Thursday 2 April 2020

அந்தகக்கவிப் பேரவையின் இணையவெளி கூட்டத்திற்கான அறிவிப்பு கூட்டம் 42. 05.04.2020.


அந்தகக்கவிப் பேரவையின் 42ஆம் கூட்டம் ஜூம் (zoom) செயலி மூலம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
செயலியைத் தரவிறக்க வேண்டிய தொடுப்புகள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன.
செயலியை நிருவிய பின் தங்களது கூகுல் கணக்கு மூலமாக உள்ளுழையலாம் அல்லது புதிதாக ஜூம் கணக்கைத் தொடங்கி பயன்படுத்தலாம்.
பேரவையின் கூட்டத்தில் கலந்துக்கொள்ள விருப்பம் தெரிவிக்கும் பங்கேற்பாளர்களுக்கு கூட்டத்திற்கான அழைப்பு மின்னஞ்சல் அல்லது வாட்ஸப் மூலம் அனுப்பி வைக்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள கூட்டத்திற்கான எண் மற்றும் கடவுச்சொல்லினை ஜூம் செயலியின் உள்ளீடு செய்து கூட்டத்தில் இணையலாம் அல்லது அதில் கொடுக்கப்பட்டுள்ள தொடுப்பினைச் சொடுக்கி இணையலாம்.
இணையத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க கூட்டத்தில் இடைவெளிகள் விடப்பட்டு மீண்டும் அழைப்பு அனுப்பப்படும். பங்கேற்பாளர்கள் மீண்டும் மேலே குறிப்பிடப்பட்டபடி கூட்டத்தில் இணையலாம்.
கூட்டத்திற்கான அழைப்பு சரியாக 05.04.2020 ஞாயிற்றுக் கிழமை காலை 10:30 மணி அளவில் பங்கேற்பாளர்களுக்கு அனுப்பப்படும். அழைப்பு பகிரப்பட்ட  ஐந்து நிமிடத்தில் கூட்டம் தொடங்கப்படும். எனவே பங்கேற்பாளர்கள் குறித்த நேரத்தில் இணையும்படி கேட்டுக்கொள்கிறோம்.
கூட்டம் முழுவதும் சூம் செயலி மூலமாகவே ஒலிப்பதிவு செய்யப்படுவதால் பங்கேற்பாளர்கள் கூட்டத்தில் இணைந்தவுடன் ஒலி நிறுத்தம் பொத்தானைச் சொடுக்கிவிட்டு, தாங்கள் கூட்டத்தில் பேச நேரிடும்போது  ஒலி நிறுத்தத்தை நீக்கிவிட்டு பேசும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.
இணையம் மூலமாக நடத்தப்படும் இந்த கூட்டத்தில் பங்கேற்க இருக்கும் தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்கும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

பதிவிறக்க:

ஆண்டிராயிடு: https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings
ஐஃபோன்: https://itunes.apple.com/us/app/id546505307

அந்தகக்கவிப் பேரவை

(பார்வையற்றோரால் நடத்தப்படும் இலக்கிய கூட்டம்)

கூட்டம் 42.

நாள்: 05/04/2020. ஞாயிற்றுக் கிழமை.
நேரம்: காலை 10:30 மணி.
இடம்: இணையவெளி - ஜூம் (ZOOM மூலம் நடைபெறும்.
அன்புடையீர்,
பேரவையின் நாற்பத்து இரண்டாம் கூட்டத்திற்கு தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ள எண்களில் தொடர்புக்கொண்டு 04/04/2020க்குள் தங்கள் பங்கேற்பை உறுதி செய்யும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.
நிகழ்ச்சி நிரல்
தமிழ்ச்சுவை :
திருமதி. வத்சலா லட்சுமிநாராயணன், முனைவர் பட்ட ஆய்வாளர், ராணிமேரிக் கல்லூரி, சென்னை.
மாதம் ஒரு ஆளுமை:
“குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா” திரு. சு. செல்வமணி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி, சென்னை.
நூல் அறிமுகம் :
எஸ்.எல். பைரப்பா அவர்களின் “வம்ச விருக்ஷா”“ திருமதி. முத்துச்செல்வி, மேலாளர், இந்தியன் வங்கி, சென்னை.
ஆய்வுக்கட்டுரை :
“வாய்ச்சொற்கள் மறு வாசிப்பு” முனைவர் வரதராஜன், உதவிப் பேராசிரியர் ஆங்கிலம், பகத்சிங் கல்லூரி, புதுடில்லி.
மேலதிக விவரங்களுக்கு :
நாற்பத்திரண்டாம் மாத கூட்ட ஒருங்கிணைப்பாளர்.
திரு. சே. பாண்டியராஜ்
9841129163
தலைவர்
திரு. செ. பிரதீப்
94457 49689. 93 83 39 93 83.
செயலாளர்
திரு. மு. ராமன்
9444367850.
தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன
பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நன்றி.


No comments:

Post a Comment