் ஒரு நாள் அவள் வீட்டிற்கு சென்றிருந்தோம். ஜெபமலரும் அவள்
அம்மாவும் தான் அந்த நேரத்தில் வீட்டில் இருந்தார்கள். செல்வக்கனி நாடார்
குடும்பம் சின்னாபின்னமா சிதறிப்போச்சு தம்பி என்ற ஜெபமலரின் அம்மாவின்
வார்த்தைகளில் சோகம் மிஞ்சி இருந்தது. உனக்கு கொடுக்கிறதுக்கு பணம் பழம் இல்லையே
சுந்தரம் என்ற ஜெபமலரின் அங்கலாய்ப்பை என்னால் எதிர்கொள்ள துணிச்சல் இல்லாமல்
நின்றிருந்தேன். பாவம் அவள் ஒரு வெகுளி கிறித்தவம் அவளை எல்லோருக்கும் நல்ல
பிள்ளையாகவே வளர்த்தெடுத்திருக்கிறது. ஜெபமலரின் அம்மாவும் தனக்கு அடிக்கடி நெஞ்சு
வலி வருவதாகவும் எங்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.. நான் அவளின் நிலையைக் கண்டு
அழுவதை அறிந்த ஜெபமலர் கர்த்தரின் சித்தம் என்னவோ அது நடக்கட்டும் சுந்தரம் நீ.
அழக்கூடாது என்று அவள் எனக்கு ஆறுதல் சொன்னால்.
ஜெபமலரின்
குடும்பம் நெல்லையிலிருந்து பிழைப்புக்காக கோவைக்கு இடம் பெயர்ந்தது. ஜெப மலரும்
அங்கேயே ஒரு கல்வியியல் கல்லூரியில் சேர்ந்து ஆசிரியர் பயிற்சியை மேற்கொள்ளத்
தொடங்கியிருந்தால்.. எனக்கும் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் போட்டி
தேர்வின் மூலம் ஒருவேளை கிடைத்திருந்தது. எது எப்படி இருந்தாலும் கோடை
விடுமுறைக்கு நான் எங்கள் கிராமத்துக்கு வருவதை நிறுத்திக் கொள்ளவில்லை. ஏனென்றால்
எனக்காக அம்மா பொண்ணு என்ற ஒரு ஜீவன் இருக்கிறது. கண் தெரியாத சேட்டைக்காரனாய்
அடையாளப்படுத்தப்பட்ட, நான்; இப்போது அந்த
கிராமத்துக்கே வழிகாட்டி. நான் பாதுகாப்புத் துறையில் இளநிலை உதவியாளர் என்பதால்
அங்கே உள்ள அங்காடியில் மது பாட்டில்கள் எனக்கு சலுகை விலையில் கிடைக்கும். நான்
அங்கே வரும்போது எல்லாம் எங்கள் ஊர் குடி மகன்களுக்கு எல்லாம் மது பாட்டல்களைக்
கொண்டுவர தவறியதே இல்லை. எனக்கும் ஜெபமலருக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே
போனது. ஒரு கட்டத்தில் அவள் எங்கு இருக்கிறாள் என்று எனக்குத் தெரியாமல்
போய்விட்டது.. ஜெப மலரை கண்டுபிடிக்கும் முயற்சியில்
அம்மா பொண்ணு அக்கா
மிகவும் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தாள். எங்கள் இருவருக்கும் கல்யாணம் செய்து
வைத்து பார்ப்பதில், அம்மா பொண்ணு
அக்கா மிகவும் ஆர்வமாய் இருந்தால்.
ஜெபமலரைத் தேடும்
படலம் ஒரு வருடத்தை தின்று ஜீரணித்து இருந்தது. எந்த தகவலும் கிடைத்த பாடில்லை,. நானே களத்தில்
நேரடியாக இறங்கி இருந்தேன். என் போன்ற பார்வை இழந்த மக்கள் தமிழகத்தின் எந்தப்
பகுதியில் இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் நேரில் சந்திக்காமலே ஒருவரைப் பற்றி ஒருவர்
தெரிந்து வைத்திருப்போம். எப்படி என்றால்? தமிழகத்தில் பார்வையற்றோர் சேர்ந்து படிக்கும் கல்லூரி
விடுதிகளும், மறுவாழ்வு
இல்லங்களும் பயிற்சி மையங்களும் குறைந்த எண்ணிக்கையில் தான் இருக்கும் அதிலும்
குறிப்பிட்ட சில நகரங்களுக்கு தான் அவர்கள் வந்து ஆக வேண்டும். பார்வையற்றோர்
பள்ளிகள் இருக்கும் ஊரில் ஒருவரை தெரிந்து வைத்திருந்தால் போதும் பிரச்சனை எளிதில்
முடிந்து விடும்.. மேலும் சமூக ஊடகங்கள் அந்தப் பிரச்சனையை எளிதாக தீர்த்து
வைத்திருந்தது.. கோவையில் ஜெபமலர் படித்திருந்த குறிப்பிட்ட கல்லூரியின் பெயரைச் சொல்லி
ஒரு நண்பரை தேடச் சொன்னேன். அவர் ஜெபமலரின் அலைபேசி என்னோடு ஒரு அதிர்ச்சியான
செய்தியையும் என்னிடத்தில் கொண்டு வந்து சேர்த்து இருந்தார்.. ஜெபமலருக்கு அரசு
உதவி பெறும் ஒரு கிறித்துவ பள்ளியில் ஆசிரியை வேலை கிடைத்திருந்தது. அது
மட்டுமல்லாமல், ஜெபமலரின் அண்ணன்
மனைவியின் தம்பியோடு அவளுக்கு கட்டாய திருமணமும் நடந்து முடிந்திருந்தது. காலம்
யாரை யாரோடு முடிச்சு போடும் என்று யாருக்குத் தெரியும்? ஒரு பள்ளி வேலை
நாளில் அந்த அலைபேசி எண்ணை நான் அழைத்தேன். அதே குரல்! நிச்சயமாக அவளே தான்!
என்னோட ஜெப மலரே தான்! மன்னிக்க வேண்டும்.. உடலால்; வேர் ஒருவரின் ஜெபமலர்.. அம்மா பொண்ணு
அக்காவும் ஏற்கனவே இந்த செய்தியை தெரிந்து வைத்திருந்தால். அதை அவள் என்னிடத்தில்
சொல்ல திராணி அற்றவளாய் இருந்திருக்கிறாள்.. நானும் அவளிடம் அதைக் கேட்க
விரும்பவில்லை முடிந்தது முடிந்ததாய் இருக்கட்டும். எனக்குத் தெரிந்ததும்
அவளுக்குத் தெரியாமல் போகட்டும்.
நான் ஒரு மாத
விடுமுறையில் எங்கள் கிராமத்துக்கு. வந்திருந்தேன். அந்த சாயங்காலப் பொழுதில்
நானும் அம்மா பொண்ண அக்காவும் அந்த கிழக்குக்கரை வாய்க்கால் திண்டில் உட்கார்ந்து
பேசிக் கொண்டிருந்தோம். அந்தப் பேய் ஆட்டிப் பனை மரத்திலிருந்து ஒரு பனம்பழம்
பொத்தென கீழே விழுந்தது. கீழே விழுந்த பனம்பழத்தை அவள் எடுக்க முயற்சித்த போது, அது உருண்டோடி
அருகில் இருந்த வாய்க்கால் நீரில் அடித்து செல்லப்பட்டது. அக்கா வேண்டாம் அந்தப்
பணம் படம் இனிக்காது. போனால் போகட்டும் விட்டு விடுங்கள். என்று நான் சொல்லி
முடிக்கவும்; ஏன் ஜெபமலர் கொடுத்தால்
தான் இனிக்குமோ? என்று அம்மா
பொண்ணு அக்கா என்னிடத்தில் கேட்டால்..
அக்கா வேஷத்தைக்
கலைத்துக் கொள்ளலாம் எனக்கும் எல்லாம் தெரியும்.. கோடிமுறை இயேசுவே இரட்சியும்
இயேசுவே இரட்சியும் என்று சொன்ன அவளை, படிக்காத பாமரனோடு இயேசுவே; அவளை சிலுவையில் அறைந்து விட்டார்.
இறைவன் இணைத்ததை
மனிதன் பிரிக்காமல் இருக்கட்டும்.
முற்றும்..
தொடர்புக்கு;
9442715777