Saturday 20 June 2020

தமிழ் அரங்க வரலாறு - (அச்சு நாடகப் பிரதிகள் 1835 – 1922)


குறிப்பு : கட்டுரை பாமினியில் இருந்து ஒருங்குறிக்கு மாற்றப்பட்டது.

தமிழ் அரங்க வரலாறு - (அச்சு நாடகப் பிரதிகள் 1835 – 1922)

முனைவர் அ.கோகிலா,
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி,
மாதனாங்குப்பம், சென்னை – 99.
தமிழ் அரங்க வரலாறு அச்சு நாடகப் பிரதிகள் 1835 – 1922 என்னும் தலைப்;பிலான இவ்வாய்வு அச்சு சட்டம் இயற்றிய பிறகு அச்சிடப்பட்ட நாடகப் பிரதிகள் மக்களிடையே எவ்வித தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக அச்சிடப்பட்டன அதற்கான பின்புலம் என்ன? ஒரு முறை அச்சிடப்பட்ட பிரதி ஏன் மீண்டும் மீண்டும் மறு பதிப்புகளாக பதிப்பிக்கப்படுகின்றன. மறுபதிப்புகளாக வெளிவரும் போது நாடகப்பிரதிகளில், எவ்வகை மாற்றங்களை ஏற்படுத்தினர், அச்சகங்களின் அச்சாக்கப் பணி எவ்விதம் மேற்கொள்ளப்பட்டது? அச்சுப்பிரதிகளைப் பிழைதிருத்தம் பார்த்தவர்கள் பரிசோதித்தவர்கள், பார்வையிட்டவர்கள் என்ற பின்னணியில் பகுக்கப்பட்டு அவர்களுக்கான வரலாற்றை நோக்குவது, ஒரு பிரதியினை அச்சிட வேண்டுமெனில் அதற்கான பொருளாதார பின்னணியில் ஈடுபட்டவர்கள் குறித்த விவரம், பிரதியினை வெளியிடுவதற்கு உதவிய காப்புரிமைச்சட்டங்கள், அதற்கான தண்டனை, பிரதிகளின் அட்டைகளில் வெளிவந்த விளம்பரங்கள் எவ்வகை நோக்கில் அச்சிடப்பட்டன? படங்கள் அச்சிடுவதன் நோக்கம் ஆகியவை குறித்து ஒரு சில ஆதாரங்களுடன் ஆய்வுச்சுருக்கம் கருதி விவாதிக்கப்பட்டுள்ளது இவ்வாய்வு.  
  1835 ஆம் ஆண்டு அச்சு சட்டம் பரவலான பிறகு பெரும்பாலான நூல்கள் குறிப்பாக கையெழுத்துப் பிரதிகள், ஏட்டுப்பிரதிகள், வாய்மொழியாக வழங்கப்பட்ட கதைகள், புராணக்கதைகள் முதலானவை அச்சிப்பட்டன. அச்சிடுவதற்கு என சில பிரதிகளில் தனிப்பட்ட முறையில் காரணங்கள் இருந்திருப்பதைக் காண முடிகிறது. அச்சான நாடகப்பிரதி தமிழ் சமூகத்தின் வரலாற்றை  அறிவதற்கான திறவுகோல் என்பதைப் பின்வரும் கூற்றின் மூலம் உணர முடிகிறது.
  பூர்விக காலத்தில் எழுதப்பட்ட தமிழ்நாடகங்கள் நமக்குக் கிடைத்திலவேனும், சற்றேறக்குறைய நூறுவருடங்களுக்கு முன் அச்சிடப்பட்ட தமிழ்நாடகங்களைக் கொண்டும் அவைகளில் சிலவற்றை அச்சிட்டவர்கள் ஏட்டுப் பிரதிகளுக்கிணங்கப் பரிசோதித்து அச்சிட்டனர்என்று கூறியிருப்பதால் பெரும்பாலான நாடகப்பிரதிகள் 1835 க்கு பிறகு அச்சு வடிவில் பதிப்பிக்கப்பட்டன.
  நாடகப்பிரிதிகள் அச்சிடுவதற்குரிய பின்புலங்களை நாம் பின்வருமாறு தொகுக்க முடியும்.
ஏட்டுப்பிரதிகளில் இருந்த குறைப்பாட்டை நீக்கி சபைகளில் பிரசங்கம் செய்வதான பிரதிகளை அச்சிட்டமை”.(1863 – தேசிங்கு ராஜன் நாடகம்)
சென்னை வேளாள தேனாம்பேட்டை பாலிய சுகசங்கீத விநோத நாடகசபையார் வேண்டுகோட்படி (1897 புரூர்வ சக்ரவர்த்தி நாடகம்) அச்சிடப்பட்டது. சென்னை புரசை கௌரிவிலாஸ் சபையார் வேண்டுகோட்படிஅவர்கள் முதன்முதல் அரங்கமேடையில் நடிப்பதறகென்று உத்தேசம் செய்யப்பட்டது”. (1910 – சீதாகல்யாண நாடகம்)
சிவன் ராத்திரி புராணத்தை நாடகமாக பாடினால் வினை நீங்குமென்று விருப்புற்று பாடி முடிக்க அதனால் அவ்வினையும் பரிகாரமாயிற்று” (1876 சிவன் ராத்திரி நாடகம் ) அச்சிடப்பட்டது.
வாசிப்;போர்க்கும் வாசிக்குங்காலை பொருளுணர்ந்து கேட்க வல்லோர்க்குமான” 1886 இல் நள விலாசம் அச்சிடப்பட்டது.
இசை நுணுக்கங்களை பிறர் தெளிவாக அறிந்து கொள்வதற்கு ஜாவளிகளெல்லாம்  எடுத்துவிட்டு அவ்விடங்களிலெல்லாம் தப்பும் தவறுமாக படங்கள் வைத்து விற்பனை செய்துவந்தனர்”. (1897 - இந்திரசபா நாடகம் அச்சிடப்பட்டது.
கையெழுத்து பிரதிகளை அச்சுப்பிரதிகளாக மாற்றுவதற்கு உரிய முயற்சியாக இச்சதாரம் சரிதையை அனேக டிராமா கம்பெனியார்கள் நடித்து வந்ததாலும் அச்சிடாதிருந்ததை யுத்தேசித்து  புத்தக ரூபமாயிற்று” 1901 இல் சதாரம் நாடகம் அச்சிடப்பட்டது.
வாசிப்பதற்கும் நாடக கர்த்தாக்களுக்கு பயன்படும் நோக்கில் இரஞ்சிதையில் சரித்திரத்தை யாவரும் எளிதில்  வாசித்துணரும் பொருட்டு எளிய தமிழ்நடையில் தற்கால நாடக கர்த்தாக்களுக்கு உபயோகமாகும் பொருட்டு” 1904 இரஞ்சிதை நாடகம் அச்சிடப்பட்டது.
படிக்கவும், நடிக்கவும் பார்க்கவும் கேட்கவும்                                                            பலர்க்கும் பயன்படும்படி நாடகரூபமாக  1908 இல் பாமாவிஜயம் அச்சிடப்பட்டது.                      
  அச்சிடப்;பட்ட பிரதிகள் மீண்டும் மீண்டும் மறுபதிப்புகளாக அச்சாயின. இவ்வாறு 28 பதிப்புகளாக சீர்காழி அருணாச்சலக் கவிராயரின் இராம நாடகம் 1853 -1922 வரை வெளிவந்தது. நரசிம்மையர் எழுதிய மார்கண்டேய நாடகம் 11 பதிப்புகளாக 1853 முதல் 1922 வரை வெளிவந்தன. 1877 – 1916 வரை  மறுபதிப்புகளாக அச்சிடும்போது ஒரே பிரதி பல்வேறு ஆசிரியர்கள் இயற்றி வெளிவந்த பிரதிகளும் இதில் அடங்கும். மறுபதிப்புகள் வெளிவருவதற்கான பின்புலமும் நூதன அச்சு முறைமைகளோடு அச்சிடப்பட்டு வெளிவந்ததையும் பின்வருமாறு காணமுடிகிறது.
சங்கிலியா பிள்ளையவர்களால் தற்கால நாகரீகத்துக்கேற்றவாறு பாரீஸ், இந்துஸ்தான் திருபுகழ் முதலிய வர்ண மெட்டுகளிற் புதிதாய் அடைந்து, நீதிநெறி நாடக உபாத்தியாயர்  சங்கிலிப்பிள்ளையியற்றிய புதிய வர்ணமெட்டை அரிச்சந்திர நாடகமென பெயர்கொடுத்து புத்தகத்துகேற்ற ஐதீகப் படங்களும் சேர்த்து உயர்ந்த கிளேஸ் காகிதத்தில் அச்சிட்டு நேர்த்தியான காலிக்கோ பயிண்டு செய்து விற்பனைக்குத்தயாராயிருக்கிறது” (1914 – நந்தனார் சரித்திரக்Pர்த்தனை விளம்பரம்) குஜிலிக்கடை பதிப்பின் முறையற்ற தன்மையினை எடுத்துக்காட்டி திருப்பங்களுடன் செம்மையான முறையில் மறுப்பதிப்புகள் அச்சாகின.
அனேக பிழைகளுடனும் சொற்சேதங்களுடனும் இசை வழுக்களுடனும் தாள பேதமாய் அச்சிட்டிருந்த குஜிலிக்கடை பதிப்பைத் தள்ளிப்போட்டு சிதம்பரம் தீட்சிதரிடமிருந்து சுமார் நூறு வருடத்திய பிரதியைக் கொண்டு சகலமாக திருத்துப்பாடுகளும் செய்து ஐந்து திருவுருவப்படங்களுடன் முதலில் கதையின் வரலாறும் சேர்த்து செவ்வனே அச்சிட்டிருக்கிறோம். ஆகையால் ஒவ்வொரு வரும் எமது பதிப்பையே பார்த்து வாங்க கோறுகின்றனம”;. ( 1915 – திருத்தமான பதிப்பின் விளம்பரம்)
  அச்சுக்கூடங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக பெரும்பாலான பிரதிகளில் அச்சகத்தின் முகவரி, விளம்பரம் முதலில் இடம் பெறுகிறது. அதன்பின் ஒவ்வொரு அச்சகத்திலும் எவ்விதம் அச்சகப்பணி மேற்கொள்ளப்படுகிறது, அச்சகங்களில் பதிப்பிக்கப்படும் புத்தகங்களின் மேன்மை குறித்தும் அதன் பயன் குறித்தும் விரிவாக விளக்கப்படுகிறது. அச்சகங்களில் அச்சு நாடகப்பிரதிகள் அச்சக உரிமையாளர்களாலும் குறிப்பிட்ட நபர்களாலும் பதிப்பிக்கப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. அச்சடுக்குதல் எனும் பணியினை ஒரு குறிப்பிட்ட நபர் மேற்கொண்டார் என்பதை தஞ்சை ராகவ நாயக்கரால் அச்சிடப்பட்டதுஎன்று தெரிவித்தனர். அதே போல் இருவர் இணைந்து ஒரு அச்சுகூடத்தை நடத்தியதாக அறிய முடிகிறது. மட்டுவார் குதழாம்பாள் அச்சுக்கூடத்தை வே.முத்தையாபிள்ளை மற்றும் தி.ச வெங்கடாசலம்பிள்ளை இணைந்து நடத்தியதை காண முடிகிறது. அச்சகங்கள் ஒரு பிரதியினை எவ்வாறு அச்சிட்டது என்பதைப் பின்வருமாறு அறியலாம்.
   இப்புத்தகமும் காசிகயா அயோத்தி முதலான திவ்ய நகரங்களின் சரித்திர மடங்கிய காசியாத்திரை என்னும் புத்தகமும் பள்;ளிக்கூட புத்தகங்களும் புஷ்பரத செட்டியார் ஆறுமுகநாவலர் அவர்கள் புத்தகங்களும் வேறு தமிழ் தெலுங்கு புத்தகங்களும் கோயம்புத்தூர் பெரிய கடை வீதியில் 389 வதுவீட்டில் புதிதாக புத்தகக் கடையும் அச்சுக்கூடமும் வைத்திருக்கும் சே.ப. வெங்கடசாமிநாயுடு ஆகிய என்னிடத்தில் பெற்றுக் கொள்ளலாம். அப்சர்வர் என்னும் மேற்படி அச்சுக்கூடத்தில் புத்தகங்களும் பாங்கிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் ஏனையோருக்கும் வேண்டிய பலவித பாரங்க ஜோசியம் ரசீதுகள் முதலியவைகளும் சுத்தமாகவும் ஏனைய அச்சுக்கூடங்களை விட சரசமான கூலிக்கு அச்சிட்டுக் கொடுக்கப்படும். அப்படியே காகிதங்களுக்கு ரூல் இடுதல், புத்தகங்கட்டுதல் முதலிய வேலைகளும் நடத்தப்படுகிறது. வாரகர் ஒராசாத்திரமென்னும் ஜோசியபுத்தகம் அச்சிலிருக்கின்றது. கூடிய சீக்கிரத்தில் வெளிவரும்”. 1891;-கிருஷ்ண நாடகம்.
  மிக முக்கியமான பங்களிப்பினை ஆற்றியவர்கள் அச்சு நாடகப்பிரதிகளில்  பிரதியினைப் பார்வையிட்டவர்களும் பரிசோதித்து அதனை வெளியிட்டவர்களும். இவர்களுக்கென ஒரு தனி மரபினைப் பின்பற்றினர். பிரதிகளை பார்வையிட்ட
திரிசிரபுரம் மகாவித்வ ஜனசேகரராகிய, வி.கோவிந்தசாமிப்பிள்ளை
ஆத்தூர்தாலுகா கீரிப்பட்டிக் கிராமம் மேற்படியார் தம்பி உபாத்தியாயர் ஜோதிடம் மு.வை.குழந்தை வேலைய்யர் (வல்லாளமகாராசன் விலாசம் 1922-முகப்புப் பக்கம்)
குலவை வீரசைவ குமாரசாமி உபாத்தியாயர் காஞ்சி மாநகருக்கடுத்த குண்டியாவிதத்தினை பின்வருமாறு அறியலாம்.
தண்டலம் பரசுராமமுதலியார் குமாரனாகிய கடம்பநாத முதலியார் கணியனூர் மதுராபுரியில்; வசிக்கும் குலால் வரதப்ப உடையார்” (சீதாகல்யாணம் 1910- முகப்புப்பக்கம்”)
   இவ்விதம்  நடை மற்றும் மொழி ஆக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்தனர். புராணங்களில் மூலமொழியில் உள்ளவாறு திருத்தினர். குறிப்பிட்டோர் முன்னிலையில் ஏடுகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய இப்பணியினை மேற்கொண்டனர். பரிசோதித்தவர்கள் பார்வையிட்டவர்கள் தங்களுடைய பெயர், ஊர்,தொழில் ,பரம்பரை ஆகியவற்றைக் கூறி பின்னர் பரிசோதிக்கும் தொழிலில் ஈடுப்படுவதை பெரும்பாலான பிரதிகளில் காண முடிகிறது.
   அச்சுநாடகப் பிரதிகளை அச்சிடுவதற்கு பொருளாதார பின்னணி குறித்த வரலாறு மிக விரிவான முறையில் முகப்புப்பக்கங்களில் பதிவு செய்யப்பட்டன. பிரதிகளை அச்சிடுவதற்கு உதவியவர்கள் குறித்த பதிவுகள்.
சீட்டுக்கவி என்ற பெயரில் நாலுமந்திரி விலாசபிரதி (1870) உதவிய சோமசுந்தர முதலியார்க்கு நன்றி வாழ்த்தும் உதவிசிறப்பு என்ற பெயரில் செகந்திரா பாத்தரான்சிட் ஆபிசு புதுவை வேளாள குல திலகர் பிரபு சோமசுந்தர முதலியார் மீது விருத்தமும் பாடப்பட்டது. இதைத்தவிர அபிதானம் என்ற பெயரிலும் உதவி செய்த கனவான்களின் சிறப்பு கூறப்பட்டது.
அச்சிட்டுத் தரவேண்டுமென்று கேட்டுக் கொண்டுவந்த கனவான்களின் பெயர்கள் மதுரைவடக்குமாசி வீதி இராமாயணச் சாவடிமேலத்தெரு, பஜனை மடம் ஏஜெண்டும.ஸ்ரீ.இ வேலாயுதக் கோனாரவர்கள், ம.ஸ்ரீ.கோ. ந. இருளப்பக் கோனாரவர்கள், ம.ஸ்ரீ. சி.;முகரைமுருகக் கோனாரவர்கள் ம.ஸ்ரீ.கனிஷ்டர் ஆ. இராமாசாமிக் கோனாரவர்கள் (;1900 - அரிச்சந்திரநாடகம் ரிஜிஷ்டர் அறிவிப்பு”) ;ன்று அச்சிடப்பட்டது.
 அச்சுநாடகங்களின் காப்புரிமை குறித்த சட்டங்களாக கீழ்கண்டவை பின்பற்றப்பட்டன.
              1867 - வருடம் 25 வது ஆக்ட்டு 20 வதுபிரிவு 6வது பிரிவின் படிசிலபிரதிகள் காப்புரிமம் பெற்றமை
              1887 வது  வருடம் 25 வது ஆக்ட்டு 20 வதுபிரிவு 6வது பிரிவின் படி காப்புரிமம் பெற்றமை
              1905 வதுவருடம் 25 வது ஆக்ட்டு 20 வதுபிரிவு 8வது விதியின் படி காப்புரிமம் பெற்றமை
              1908 வது வருடம் 15 வது ஆக்ட்டு 20 வதுபிரிவு 8வது விதியின் படி காப்புரிமம் பெற்றமை
              1909 வது வருடம் 15 வது ஆக்ட்டு 20 வதுபிரிவு 8வதுவிதியின் படி காப்புரிமம் பெற்றமை
 பதிப்பித்தவர் , அச்சக உரிமையாளர், பிரதி எழுதிய ஆசிரியர் ஆகியோர் காப்புரிமம் பெற்றனர். காப்புரிமை குறித்த சட்டங்களை மீறுவோர்க்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. இதனை சினேகிதிகட்டு சீட்டு அன்பு என்ற பெயரில் காப்புரிமை தண்டனை வழங்கினர் என பின்வருமாறு அறிய முடிகிறது. 
காப்புரிமதண்டனை:
பாரிலுள்ள மானிடர்க்கு பகருகிறேன் சத்தியமா
கோரி நடப்பார்க்கு குறையில்லை மீரி
பல துளிக்கு நான் பிரந்த பாதகரோமாகில்
நூலைதவரி அச்சிடுவாரிதனை” (1866-சிறுத்தொண்ட நாடகம்)
 விளம்பரங்கள் அச்சான நாடகப் பிரதிகளை குறித்த மிக முக்கியமான அறிமுகங்களை வெளிப்படுத்தின. ஒரு பிரதியினை அறிவதற்கான முக்கிய தரவாக விளம்பரங்கள் இருப்பதைக் காண முடிகிறது. அச்சான நாடகப் பிரதியினை மக்களிடையே கொண்டு செல்வதற்கு ஏற்றவாறு, மக்களை கவரும் நோக்;கில் அட்டைகளில் விளம்பரங்கள் இடம் பெற்றன. வணிக சலுகைகளாக புத்தகங்களை இனாமாக வழங்கி விற்பனையை அதிகரிப்பதற்கான வழிமுறைகளையும் கையாண்டனர்.
  எமது புத்தக சாப்பில் 1901 வது வருடத்தில் புதிதாய் பதிப்பித்த நல்ல பளபளப்புள்ள கிளேசு பதினாறு பவுன் கடிதத்தில் புதுயெழுத்தில் பிழையில்லாமல் அச்சிட்டு புல் சீமைத்தோல் பயிண்டு செய்து முதுகில் சிகப்புதோலின் தங்கரேக்கினால் போகுத்திய புத்தகம் க்கு கிரையம் 3-8-0-சுத்த பதிப்பு புத்தக விளம்பரம்” (1905 – மெய் அரிசந்திர நாடகம்) மேற்கூறிய விளம்பரம் மட்டுமல்லாது மறுபதிப்புகளில் உருவான மாற்றங்களையும் எவ்வகையான மாற்றங்களை பிரதிகளில் புகுத்தியுள்ளனர். என வரிவாக  கூறி விளம்பரங்களை உருவாக்கினர். விளம்பரம் செய்வதன் நோக்கமாக பிழைத்ததிருத்தமின்றி வெளியிடுவது, அச்சிடப்படும் காகிதங்களை கருத்தில் கொள்வது, வணிக சலுகைகள் வழங்கி மக்களை வாங்க செய்வது என அச்சாக்கப் புதுமைகளைக்  கையாண்டிருப்பதைக் காண முடிகிறது.
  அந்த நாடகப்பிரதிகளில் இடம் பெற்ற படங்கள் ஒரு நாடகத்தின் கதையை வசனமின்றி எவ்வித ஆடை அலங்காரங்களுடன் நடிக்க வேண்டும் என்பதற்கான காட்சிப்படுத்தலை மையமாக கொண்டு வெளியாயின. இதன் வழி எவ்வகையான திரைசீலைகளை பயன்படுத்தினர் எவ்வகையான ஆபரணங்களை காலத்திற்கு ஏற்றவாறு அணிந்தனர். வசனமின்றி நாடகத்தை படங்கள் வழி உணர்த்துவதை நோக்கமாக கொண்டு நாடக ஆசிரியர்கள் படங்களை அச்சிட்டிருப்பதைக் காண முடிகிறது. பக்க அளவிற்கு ஏற்றவாறு படங்களின் எண்ணிக்கை அமைந்தன. நாடகப்பாத்திரங்களின் வருகையை குறிக்கும் விதமாக அதிக அளவில் படங்கள் இடம்பெற்றன. 1907 இல் அச்சான இராம நாடகத்தில் மட்டுமே 50 க்கும் மேற்ப்பட்ட படங்கள் அச்சாகி இருப்பதைக் காணமுடிகிறது. இவ்வகையில் படங்கள் ஒப்பனை, நிகழ்விடம் அக்கால அரங்க அமைப்பினை அறிவதற்கான தரவுகளாக அமைந்தன. என்பதைப் பின்வரும் கூற்றின் மூலம் உணரமுடிகிறது.
  இதனால் மஹா சகலமான பேர்;க்கும் தெரியப்படுத்துவது யாதெனில் சென்னப்பட்டணம் பெத்து நாயக்கன் பேட்டை கோவிந்தப்ப நாயக்கன் வீதியில் ரூஉ வது கத விளக்கமுள்ள வீட்டில் ஸ்தாபித்திருக்கும் சுலட்டசண முத்திராட்சரசாலையில் பதிப்பித்த இந்த அரிச்சந்திர விலாசத்தில் சில நூதனமான படங்கள் ஏற்படுத்தியிருக்கிறபடியால் வேண்டியவர்கள் வாங்கிக்கொள்ளலாம். பெரிய படங்களின் அட்டவணை: சுயம்பரப்படம் தேவேந்திர சபைபடம் சந்திரவதி தேவதாசன் விக்கிரியப்படம் தேவர்கள் பிரத்தியசப்படம், பட்டாபிசேகப்படம் (மிகப்பெரியது) இதல்லாமலும் இன்னும் அரிச்சந்திர விலாசத்திற்கே சில படங்களும் நூதனமாய் ஏற்படுத்தியிருக்கிற நள விலாசமும் போட போகிறோம் இதே சகலருமறியவேண்டியது”. என்பதில் வழி அறியலாம்.
தொகுப்பாக
அச்சிடப்பட்ட நாடகப்பிரதிகளின் அச்சாக்க பணி குறித்து மிக விரிவாக ஆராய  வேண்டிய தேவை உள்ளது.
நாடகத்தின் தூண்களாக விளங்கும் சங்கரதாஸ் சுவாமிகள் மற்றும் பம்மல் சம்பந்த முதலியார் ஆகியோர்க்கு அச்சான நாடகப்பிரதிகளும் அதில் கையாளப்பட்ட பல வசனங்கள், இராகங்கள், தாளங்கள் ஆகியவை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.
அச்சான நாடகப்பிரதிகள் அச்சு சார்ந்த வரலாற்றை மிகத் தெளிவாக முன்னெடுப்பதைக் காண முடிகிறது.
அச்சிடும்போது கவனிக்கவேண்டிய அச்சுமுறைமைகள் பிரதியினைப் பரிசோதித்தவர், பார்வையிட்டவர் என மிகப்பெரிய வரலாற்றைப் புரிந்து கொள்ள முடிகிறது.
அச்சுநாடகபிரதிகள் அச்சகங்களின் சிறப்பினை வெளிக்கொணர்வதிலும் அதை சார்ந்த வரலாற்றை முன்னெடுப்பதிலும் மிகப்பெரிய பங்காற்றின என்பதாக உணர்ந்து கொள்ள முடிகிறது.


Tuesday 16 June 2020

கூட்டம் 45. 21.06.2020.


அந்தகக்கவிப் பேரவை

(பார்வையற்றோரால் நடத்தப்படும் இலக்கிய கூட்டம்)

கூட்டம் 45.

நாள்: 21/06/2020. ஞாயிற்றுக் கிழமை
நேரம்: காலை 10:00 மணி.
இடம்: இணையவெளி - ஜூம் (ZOOM அரங்கம்.
இணைவதற்கான தொடுப்பு :

https://us02web.zoom.us/j/85656733405

கூட்டத்திற்கான எண்: 856 5673 3405
கடவுச்சொல் இல்லை.

அன்புடையீர்,
பேரவையின் நாற்பத்து ஐந்தாம் கூட்டத்திற்கு தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
நிகழ்ச்சி நிரல்
தமிழ்ச்சுவை :
திரு. மு. இராமன், பட்டதாரி தமிழ் ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரவாயில், சென்னை.
ஆளுமை அறிவோம்:
“கலைஞர் எனும் சமூக நீதி காவலர்” முனைவர் கு. முருகானந்தன், உதவிப் பேராசிரியர் ஆங்கிலம், திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி, கல்லக்குரிச்சி.
நூல் அறிமுகம் :
“நா. பார்த்தசாரதி அவர்களின் பொன்விலங்கு”  செல்வி. கோ. சியாமலா, உதவியாளர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, சென்னை.
ஆய்வுக்கட்டுரைகள் :
“தமிழ் அரங்க வரலாறு--அச்சு நாடகப் பிரதிகள் (1835-- 1922)முனைவர் அ.கோகிலா, உதவிப் பேராசிரியர்,தமிழ்த்துறை,சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, சென்னை.
“சஞ்சாரம் நாவலில் புலப்படும் சமூகம்சார் உளச்சிக்கல்கல்” திரு. ஆ.அடிசன், முனைவர்ப்பட்ட ஆய்வாளர், புதுவைப் பல்கலைக்கழகம்.

மேலதிக விவரங்களுக்கு :
நாற்பத்தைந்தாம் மாத கூட்ட ஒருங்கிணைப்பாளர்.
திருமதி வத்சலா  
9551628327
தலைவர்
திரு. செ. பிரதீப்
94457 49689. 93 83 39 93 83.
செயலாளர்
திரு. மு. ராமன்
9444367850.
இணையம் மூலமாக நடத்தப்படும் இந்த கூட்டத்தில் பங்கேற்க இருக்கும் தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்கும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

ஜூம் பதிவிறக்க:

ஆண்டிராயிடு: https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings
ஐஃபோன்: https://itunes.apple.com/us/app/id546505307
தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன
பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நன்றி.

Tuesday 9 June 2020

அந்தகக்கவிப் பேரவையின் சிறப்பு கூடல்! முனைவர் மு. ரமேசு ஆய்வுரை


அந்தகக்கவிப் பேரவையின் சிறப்பு கூடல்! முனைவர் மு. ரமேசு ஆய்வுரை

ஆருயிர் மருந்தான பேரிடரை எழுதி பார்த்தல்

மணிமேகலைக் காப்பியத்தை முன்வைத்து

முனைவர் மு.ரமேசு
நாள் : 12.06.2020 வெள்ளிக்கிழமை.
நேரம் : மாலை 06:00 மணி.
இடம் : ஜூம் அரங்கம் – வலையொளி நேரலை.
அன்புடையீர்,
இளம் கவிஞரும் ஆய்வாளருமான பேராசிரியர் முனைவர் மு. ரமேசு அவர்கள் பல்வேறு புதிய தளங்களில் தனது ஆய்வினை மேற்கொண்டு வருகிறார். பத்திற்கும் மேற்பட்ட நூல்களை படைத்துள்ளார். இத்தகு சிறப்பிற்குரிய ஆய்வாளர் மு. ரமேசு அவர்கள் தற்பொழுது எழுதியுள்ள
“ஆருயிர் மருந்தான பேரிடரை எழுதி பார்த்தல்
மணிமேகலைக் காப்பியத்தை முன்வைத்து”
என்ற கட்டுரை நம்மை வெகுவாக ஈர்க்கக்கூடியது. இந்த பேரிடர் காலத்தை செவ்விலக்கிய சான்றுகளுல் ஒன்றான மணிமேகலைக் காப்பியத்தை முன்வைத்து எழுதியிருப்பது ஆய்வாளரின் தனித்தன்மையை புலப்படுத்துகிறது. இதில் அவர் கையாண்டிருக்கும் மேற்கோல்கள், சான்றுகள் அனைத்தும் அவரின் இடைவிடாத வாசிப்பிற்கும் அயராத ஆய்விற்கும் சான்றாகிறது. புதிய தளத்தில் படைக்கப்பட்டிருக்கும் இவ்வாய்வை நாம் அனைவரும் படித்து கலந்துரையாட மேலே குறிப்பிட்டுள்ளபடி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேராசிரியர் முனைவர் முருகேசன் அவர்கள் ஆய்வரங்கை நெறிப்படுத்துகிறார். கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடுப்பினைச் சொடுக்கி கட்டுரையை வாசிக்கலாம்.
பேராசிரியர் முனைவர் மு. ரமேசு அவர்களின் ஆய்வுரையைத் தொடர்ந்து கலந்துரையாடலுக்கான நேரம் ஒதுக்கப்படும். கூட்டத்தில் இணைய
Topic: அந்தகக்கவிப் பேரவையின் சிறப்பு கூடல்! முனைவர் மு. ரமேசு ஆய்வுரை
Time: Jun 12, 2020 06:00 PM India
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/87423059329

Meeting ID: 874 2305 9329
ஜூம் அரங்கில் இணைய இயலாதவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அந்தகக்கவிப் பேரவையின் வலையொளிக்கான தொடுப்பில் நேரலையில் இணையலாம்.
https://www.youtube.com/channel/UCGWn2hX48zfHzRZRu9GFbdQ

மேலதிக விவரங்களுக்கு :
தலைவர்
திரு. செ. பிரதீப்
94457 49689. 93 83 39 93 83.
செயலாளர்
திரு. மு. ராமன்
9444367850.
இணையம் மூலமாக நடத்தப்படும் இந்த கூட்டத்தில் பங்கேற்க இருக்கும் தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்கும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

ஜூம் பதிவிறக்க:

ஆண்டிராயிடு: https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings
ஐஃபோன்: https://itunes.apple.com/us/app/id546505307
தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன
பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நன்றி.