Saturday 24 February 2018

பலே பலே ,அந்தகக்கவிப் பேரவைக்கு ஒரு சபாஷ்

அந்தகக்கவி பேரவையின் முதலாம் ஆண்டு விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா குறித்து தினமலர் தளத்தில் வந்த கட்டுரை

- ஆக்கம்: எல்.முருகராஜ் - தினமலர் ஆசிரியர்

பலே பலே ,அந்தகக்கவிப் பேரவைக்கு ஒரு சபாஷ்

பலே பலே ,அந்தகக்கவிப் பேரவைக்கு ஒரு சபாஷ்பார்வையற்றோர் தங்கள் தமிழறிவை மேம்படுத்திக் கொள்ளும் பொருட்டு உருவாக்கப்பட்டதுதான் அந்தகக்கவிப் பேரவை.பேரவையின் முதலாம் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட மகிழ்வும் நெகிழ்வும் இன்னும் என் நெஞ்சைவிட்டு நீங்க மறுக்கிறது.அவர்களது அளவில்லாத அன்பிலும் பாசத்திலும் திக்குமுக்காடிப் போனேன்.அவர்களது தமிழார்வத்தையும் திறமையையும் பார்த்து வியந்து போனேன்.அந்தகக்கவி என்று பெயர் வைத்ததற்கே ஒரு சபாஷ் போடலாம்காரணம் தொண்டை நாட்டின் பாலாற்றங்கரையில் உள்ள பூதுாரில் பிறந்த இந்தக்கவிஞருக்கு பிறவி முதலே பார்வை கிடையாது தனது முதுகில் எழுத்துக்களை எழுதச்சொல்லி தமிழ் கற்றவர், பல இலக்கியங்களை படித்தவர்,சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்,திருவாரூர் உலா,திருக்கழுக்குன்ற மாலை போன்ற பல அழியா காவியங்களை படைத்தவர்.இவரது பெயரில் பேரவையை துவங்கிய பார்வையற்ற தமிழார்வம் மிக்க சிலர் மாதந்தோறும் ஏதேனும் ஒரு பொதுவெளியில் சந்தித்து கட்டுரை வாசித்தல் விவாதித்தில் திறன் வளர்த்தல் என்று கடந்த ஒரு ஆண்டாக இருந்தனர்.இந்தக்கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் உள்ளீட்ட பல கட்டுரைகளை தொகுத்து தமிழ் வனம் என்ற நுாலை உருவாக்கியுள்ளனர்.

இந்த நுால் வெளியிட்டு விழாவை மையப்படுத்தி முதலாம் ஆண்டு விழாவினை வடிவமைத்திருந்தனர். பேரவையின் செயலாளர் மு.ராமன் வரவேற்புரை வழங்கிட, தலைவர் செ. பிரதீப் தலைமை உரையாற்றிட விழா களைகட்டியது. பார்வையற்றோர் பள்ளியில் ஒன்றாகவும் நன்றாகவும் படித்த அர.ஜெயச்சந்திரன்,ப.ரங்கநாதன்,க.வேலு ஆகியோர் ஆகியோர் இன்று பல்வேறு கல்லாரிகளின் முதல்வர்களாக உள்ளனர். தமிழ்வனம் நுாலினை வெளியிட்டனர். இவர்கள் பேசுகையில் கல்வி எங்களை இவ்வளவு உயரமான இடத்தில் வைத்திருப்பது போல உங்களை இதைவிட உயரமான இடத்திற்கு கொண்டு செல்லும் படியுங்கள் உழையுங்கள் என்றனர். மாநிலக்கல்லூரி தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர் மு. பழனி தமிழ் வனம் நூல் குறித்த அறிமுகத்தை அழகுபட தொகுத்துரைத்தார். ஜீவா பதிப்பகத்தின் பதிப்பாளர் கந்தசாமி வாழ்த்துரை வழங்கினார்.கணினி பொறியாளர் திரு. ச. ரவிக்குமார் அவர்கள் வாசிப்போம் வலைப்பக்கத்தின் (www.vaasippom.blogspot.in) அறிமுகத்தையும், அதன் வடிவமைப்பு, பயன்படுத்தும் முறை, எதிர்கால திட்டங்கள் போன்றவற்றை சிறப்பாக விளக்கினார்.அரங்கில் இருப்பவர்களைப் பார்த்து கொஞ்சம் குரல்தானம் தாருங்களேன் என்றும் கேட்டுக்கொண்டார். விழாவின் ஒரு முக்கியமான நிகழ்வாக ஸ்ரீ நிகேதன் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற 'பன்னோக்கில் திருக்குறள்' நிகழ்வைச் சொல்லலாம்.திருக்குறளின் எண்ணைச் சொன்னால் போதும் அதிகாரத்தைச் சொல்லி குறளை முழுமையாகச் சொல்வார்கள் நீங்கள் குறளின் முதல் வார்த்தையைச் சொன்னால் முழுக்குறளையும் சொல்லி எண் அதிகாரம் போன்றவற்றையும் சொல்வார்கள், எப்படி கேட்டாலும் தயங்காது அவர்கள் சொன்ன பதிலால் அரங்கம் அதிர்ந்தது குறள் மகிழ்ந்தது.

சென்னைப் பல்கலைக் கழக தமிழ் மொழித்துறையின் முன்னாள் தலைவர் அரங்க ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இலக்கிய பொழிவில் கலந்து கொண்டு பார்வையற்ற மா.உத்திராபதி, செந்தில்குமார், மோகன், திவாகர், குமார், சேஷாத்ரி ஆகிய பேராசிரியர்கள் தமிழால் விருந்து படைத்தனர் காதுகள் குளிர்ந்தது. ஓடி ஓடி உதவிய தன்னார்வலர்கள் துவங்கி நிகழ்ச்சிக்கு ஒலி ஔி வசதி செய்து கொடுத்த மைக் செட் கலைஞர்கள் வரை ஒருவரையும் விடாமல் பாராட்டி நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தனர்.இந்த விழாவில் நான் கலந்து கொள்ளவேண்டும் என்று விரும்பிய வள்ளுவன் பார்வை கோவை வெங்கடேஷ்க்கும், என்னை அழைத்து அன்பில் கரையச் செய்திட்ட பண்பாளர் பாண்டியராஜ் அவர்களுக்கும் என் நன்றிகள்.தமிழுக்கு இவர்கள் செய்யும் செய்துவரும் சேவை மிகப்பெரிது மனம் திறந்து பாராட்ட நினைப்பவர்கள் பாண்டியராஜை அழைக்கவும் எண்:9841129163.

- எல்.முருகராஜ் murugaraj@dinamalar.in

Thursday 22 February 2018


நன்றியுடன் அந்தகக்கவிப் பேரவை

அந்தகக்கவிப் பேரவையின் முதலாம் ஆண்டு விழா மற்றும் (தமிழ் வனம்) நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற உதவிய ஒவ்வொரு நல்ல உள்ளங்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியினை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஸ்ரீ நிகேதன் பள்ளி மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாட நிகழ்ச்சி இனிதே தொடங்கியது.  பேரவையின் செயலாளர் திரு.மு.ராமன் வரவேற்புரை வழங்கினார். தலைவர் திரு. செ. பிரதீப் தலைமை உரையாற்றினார்.

போற்றுதற்குரிய பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கல்லூரியின் முதல்வர் முனைவர் அர. ஜெயச்சந்திரன் அவர்கள், ஈரோடு மாவட்டம், நம்பியூர், திட்டமடை அரசு கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் ப. ரங்கநாதன் அவர்கள், நாகை மாவட்டம், மணல்மேடு, அரசு  கலைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் க. வேலு அவர்கள் பங்கேற்று நூலினை வெளியிட, மதிப்பிற்குரிய கன்னிமாரா நூலகத்தின் மேலாளர் திரு. கார்த்திக் அவர்கள், எழுத்தாளரும்  வாசிப்பாளருமான திருமதி. சரோஜா சகாதேவன் அவர்கள், வாசிப்பாளரும் தன்னார்வலருமான திருமதி. பிரேமா  அவர்கள் ஆகியோர் நூலினைப் பெற்றுக்கொண்டு சிறப்பித்தனர். முதல்வர்கள் பள்ளிக்காலம் முதல் தாங்கள் முதல்வர்களாக பொறுப்பேற்றது வரையிலான அனுபவங்களை அரங்கிற்கு சிறப்பான முறையில் எடுத்துரைத்தனர்.

மாநிலக்கல்லூரி தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர் மு. பழனி அவர்கள் தமிழ் வனம் நூல் குறித்த அறிமுகத்தை அழகுபட தொகுத்துரைத்தார். ஜீவா பதிப்பகத்தின் பதிப்பாளர்  திரு. கந்தசாமி அவர்கள் சிறப்பான முறையில் வாழ்த்துரை வழங்கினார்.

கணினி பொறியாளர் திரு. ச.இரவிக்குமார் அவர்கள் வாசிப்போம்  வலைப்பக்கத்தின் (www.vaasippom.blogspot.in) அறிமுகத்தையும், அதன் வடிவமைப்பு, பயன்படுத்தும் முறை, எதிர்கால திட்டங்கள் போன்றவற்றையும் சிறப்பாக விளக்கினார்.

தமிழ் வனம் நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளை படைத்திட்ட கட்டுரையாளர்களுக்கு முதல்வர்கள் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தனர்.

ஸ்ரீ நிகேதன் மேல்நிலைப் பள்ளியின் திருக்குறள் முற்றோதல் செம்மல் மாணவர்கள் "பன்னோக்கில் திருக்குறள்" என்ற நிகழ்வில், பார்வையாளர்கள் வியக்கும் வகையில் திருக்குறள் தொடர்பான கேள்விகளுக்கு பதில்சொல்லி அரங்கை அசத்தினர்.

சென்னைப் பல்கலைக் கழக தமிழ் மொழித்துறையின் மேனாள் தலைவர் முனைவர் அரங்க இராமலிங்கம் அவர்கள் நெறிப்படுத்தலில், "வாழ்வியல் நெறியை பெரிதும் வலியுறுத்தும் இலக்கியம்" என்ற  தலைப்பின்கீழ், 'சங்க இலக்கியமே' என்று மாநிலக்கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் மா. உத்திராபதி அவர்களும்,  'நீதி இலக்கியமே' என்று திருவாரூர்  அரசு கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர். செந்தில்குமார் அவர்களும், 'பக்தி இலக்கியமே' என்று டாக்டர் அம்பேத்கர் அரசினர் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் மோகன் அவர்களும், 'சிற்றிலக்கியமே' என்று உலகநாதன் நாராயணசாமி அரசினர் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் திவாகர் அவர்களும், 'இக்கால இலக்கியமே' என்று மாநிலக்கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் குமார் அவர்களும், 'காப்பிய இலக்கியமே' என்று நந்தனம் ஆடவர் அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர். சேஷாத்ரி அவர்களும் அரங்கில்  அமர்ந்தவர்களுக்கு அறுசுவை விருந்து படைக்க, நெறியாளர் அவர்கள் வாழ்வியில் நெறியைப் பெரிதும் வலியுறுத்தும் இலக்கியம் நீதி இலக்கியமே என்ற தம் கருத்தைச் சொல்லி பொழிவரங்கை சிறப்பாக முடித்துவைத்தார்.

விழாவில் அனைவருக்கும் ஓடி ஓடி உதவிய தன்னார்வலர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி  சிறப்பிக்கப்பட்டது. இறுதியாக திரு. சே. பாண்டியராஜ் நன்றியுரை நவில நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது.

விழாவில் பங்கேற்று சிறப்பித்த முதல்வர்கள் உள்ளிட்ட அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும், ஸ்ரீ நிகேதன் பள்ளி திருக்குறள் முற்றோதல் செம்மல் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பொழிவரங்கின் நெறியாளர் உள்ளிட்ட அத்தனை  பொழிவாளர்களுக்கும், விழா சிறப்பாக நடைபெற உதவிய ஒவ்வொரு கொடையாளர்களுக்கும்,  தன்னார்வலர்களுக்கும், நூல் சிறப்பாக வெளிவர உதவிய பதிப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும், கட்டுரைகளை வழங்கிய மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும்,  விழாவில் கலந்துக்கொண்டு முழுமையாக பங்கேற்ற தினமலர் ஆசிரியர் திரு.முருகராஜ் அவர்களுக்கும், ஒலி ஒளி வசதி செய்த திரு. முத்து அவர்களுக்கும், திரு. கோபிநாத் அவர்களுக்கும், விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் எங்களது நன்றியினைக் காணிக்கையாக்குகிறோம்.



மேலும் படங்களுக்கு https://photos.app.goo.gl/r5EWe5AuG9gfAxHG2

நன்றியுடன்

அந்தகக்கவிப் பேரவை.

Tuesday 20 February 2018

அந்தகக்கவிப் பேரவையின் 18ஆம் மாதக் கூட்டம் 25/02/2018

அன்புடையீர்,
அந்தகக்கவிப் பேரவையின் 18ஆம் மாத நிகழ்வு, 25/02/2018 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணிக்குசென்னை அரும்பாக்கத்தில் உள்ள கோலபெருமாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். நிகழ்ச்சி  மாணவர் கட்டுரை, நூல் அறிமுகம்ஆய்வுக் கட்டுரை மற்றும்  ஆய்வுக் கட்டுரை மீதான விவாதம் என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நூல் அறிமுகம்: தோழர் கார்முகில் எழுதிய “இந்திய தேசிய பிரச்சனையும் புதிய ஜனநாயகமும் - E.வெங்கடேசன்தமிழ் ஆசிரியர்அரசுப் பள்ளிஆம்பூர்.

ஆய்வுக்கட்டுரை: உலக மயமாக்கலும் தமிழ் வளர்ச்சிக்கான தடைகளும் - 
திரு. S. வினோத்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி, சென்னை.

நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 23/02/2018க்குள்
  தொடர்புக்கொண்டு தங்கள் வரவை உறுதிசெய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

பிப்ரவரி மாத நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்

கி.லட்சுமிநாராயணன்
90929 61787

தலைவர்

பிரதீப்
94457 49689. 93833 99383.

செயலாளர்

மு.ராமன்
94443 67850.

நன்றி.

http://anthakakavi.blogspot.in



Monday 12 February 2018

அந்தகக்கவிப் பேரவை முதலாம் ஆண்டு விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்

அந்தகக்கவிப் பேரவை
anthakakavi@gmail.com

முதலாம் ஆண்டு விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா
அழைப்பிதழ்



நாள்: 18/02/2018
நேரம்: 2.45 மணி முதல் 7.00 மணி வரை
இடம்: ICSA மையம், பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை. (கன்னிமாரா நூலகம் மற்றும் அருங்காட்சியகம் எதிரில்)



நிகழ்ச்சி நிரல்
02.45 மணி: பேரவையின் முதலாம் ஆண்டு விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா தொடக்கம்
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை: திரு. மு. ராமன், செயலாளர், அந்தகக்கவிப் பேரவை. தமிழ் பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரவாயில், சென்னை.
தலைமை உரை: திரு. செ. பிரதீப், தலைவர், அந்தகக்கவிப் பேரவை. விரிவுரையாளர், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, செய்யாறு.

03.00 மணி
தமிழ் வனம்
நூல் வெளியீடு
மாண்புமிகு முதல்வர்கள்
சிறப்பு விருந்தினர் உரை:
முனைவர் அர. ஜெயச்சந்திரன் அவர்கள்,
முதல்வர், வேப்பந்தட்டை அரசு கல்லூரி, பெரம்பலூர் மாவட்டம்.
முனைவர் ப. ரங்கநாதன் அவர்கள்
முதல்வர், திட்டமடை அரசு கலை அறிவியல் கல்லூரி, நம்பியூர், ஈரோடு மாவட்டம்.
முனைவர் க. வேலு அவர்கள்
முதல்வர், அரசு கலைக் கல்லூரி, மணல்மேடு, நாகை மாவட்டம்.


04.00 மணி: வாசிப்போம் வலைப்பக்கம் அறிமுகம் (www.vaasippom.blogspot.in)
திரு. ச. ரவிக்குமார், நிறுவன உறுப்பினர், அந்தகக்கவிப் பேரவை.   கணினி பொறியாளர், சென்னை

வாழ்த்துரை
முனைவர். மு. பழனி, இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை.
திரு. . கந்தசாமி, பதிப்பாளர், ஜீவா பதிப்பகம், ASK Book World, தி நகர், சென்னை
04.45 மணி: தேநீர் இடைவேளை

05.00 மணி: பொழிவரங்கம்
பொழிவரங்க அறிமுக உரை: திருமதி. சி. வத்சலா, பொருளாளர், அந்தகக்கவிப் பேரவை. முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, ராணிமேரிக் கல்லூரி, சென்னை.

வாழ்வியல் நெறியை பெரிதும் வலியுறுத்தும் இலக்கியம்
நெறியாளர்: முனைவர். அரங்க இராமலிங்கம் அவர்கள், மேனாள் தலைவர், தமிழ் மொழித் துறை, சென்னைப் பல்கலைக் கழகம்.

சங்க இலக்கியமே: பேராசிரியர். மா.  உத்திராபதி அவர்கள், தமிழ்த்துறை தலைவர், மாநிலக் கல்லூரி, சென்னை.
நீதி இலக்கியமே: முனைவர் மு. செந்தில்குமார் அவர்கள், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, திரு.வி.க அரசு கலைக் கல்லூரி, திருவாரூர்.

காப்பிய இலக்கியமே:  பேராசிரியர்  சேஷாத்ரி அவர்கள், தமிழ்த்துறை தலைவர், ஆடவர் அரசு கலைக் கல்லூரி, நந்தனம், சென்னை.

பக்தி இலக்கியமே: பேராசிரியர் அ. மோகன் அவர்கள், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர் அம்பேத்கர் அரசினர் கல்லூரி, வியாசர்பாடி, சென்னை.

சிற்றிலக்கியமே:  முனைவர் சே. திவாகர் அவர்கள், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, உலகநாதன் நாராயணசாமி அரசினர் கல்லூரி, பொன்னேரி.

இக்கால இலக்கியமே: பேராசிரியர் கெ.குமார் அவர்கள், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை.

07.00 மணி: நன்றி உரை: திரு. சே. பாண்டியராஜ், நிறுவன உறுப்பினர், அந்தகக்கவிப் பேரவை. இந்தியன் வங்கி, அம்பத்தூர், சென்னை.

நிகழ்ச்சி தொகுப்புரை: திரு. கி. லட்சுமிநாராயணன், நிறுவன உறுப்பினர், அந்தகக்கவிப் பேரவை. முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, ராணிமேரிக் கல்லூரி, சென்னை.
அனைவரும் வருக!

நன்றி
தொடர்புக்கு
தலைவர்: திரு. செ. பிரதீப் 94 45 74 96 89. 93 83 39 93 83.
செயலாளர்: திரு. மு. ராமன் 94 44 36 78 50.