Thursday 31 December 2020

புத்தகத்துடன் புத்தாண்டு!

இன்று இரவு 10:30 மணிக்கு

அந்தகக்கவிப் பேரவையின் சிறப்பு கூடல்

புத்தகத்துடன் புத்தாண்டு!

நண்பனாய், காதலனாய், ஆசானாய் எல்லா நிலையிலும் நம்மை அறவனைத்து, ஆற்றுப்படுத்தி, நெறிப்படுத்தும் புத்தகங்களுடனான நம் அனுபவங்களைப் பகிர்ந்துக்கொள்வோம் வாருங்கள்! இந்த ஆண்டில் நாம் படித்து ரசித்து உணர்ந்து அனுபவித்த புத்தகங்கள் குறித்தும், பெற்ற அனுபவத்தில் கற்ற பாடத்தால் படைத்த புத்தகம் குறித்தும் பகிர்ந்துக்கொள்வோம் வாருங்கள்!

நாள் : 31-12-2020. இரவு 10:30 மணி.

இணைவதற்கான தொடுப்பு

https://us02web.zoom.us/j/81339166531?pwd=d1c5V0RiQklEYmdNVUk5UExOUnRBQT09

கூட்டக்குறியீடு : 813 3916 6531

கடவு எண் : 311220

புத்தகத்துடனான புதிய சிந்தனையை விதைத்திட்ட பாரதி புத்தகாலயத்திற்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றி!

தலைவர்

திரு செ. பிரதீப்

94457 49689, 93833 99383.

செயலாளர்

திரு மு. ராமன்

9444367850.

 

இணையம் மூலமாக நடத்தப்படும் இந்த கூட்டத்திற்குத் தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்கும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

பேரவையின் முந்தய நிகழ்வுகளையும் கூட்டங்களின் நேரலையினையும் காண எங்கள் வலையொளியில் இணையுங்கள்.

https://www.youtube.com/channel/UCGWn2hX48zfHzRZRu9GFbdQ

தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

நன்றி.

www.Anthakakavi.blogspot.com

அனைவரும் வருக!

  

Friday 25 December 2020

தவிர்க்க முடியாத காரணங்களால்

27 டிசம்பர் 2020 அன்று நடைபெற இருந்த கூட்டத்தை  தவிர்க்க இயலாத காரணங்களால் நடத்த இயலவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அடுத்த நிகழ்வு குறித்த அறிவிப்பினை விரைவில் வெளியிடுகிறோம்.

நன்றி.  

Sunday 20 December 2020

பேரவையின் கூட்டங்களில் சில மாற்றங்கள்

அந்தகக்கவிப் பேரவை

அனைவருக்கும் வணக்கம்,

நம் பேரவையின் மாதாந்திர கூட்டங்கள் பலரின் ஆலோசனைப்படி இனி ஆய்வரங்கமாக மட்டுமில்லாமல், பொழிவரங்கம், கவியரங்கம் என ஒவ்வொரு மாதமும் ஒரு பொருண்மையில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். பேரவையின் ஐம்பத்தொன்றாம் கூட்டம் 27-12-2020 ஞாயிற்றுக் கிழமை காலை 10:45 மணிக்கு நடைபெறும்  விரிவான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். தங்களது மேலான ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்கிட வேண்டுகிறோம்.

நன்றி.

பேரவையின் முந்தய நிகழ்வுகளையும் கூட்டங்களின் நேரலையினையும் காண எங்கள் வலையொளியில் இணையுங்கள்.

https://www.youtube.com/channel/UCGWn2hX48zfHzRZRu9GFbdQ

தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

நன்றி.

www.Anthakakavi.blogspot.com

அனைவரும் வருக!


Sunday 13 December 2020

வெளியானது குழந்தைகளைச் சிந்திப்போம் மின்நூல்!

வெளியானது குழந்தைகளைச் சிந்திப்போம் மின்நூல்!

கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடுப்பினைச் சொடுக்கி நூலினைப் படித்து கருத்துக்களைப் பதிவிட்டு நூலுக்கு வலுசேர்க்க வேண்டுகிறோம்!

    



தொல்காப்பியர் வள்ளுவர் தொடங்கி சமகால எழுத்தாளர்கள் வரை குழந்தைகள் குறித்துப் பல கருத்துக்களை எடுத்துரைத்துள்ளனர். அத்தனைக் கருத்துக்களையும் பாடமாகப் படித்து இலக்கியமாக பார்த்துக் கடந்து சென்றுவிடுகிறோம். இன்றய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என்பது நாடறிந்த கூற்று. நாளைய தலைவர்களை உருவாக்க வேண்டும் என்ற நாட்டத்தில் குழந்தைகளின் நலனை மறந்து, அவர்களை எந்திரங்களைப் போல நடத்தி வருகிறோம். குழந்தைகள் தங்கள் குழந்தமையைத் தொலைத்துவிட்டனர். இலக்கியங்களும், அறிஞர் பெருமக்களும் குழந்தைகள் நல மருத்துவர்களும் கூறும் தலையாய மந்திரச் சொல் குழந்தைகளைக் குழந்தைகளாக வாழ விடுங்கள் என்பதே. வளர்ந்து வரும் இந்த தொழில்நுட்ப உலகில் நம் குழந்தைகள் குறித்து அதிகப்படியாகச் சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது. பார்வையற்றோரால் நடத்தப்பட்டு வரும் இலக்கிய அமைப்பான அந்தகக்கவிப் பேரவை தனது ஐம்பதாம் மாத நிகழ்வினை முன்னிட்டு குழந்தைகளைச் சிந்திப்போம் என்ற தலைப்பில் கட்டுரைகளை வரவேற்றது. குழந்தைகள் நலனில் ஆர்வமுள்ள சிந்தனையாளர்கள் தங்கள் கருத்துக்களைக் கட்டுரையாக வழங்கினர். அந்த கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வழங்குவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.

நாளைய சமுதாயம் ஆரோக்கியமான சமுதாயமாக இருப்பதற்கு இன்றைய குழந்தைகளை நாம் நல்ல முறையில் வளர்க்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது. சகமனிதர்களை மதிப்புடன் நடத்துதல், செய்த தவற்றுக்கு மன்னிப்பு கேட்டல், பிறர் செய்த உதவிக்கு நன்றி சொல்லுதல், முகம் பார்த்துப் புன்னகைத்தல், தோல்வியை பழகுதல்குழுவாகக் கொண்டாடுதல், குழுவாக உழைத்தல், மனித மதிப்பீடுகளைப் போற்றுதல், நல்ல விஷயங்களுக்குத் துணை செய்தல், தீமையான விஷயங்களை எதிர்த்து நிற்றல் போன்ற பல பண்புகளைக் கொண்ட மக்களாக நம்முடைய குழந்தைகளை நாம் வளர்க்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அப்படிப்பட்ட ஒரு பொறுப்பான சமுதாயத்தை உருவாக்கும் வண்ணம் இந்த புத்தகம் வழிகாட்டும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. குழந்தை நலனில் அக்கறையுள்ள பெற்றோரும்மற்றோரும், ஆசிரியர்களும் படித்து பயன்பெறும் வகையில் இந்த புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

நிலா நிலா ஓடி வா,

படிப்பது எப்படி?,

மெல்ல கற்கும் குழந்தைகள்,

ஒருங்கிணைந்த கல்வியில் விளையாட்டு,

மனவளர்ச்சி குன்றியமையும் உள்ளடங்கிய கல்வி முறையும்,

புதிய கல்விக் கொள்கை _2020-இல் ஊனமுற்ற குழந்தைகள்: ஓர் எதிர்வினை ,

கண்களை விற்றுச் சித்திரம் வாங்கும் வாழ்க்கை,

பிள்ளைக்  கறியுண்ணும் பிசாசுகள்,

போரும் சிறாரும்,

குழந்தை இலக்கியம் வளர தமிழ்ச்சமூகம் செய்ய வேண்டியவை

போன்ற தலைப்புகளில் பல சிந்தனைகளை நமக்குள் விதைக்கிறது இந்த புத்தகம்.

"குழந்தைகளைச் சிந்திப்போம்: kuzhanthaikalai sinthippom (Tamil Edition)" by அந்தகக்கவிப் பேரவை anthakakavi peravai.

https://amzn.in/1KyGIw5

 

நன்றி.


Wednesday 2 December 2020

குழந்தைகளைச் சிந்திப்போம் கருத்தரங்கம் மற்றும் மின்நூல் வெளியீடு. நாள்: 06/12/2020

அந்தகக்கவிப் பேரவை

(பார்வையற்றோரால் நடத்தப்படும் இலக்கிய அமைப்பு)

கூட்டம் : 50.

குழந்தைகளைச் சிந்திப்போம் கருத்தரங்கம் மற்றும் மின்நூல் வெளியீடு.

நாள்: 06/12/2020. ஞாயிற்றுக்கிழமை.

நேரம்: காலை 10:45 மணி.

சிறப்பு விருந்தினர் மற்றும் கருத்தரங்க தலைமை

பேராசிரியர் முனைவர் கி. ராதா பாய் (பணி நிறைவு) பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், வரலாற்றுத் துறை, அரசு மகளிர் கலைக் கல்லூரி, புதுக்கோட்டை.

கருத்தாளர்கள்

எழுத்தாளர் சிதம்பரம் ரவிச்சந்திரன் (பணி நிறைவு) அறிவியல் ஆசிரியர், அரசு நன்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சிதம்பரம்.

பேராசிரியர் முனைவர் மு. முருகேசன் உதவிப் பேராசிரியர்,தமிழ்த்துறை, அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, ஆத்தூர்.

பேராசிரியர் முனைவர் கு. முருகானந்தன், ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர், திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரி, கள்ளக்குறிச்சி.

ஆசிரியர் அ. அமலா, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம், அரசு உயர்நிலைப் பள்ளி, விண்ணமங்கலம், திருவண்ணாமலை.

ஆய்வாளர்  இரா. பகுத்தறிவு, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை.

ஆய்வாளர் த. நிர்மல கருணாகரன், முனைவர் பட்ட ஆய்வாளர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுதில்லி.

எழுத்தாளர் ரம்யா சுப்ரமணியம், புதுச்சேரி.

ஆசிரியர் ர. கார்த்திக், சிறப்பு ஆசிரியர், சென்னை.

இணைவதற்கான தொடுப்பு

 

https://us02web.zoom.us/j/87009079205?pwd=UStpZnhpVDFWblFJTEtLaE9GdCtOUT09

கூட்டக்குறியீடு: 870 0907 9205

கடவு எண்: 061220

 

ஐம்பதாம் மாதக் கூட்ட ஒருங்கிணைப்பாளர்

செயலாளர்

திரு மு. ராமன்

9444367850.

தலைவர்

திரு செ. பிரதீப்

94457 49689, 93833 99383.

இணையம் மூலமாக நடத்தப்படும் இந்த கூட்டத்திற்குத் தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்கும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

பேரவையின் முந்தய நிகழ்வுகளையும் கூட்டங்களின் நேரலையினையும் காண எங்கள் வலையொளியில் இணையுங்கள்.

https://www.youtube.com/channel/UCGWn2hX48zfHzRZRu9GFbdQ

தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

நன்றி.

www.Anthakakavi.blogspot.com

அனைவரும் வருக!