Thursday 28 March 2024

எழுத்தாளர் ப. சரவண மணிகண்டன் அவர்களுக்கு அந்தகக்கவிப் பேரவை நடத்தும் உண்டாட்டு!



சாகித்ய அகாடமி ஒருங்கிணைத்த அனைத்திந்திய மாற்றுத்திறனாளி எழுத்தாளர்கள் கூடுகையில் பங்கேற்று
, சிறுகதை அரங்கிற்கு தலைமை வகித்து சிறப்புச் சேர்த்துள்ள எழுத்தாளர் ப. சரவண மணிகண்டன் அவர்களை,

அந்தகக்கவிப் பேரவை பாரா    ட்டி மகிழும் சிறப்புக் கூடல்!

    

     


நாள்: 31.03.2024 ஞாயிற்றுக்கிழமை.

நேரம்: காலை 10:45 மணி.

இடம்: ஆன்சலிவன் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தின் ஜூம் (ZOOM) அரங்கம்.

உண்டாட்டு காணொலிகளை முழுமையாக காண

 

நிகழ்ச்சி நிரல்

சிறப்புரை:

திருமிகு. தி.தே. தினகர் அவர்கள்

முதன்மை பணியாளர் அலுவலர் (Chief Personnel Officer), தெற்கு ரயில்வே.

தேவகிருபை ஆங்கில மொழிபெயர்ப்பின் அனுபவப் பகிர்வு:

கவிஞர் எழுத்தாளர் சித்ரா ராஜம் அவர்கள், Spotify தன்னார்வ வாசிப்பாளர், சென்னை.

முனைவர் கு. முருகானந்தன் அவர்கள், உதவிப் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் ஆங்கிலம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கள்ளக்குறிச்சி.

ஒரு பார்வையற்ற பெண்ணின் சொல்லப்படாத கதை - தேவகிருபை:

திருமதி. மு. முத்துச்செல்வி, முதுநிலை மேலாளர் (Senior Manager), இந்தியன் வங்கி. துணைத் தலைவர், அகில இந்தியப் பார்வையற்றோர் கூட்டமைப்பு.

சுடர்விடும் காவியச் சுடர்கள்:

திரு. பெ. செல்வம், தமிழ் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, சோத்துப்பாக்கம், செங்கல்பட்டு.

வலம் வரும் ராக ரதம்:

முனைவர் உ. மகேந்திரன், உதவிப் பேராசிரியர் ஆங்கிலம், தியாகராயா கல்லூரி, சென்னை.

மீண்டும் வரும் வேண்டா வரம்:

திரு. சந்தோஷ்குமார், முதுகலைப் பட்டதாரி, கும்பகோணம்.

 

ஏற்புரை மற்றும் அனுபவப்பகிர்வு:

திரு. ப. சரவண மணிகண்டன் அவர்கள், தமிழ் முதுகலை பட்டதாரி ஆசிரியர், பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி, சென்னை. முதன்மை ஆசிரியர், தொடுகை மின்னிதழ். இணைச் செயலர், ஹெலன் கெல்லர் மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கம்.

அன்புடையீர்,

வணக்கம்

16 மார்ச் 2024 அன்று, சாகித்ய அகாடமி ஒருங்கிணைத்த அனைத்திந்திய மாற்றுத்திறனாளி எழுத்தாளர்கள் கூடுகையில் பங்கேற்றதோடு மட்டுமன்றி, சிறுகதை அரங்கிற்கு தலைமை வகித்து, தனது தேவகிருபை என்ற சிறுகதையை ஆங்கிலத்தில் வாசித்து, கதையின் சாராம்சத்தை இந்தியில் எடுத்துரைத்து மிகச் சிறந்த தொடக்கத்தை ஏற்படுத்தி பார்வையற்ற சமூகத்திற்கு சிறப்பு சேர்த்து வந்துள்ள எழுத்தாளர் ப. சரவண மணிகண்டன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பகிர்ந்துக்கொள்வதில் அந்தகக்கவிப் பேரவை மட்டற்ற மகிழ்ச்சியடைகிறது.

இந்த மகிழ்ச்சியை அனைவரும் பகிர்ந்துக்கொள்ளும் விதமாகவும், அவருடைய அனுபவங்களைப் பகிர்ந்துக்கொள்ளும் விதமாகவும் 31 மார்ச் 2024 அன்று பேரவை ஓர் சிறப்பு கூடலை நடத்த திட்டமிட்டுள்ளது. பங்கேற்று சிறப்பிக்க அனைவரையும் அந்புடன் அழைக்கிறோம்.

இவரின் எழுத்தை வாசிக்க விரும்புபவர்கள் விரல்மொழியர் மின்னிதழில் வெளியான தேவகிருபை சிறுகதை, அமேசான் கின்டிலில் வெளியான வேண்டாவரம் சிறுகதைத் தொகுப்பு மற்றும்  திரை இசைப் பாடல்கள் குறித்த கட்டுரைத் தொகுப்பு நூலான  ராக ரதம் உள்ளிட்ட படைப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடுப்புகளில் சென்று படிக்கலாம். மேலும், பார்வையற்றோரால் நடத்தப்படும் விரல்மொழியர் மின்னிதழ், தொடுகை மின்னிதழ் போன்றவற்றில் இவருடைய பல்வேறு தலைப்பிலான படைப்புகள் வாசிக்க கிடைக்கின்றன.

  

சாகித்ய அகாடமி ஒருங்கிணைத்த அனைத்திந்திய மாற்றுத்திறனாளி எழுத்தாளர்கள் கூடுகையின் அழைப்பின் அறிவிப்பை வாசிக்க:

https://thodugai.in/2024/03/about-sahithya-academy-participation/

தேவகிருபை:

https://thodugai.in/2023/02/devakirubai-short-story/

தேவகிருபை ஆங்கில மொழிபெயர்ப்பு:

https://thodugai.blogspot.com/2024/03/short-story-devakirubai-grace-of-lord.html

கனக விஜயம்:

https://viralmozhiyar2.weebly.com/2984299729903021298629923021-2018/6985608

வேண்டாவரம்:

https://thodugai.in/2021/07/vendavaram-short-story/

காவியச்சுடர்கள்:

https://thodugai.in/category/e-magazine/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

வேண்டாவரம்:

https://amzn.in/5ZuR0Sh

ராகரதம்:

https://amzn.in/bOsmxlG

 

நன்றி.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:

சே. பாண்டியராஜ்.

9841129163.

தலைவர்

திரு. செ. பிரதீப்

94457 49689. 9383399383.s

செயலாளர்

திரு. மு. ராமன்

9444367850.

இணையம் மூலமாக நடத்தப்படும் இந்த கூட்டத்திற்குத்தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

பேரவையின் முந்தய நிகழ்வுகளையும் கூட்டங்களின் நேரலையினையும் காண எங்கள் வலையொளியில் இணையுங்கள்.

https://www.youtube.com/channel/UCGWn2hX48zfHzRZRu9GFbdQ

தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

நன்றி.

www.Anthakakavi.blogspot.com

 

No comments:

Post a Comment