Tuesday 28 April 2020

வேள்பாரி கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல்


அந்தகக்கவிப் பேரவை

(பார்வையற்றோரால் நடத்தப்படும் இலக்கியக் கூட்டம்)
வீரயுக நாயகன் வேள்பாரி
அனுபவப் பகிர்வு அழைப்பு

நாள் : 01.05.2020.
நேரம் : 02.30 மணி.
இடம் : ஜூம் அரங்கம்.
நிகழ்ச்சி நிரல்

தலைமை : முனைவர் முருகேசன், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, அரசு கலைக் கல்லூரி, ஆத்தூர்.
வரலாற்று நாவல்கள் வரிசையில் வேள்பாரி : முனைவர். முருகானந்தன், ஆங்கில உதவிப் பேராசிரியர், கள்ளக்குறிச்சி.
பல்லுயிர் காக்கும் பம்பு : திருமதி அமலா, ஆங்கில பட்டதாரி ஆசிரியர், ஆரணி.
நீலன் சூட்டிய மயிலம் : திரு அரங்க. ராஜா, விரிவுரையாளர், தமிழ்த்துறை, பக்தவத்சலம் கல்லூரி, சென்னை.
விசித்திர விலங்குகளும் விநோத பறவைகளும் : திரு செல்வமணி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி, சென்னை.
அழிக்கப்பட்ட குடிகளின் அழியாக்காவியம் : முனைவர் வரதராஜன், உதவிப் பேராசிரியர், ஆங்கிலம், பகத்சிங் கல்லூரி, புதுடில்லி.
ம்பு மக்களின் திருமண முறை : திரு பாண்டியராஜ், இந்தியன் வங்கி, சென்னை.
அடங்காத அதிர்வு - அங்கவையின் வீரம்: திருமதி வத்சலா, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, ராணிமேரி கல்லூரி, சென்னை.
பொற்சுவையின் பன்முக ஆளுமையும் எல்லையற்ற துணிவும்  : திரு ராமன், தமிழ் பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரவாயில், சென்னை.
ஒளியை மிஞ்சும் இருளின் அழகு - காமன் விளக்கு : திரு தனக்கோட்டி, முதுகலை ஆசிரியர், தமிழ், அரசு மேல்நிலைப் பள்ளி, மெய்யூர்.
ம்புநாட்டில் விருந்தோம்பல் : திரு லட்சுமிநாராயணன், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, ராணிமேரிக் கல்லூரி, சென்னை.
பாணர்களின் புகழிடம் பம்பு : பிரதீப், விரிவுரையாளர், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, செய்யாறு.
திசைவேழரின் போர் அறம் : திரு ராமலிங்கம், தமிழ் பட்டதாரி ஆசிரியர், கோடம்பாக்கம், சென்னை.
கட்டுடைக்கப்பட்ட மரபுகள் : முனைவர் மகேந்திரன், உதவிப் பேராசிரியர் ஆங்கிலம், தியாகராயா கல்லூரி, சென்னை.
நன்றி.
மேலதிக விவரங்களுக்கு
திரு சே. பாண்டியராஜ்.
9841129163
தலைவர்
திரு செ. பிரதீப்
94457 49689. 93 83 39 93 83.
செயலாளர்
திரு மு. ராமன்
9444367850.
இணையம் மூலமாக நடத்தப்படும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க இருக்கும் வாசகர்கள், தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்கும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

ஜூம் பதிவிறக்க:

ஆண்டிராயிடு: https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings
ஐஃபோன்: https://itunes.apple.com/us/app/id546505307
தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன
பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.


Monday 20 April 2020

அந்தகக்கவிப் பேரவையின் இணையவெளி கூட்டத்திற்கான அறிவிப்பு கூட்டம் 43. 26.04.2020.


அந்தகக்கவிப் பேரவை

(பார்வையற்றோரால் நடத்தப்படும் இலக்கிய கூட்டம்)

கூட்டம் 43.

நாள்: 26/04/2020. ஞாயிற்றுக் கிழமை.
நேரம்: காலை 10:30 மணி.
இடம்: இணையவெளி - ஜூம் (ZOOM அரங்கம்.
அன்புடையீர்,
பேரவையின் நாற்பத்து மூன்றாம் கூட்டத்திற்கு தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ள எண்களில் தொடர்புக்கொண்டு 25/04/2020க்குள் தங்கள் பங்கேற்பை உறுதி செய்யும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.
நிகழ்ச்சி நிரல்
தமிழ்ச்சுவை :
திரு. சு. செல்வமணி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி, சென்னை.
ஆளுமை அறிவோம்:
“பட்டுக்கோட்டை பாட்டுக்கோட்டையான கதை” திரு. மு.ராமன், தமிழ் பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரவாயில், சென்னை.
நூல் அறிமுகம் :
“எஸ்.பாலமுருகன் அவர்களின் சோழகர் தொட்டி” முனைவர் வரதராஜன், உதவிப் பேராசிரியர் ஆங்கிலம், பகத்சிங் கல்லூரி, புதுடில்லி.
ஆய்வுக்கட்டுரை :
“பாவேந்தர் பரம்பரைக் கவிஞர்களின் காதல் நுட்பம்” திரு. லட்சுமிநாராயணன், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, ராணிமேரிக்கல்லூரி, சென்னை.
மேலதிக விவரங்களுக்கு :
சித்திரை மாத கூட்ட ஒருங்கிணைப்பாளர்.
தலைவர்
திரு. செ. பிரதீப்
94457 49689. 93 83 39 93 83.
செயலாளர்
திரு. மு. ராமன்
9444367850.
இணையம் மூலமாக நடத்தப்படும் இந்த கூட்டத்தில் பங்கேற்க இருக்கும் தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்கும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

ஜூம் பதிவிறக்க:

ஆண்டிராயிடு: https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings
ஐஃபோன்: https://itunes.apple.com/us/app/id546505307
தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன
பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நன்றி.

வீரயுக நாயகன் வேள்பாரி அனுபவப் பகிர்வு அழைப்பு 01.05.2020. நண்பகல் 02:30 மணி.


அந்தகக்கவிப் பேரவை

(பார்வையற்றோரால் நடத்தப்படும் இலக்கிய கூட்டம்)

வீரயுக நாயகன் வேள்பாரி ஓர் அனுபவப் பகிர்வு

நாள்: 01.05.2020.
நேரம்: நண்பகல் 02:30 மணி.
இடம்: இணையவெளி ஜூம் (zoom) அரங்கம்.
முன் குறிப்பு:
கூட்டத்தில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயர், வேள்பாரியில் தாங்கள் தெரிவு செய்த தலைப்பு போன்ற விவரங்களை 29/04/2020க்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள செல்பேசி எண்ணில் தொடர்புக்கொண்டு முன்பதிவு செய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம். முதலில் பதிவு செய்யும் பத்து வாசகர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும்.
பாரி என்பவனை வள்ளலாகவும், கபிலரின் நண்பனாகவும் மட்டுமே அறிந்த தமிழ்ச் சமூகத்திற்கு பல்துறை வித்தகனாக படம்பிடித்துக் காட்டுகிறார் நூலின் ஆசிரியர். பரம்புநாடும் பச்சைமலையும் அதனைச் சுற்றியுள்ள குன்றுகளும், ஊர்களும் இயற்கை வளங்களும் பல செய்தியைச் சொல்லி செல்கின்றன. அறிவுகளைப் பகுத்த தொல்காப்பியர் பச்சைமலைத் தொடரைத் தொடர்ந்து ஆய்ந்து இயற்றியதுவோ ஒற்றறிவதுவே என்று எண்ணத்தோன்றுகிறது. சங்க இலக்கியத்தின் சாறு பிழிந்து பருக பணித்திருக்கிறார் படைப்பாளர். கதையின் தொடக்கத்தில் இருந்து பாரி வருவான் என்று சொல்லி அழைத்து செல்லும் ஆசிரியர் பாரியின் வரவிற்கு பிறகு பரம்பின் குரல் ஒலிக்கும் என்று சொல்லி முன்னோக்கி அழைத்து செல்கிறார். கதைகளில் வரும் நத்தை உள்ளிட்ட பூச்சிகள், பாம்பு வகைகள், ஆட்கொல்லி மரம், மங்கையர் மணம் முகர்ந்து மலரும் மரம் உள்ளிட்ட மரங்கள்,  இராவெரிச்செடி, காக்கா விரிச்சி போன்ற பறவைகள், விருந்தாகும் அறுவதாங்கோழி உள்ளிட்ட உயிரிணங்கள், தேவ வாக்கு சொல்லும் விலங்கு உள்ளிட்ட விலங்குகள், திரையர்கள், காடர்கள் உள்ளிட்ட வலிமை மிக்க மணிதர்கள், மூலிகைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட போர்வை, மூலிகைகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட வீரர்களுக்கான கவசங்கள், பூச்சிகளையும், யானைகளையும், காற்றையும் காற்றியையும் போருக்கு பயன்படுத்திய விதம், எரியும் பச்சைச் செடி, அடைமழையிலும் அனையாத தீப்பந்தங்கள், பழையன், வாரிக்கையன், தேக்கன் போன்ற வயது மூத்தவர்களின் செயல்பாடுகள், வானை மிஞ்சும் அறிவைக் கொண்ட பேராசான் திசைவேலர், பெரும்புலவர் கபிலர், முருகன் வள்ளி காதல், ஆதினி, மயிலா, அங்கவை, பொற்சுவை போன்ற பெண்களின் அறிவுக்கூர்மை, நீலன், இறவாதான் உள்ளிட்ட வீரர்களின் துடிப்பு, தளபதிகளின் தந்திரம், அமைச்சர்களின் செருக்கு, மூவேந்தர்களின் சூழ்ச்சி, பாரியின் மாட்சி என அத்தனையும் வியக்க வைக்கிறது. இந்த நூலினைப் படிக்கும் போது கதைகளினூடே வந்த இறைவழிபாடு சித்திரைத் திருநாளில் தமிழர் குலதெய்வ வழிபாட்டை நினைவுப் படுத்தி சென்றது. ஈடு இணை இல்லா இந்நூல் அனைவராலும் படிக்கப்பட வேண்டிய இயற்கையின் இரகசியம்.
இதனை எழுதிய சு.வெங்கடேசன் ஐயா அவர்கள் பல மணி நேர தூக்கத்தைத் துரந்து, நூற்றுக்கணக்கான நூல்களைப் படித்து, ஆயிரக்கணக்கான நாட்களைக் கடந்து உழைத்திருப்பது நூலில் புலனாகிறது. ஓவியர் ம.செ அவர்களின் ஓவியம் கதைகளின் நகர்வை எத்தனைச் சிறப்பாக காட்சிப் படுத்தியிருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது. இத்தகு சிறப்பிற்குரிய நூலினைப் படித்த பார்வையற்றோர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துக்கொள்ள ஏதுவாக வேள்பாரி அனுபவ பகிர்வு என்ற பொருண்மையில் கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் நூலின் ஏதேனும் ஒரு கதாபாத்திரம், காட்சி, இயற்கை. செடி, கொடி, மரம், ஊர்வன, பறப்பன, விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்கள், கனிவு, காதல், வீரம், கொடை, ஆட்சி, போர் உள்ளிட்டவற்றுள் தங்கள் மனம் கவர்ந்த ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு அது குறித்து ஐந்து முதல் ஏழு நிமிடத்திற்குள் கூட்டத்தில் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துக்கொள்ளலாம்.
கூட்டத்தில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயர், வேள்பாரியில் தாங்கள் தெரிவு செய்த தலைப்பு போன்ற விவரங்களை 29/04/2020க்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள செல்பேசி எண்ணில் தொடர்புக்கொண்டு முன்பதிவு செய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம். முதலில் பதிவு செய்யும் பத்து வாசகர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும்.
நன்றி.
சே. பாண்டியராஜ்.
9841129163
தலைவர்
திரு. செ. பிரதீப்
94457 49689. 93 83 39 93 83.
செயலாளர்
திரு. மு. ராமன்
9444367850.
இணையம் மூலமாக நடத்தப்படும் இந்த கூட்டத்தில் பங்கேற்க இருக்கும் வாசகர்கள், தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்கும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

ஜூம் பதிவிறக்க:

ஆண்டிராயிடு: https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings
ஐஃபோன்: https://itunes.apple.com/us/app/id546505307
தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன
பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நன்றி.
#வேள்பாரி
#வேள்பாரிஅனுபவப்பகிர்வுஅழைப்பு
#அந்தகக்கவிப்பேரவை
#வேள்பாரிஅனுபவக்கூட்டம்
#வேள்பாரிபார்வையற்றோர்பகிர்வு
#velpaarisharings
#velpaarimeeting

Thursday 2 April 2020

அந்தகக்கவிப் பேரவையின் இணையவெளி கூட்டத்திற்கான அறிவிப்பு கூட்டம் 42. 05.04.2020.


அந்தகக்கவிப் பேரவையின் 42ஆம் கூட்டம் ஜூம் (zoom) செயலி மூலம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
செயலியைத் தரவிறக்க வேண்டிய தொடுப்புகள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன.
செயலியை நிருவிய பின் தங்களது கூகுல் கணக்கு மூலமாக உள்ளுழையலாம் அல்லது புதிதாக ஜூம் கணக்கைத் தொடங்கி பயன்படுத்தலாம்.
பேரவையின் கூட்டத்தில் கலந்துக்கொள்ள விருப்பம் தெரிவிக்கும் பங்கேற்பாளர்களுக்கு கூட்டத்திற்கான அழைப்பு மின்னஞ்சல் அல்லது வாட்ஸப் மூலம் அனுப்பி வைக்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள கூட்டத்திற்கான எண் மற்றும் கடவுச்சொல்லினை ஜூம் செயலியின் உள்ளீடு செய்து கூட்டத்தில் இணையலாம் அல்லது அதில் கொடுக்கப்பட்டுள்ள தொடுப்பினைச் சொடுக்கி இணையலாம்.
இணையத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க கூட்டத்தில் இடைவெளிகள் விடப்பட்டு மீண்டும் அழைப்பு அனுப்பப்படும். பங்கேற்பாளர்கள் மீண்டும் மேலே குறிப்பிடப்பட்டபடி கூட்டத்தில் இணையலாம்.
கூட்டத்திற்கான அழைப்பு சரியாக 05.04.2020 ஞாயிற்றுக் கிழமை காலை 10:30 மணி அளவில் பங்கேற்பாளர்களுக்கு அனுப்பப்படும். அழைப்பு பகிரப்பட்ட  ஐந்து நிமிடத்தில் கூட்டம் தொடங்கப்படும். எனவே பங்கேற்பாளர்கள் குறித்த நேரத்தில் இணையும்படி கேட்டுக்கொள்கிறோம்.
கூட்டம் முழுவதும் சூம் செயலி மூலமாகவே ஒலிப்பதிவு செய்யப்படுவதால் பங்கேற்பாளர்கள் கூட்டத்தில் இணைந்தவுடன் ஒலி நிறுத்தம் பொத்தானைச் சொடுக்கிவிட்டு, தாங்கள் கூட்டத்தில் பேச நேரிடும்போது  ஒலி நிறுத்தத்தை நீக்கிவிட்டு பேசும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.
இணையம் மூலமாக நடத்தப்படும் இந்த கூட்டத்தில் பங்கேற்க இருக்கும் தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்கும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

பதிவிறக்க:

ஆண்டிராயிடு: https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings
ஐஃபோன்: https://itunes.apple.com/us/app/id546505307

அந்தகக்கவிப் பேரவை

(பார்வையற்றோரால் நடத்தப்படும் இலக்கிய கூட்டம்)

கூட்டம் 42.

நாள்: 05/04/2020. ஞாயிற்றுக் கிழமை.
நேரம்: காலை 10:30 மணி.
இடம்: இணையவெளி - ஜூம் (ZOOM மூலம் நடைபெறும்.
அன்புடையீர்,
பேரவையின் நாற்பத்து இரண்டாம் கூட்டத்திற்கு தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ள எண்களில் தொடர்புக்கொண்டு 04/04/2020க்குள் தங்கள் பங்கேற்பை உறுதி செய்யும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.
நிகழ்ச்சி நிரல்
தமிழ்ச்சுவை :
திருமதி. வத்சலா லட்சுமிநாராயணன், முனைவர் பட்ட ஆய்வாளர், ராணிமேரிக் கல்லூரி, சென்னை.
மாதம் ஒரு ஆளுமை:
“குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா” திரு. சு. செல்வமணி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி, சென்னை.
நூல் அறிமுகம் :
எஸ்.எல். பைரப்பா அவர்களின் “வம்ச விருக்ஷா”“ திருமதி. முத்துச்செல்வி, மேலாளர், இந்தியன் வங்கி, சென்னை.
ஆய்வுக்கட்டுரை :
“வாய்ச்சொற்கள் மறு வாசிப்பு” முனைவர் வரதராஜன், உதவிப் பேராசிரியர் ஆங்கிலம், பகத்சிங் கல்லூரி, புதுடில்லி.
மேலதிக விவரங்களுக்கு :
நாற்பத்திரண்டாம் மாத கூட்ட ஒருங்கிணைப்பாளர்.
திரு. சே. பாண்டியராஜ்
9841129163
தலைவர்
திரு. செ. பிரதீப்
94457 49689. 93 83 39 93 83.
செயலாளர்
திரு. மு. ராமன்
9444367850.
தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன
பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நன்றி.