Sunday 13 December 2020

வெளியானது குழந்தைகளைச் சிந்திப்போம் மின்நூல்!

வெளியானது குழந்தைகளைச் சிந்திப்போம் மின்நூல்!

கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடுப்பினைச் சொடுக்கி நூலினைப் படித்து கருத்துக்களைப் பதிவிட்டு நூலுக்கு வலுசேர்க்க வேண்டுகிறோம்!

    



தொல்காப்பியர் வள்ளுவர் தொடங்கி சமகால எழுத்தாளர்கள் வரை குழந்தைகள் குறித்துப் பல கருத்துக்களை எடுத்துரைத்துள்ளனர். அத்தனைக் கருத்துக்களையும் பாடமாகப் படித்து இலக்கியமாக பார்த்துக் கடந்து சென்றுவிடுகிறோம். இன்றய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என்பது நாடறிந்த கூற்று. நாளைய தலைவர்களை உருவாக்க வேண்டும் என்ற நாட்டத்தில் குழந்தைகளின் நலனை மறந்து, அவர்களை எந்திரங்களைப் போல நடத்தி வருகிறோம். குழந்தைகள் தங்கள் குழந்தமையைத் தொலைத்துவிட்டனர். இலக்கியங்களும், அறிஞர் பெருமக்களும் குழந்தைகள் நல மருத்துவர்களும் கூறும் தலையாய மந்திரச் சொல் குழந்தைகளைக் குழந்தைகளாக வாழ விடுங்கள் என்பதே. வளர்ந்து வரும் இந்த தொழில்நுட்ப உலகில் நம் குழந்தைகள் குறித்து அதிகப்படியாகச் சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது. பார்வையற்றோரால் நடத்தப்பட்டு வரும் இலக்கிய அமைப்பான அந்தகக்கவிப் பேரவை தனது ஐம்பதாம் மாத நிகழ்வினை முன்னிட்டு குழந்தைகளைச் சிந்திப்போம் என்ற தலைப்பில் கட்டுரைகளை வரவேற்றது. குழந்தைகள் நலனில் ஆர்வமுள்ள சிந்தனையாளர்கள் தங்கள் கருத்துக்களைக் கட்டுரையாக வழங்கினர். அந்த கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வழங்குவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.

நாளைய சமுதாயம் ஆரோக்கியமான சமுதாயமாக இருப்பதற்கு இன்றைய குழந்தைகளை நாம் நல்ல முறையில் வளர்க்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது. சகமனிதர்களை மதிப்புடன் நடத்துதல், செய்த தவற்றுக்கு மன்னிப்பு கேட்டல், பிறர் செய்த உதவிக்கு நன்றி சொல்லுதல், முகம் பார்த்துப் புன்னகைத்தல், தோல்வியை பழகுதல்குழுவாகக் கொண்டாடுதல், குழுவாக உழைத்தல், மனித மதிப்பீடுகளைப் போற்றுதல், நல்ல விஷயங்களுக்குத் துணை செய்தல், தீமையான விஷயங்களை எதிர்த்து நிற்றல் போன்ற பல பண்புகளைக் கொண்ட மக்களாக நம்முடைய குழந்தைகளை நாம் வளர்க்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அப்படிப்பட்ட ஒரு பொறுப்பான சமுதாயத்தை உருவாக்கும் வண்ணம் இந்த புத்தகம் வழிகாட்டும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. குழந்தை நலனில் அக்கறையுள்ள பெற்றோரும்மற்றோரும், ஆசிரியர்களும் படித்து பயன்பெறும் வகையில் இந்த புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

நிலா நிலா ஓடி வா,

படிப்பது எப்படி?,

மெல்ல கற்கும் குழந்தைகள்,

ஒருங்கிணைந்த கல்வியில் விளையாட்டு,

மனவளர்ச்சி குன்றியமையும் உள்ளடங்கிய கல்வி முறையும்,

புதிய கல்விக் கொள்கை _2020-இல் ஊனமுற்ற குழந்தைகள்: ஓர் எதிர்வினை ,

கண்களை விற்றுச் சித்திரம் வாங்கும் வாழ்க்கை,

பிள்ளைக்  கறியுண்ணும் பிசாசுகள்,

போரும் சிறாரும்,

குழந்தை இலக்கியம் வளர தமிழ்ச்சமூகம் செய்ய வேண்டியவை

போன்ற தலைப்புகளில் பல சிந்தனைகளை நமக்குள் விதைக்கிறது இந்த புத்தகம்.

"குழந்தைகளைச் சிந்திப்போம்: kuzhanthaikalai sinthippom (Tamil Edition)" by அந்தகக்கவிப் பேரவை anthakakavi peravai.

https://amzn.in/1KyGIw5

 

நன்றி.


No comments:

Post a Comment