Sunday, 31 March 2019

குறுந்தொகையில் பெண்பாற் புலவர்களின் படைப்பியல் தனித்தன்மைகள்


“குறுந்தொகையில் பெண்பாற் புலவர்களின் படைப்பியல் தனித்தன்மைகள்”


நூல் வெளியீடு

நிகழ்ச்சியை ஒலி வடிவில் கேட்க

https://drive.google.com/folderview?id=1IhkyzhWILgEXWKPRNDnrIFcoiALY-Z4O

அன்புடையீர்,

அந்தகக்கவிப் பேரவையின் முப்பத்தொன்றாம் மாத நிகழ்வு மற்றும் நூல் வெளியீட்டு விழா 31/03/2019 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணி அளவில் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கோலப்பெருமாள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடைப்பெற்றது. பேரவையின் தலைவர் பிரதீப் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். ராணிமேரிக் கல்லூரி தமிழ்த்துறை முனைவர் பட்ட ஆய்வாளர் திருமதி. சி. வத்சலா லட்சுமிநாராயணன் எழுதிய  “குறுந்தொகையில் பெண்பாற் புலவர்களின் படைப்பியல் தனித்தன்மைகள்” என்ற நூலினை, சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர்   பேராசிரியர் சே. கண்மணி அவர்கள் வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினார். தன்னார்வளர்களும், பார்வையற்றோரின் வாசிப்பாளர்களுமான திருமதி. ரேவதி அவர்கள், திருமதி. பத்மா ஆனந்த் அவர்கள், திருமதி. புவனேஷ்வரி அவர்கள் நூலினைப் பெற்றுக்கொண்டு சிறப்புரை வழங்கினர். அலகாபாத் வங்கி மேலாளரும், அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பின் செயலாளருமான திருமதி. முத்துச்செல்வி அவர்கள் நூலினைப் பெற்றுக்கொண்டு, “உடைத்துப் பேசு பெண்னே” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். தன்னார்வளர்களும், வாசிப்பாளர்களுமான திருமதி. மைதிலி அவர்கள், திரு. ஸ்ரீதரன் அவர்கள், ஆசிரியர் கார்த்திகேயன் அவர்கள் நூலாசிரியரை வாழ்த்தி தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துக்கொண்டனர். விழாவைச் சிறப்பித்த விருந்தினர்கள், நூலாசிரியரின் பெற்றோர், உறவினர், நண்பர்கள் என அனைவரும் நூலாசிரியருக்கு சிறப்பு செய்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். செவ்வியல் இலக்கியத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வு நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி இயக்கத்தின் நிதி நல்கையுடன் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக நூலாசிரியர் திருமதி. வத்சலா அவர்கள் உணர்வுப்பூர்வமாகவும், நெகிழ்ச்சியோடும் தனது ஏற்புரையை வழங்கி, உளமார்ந்த தனது நன்றியை அனைவருக்கும் காணிக்கையாக்கினார். பல கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், தன்னார்வளர்கள் என பலரும் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர். பேரவையின் செயலாளர் திரு. மு. இராமன் அவர்கள் தொகுப்புரை வழங்கினார். பேரவையின் நிறுவன உறுப்பினர் திரு. சக்திவேல் அவர்கள் நன்றியுரை நவில விழா இனிதே நிறைவுற்றது.

விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கும், வாசிப்பாளர்களுக்கும், தன்னார்வளர்களுக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் நூல் உருப்பெறவும், விழா சிறப்புறவும் வாழ்த்தி உதவிய அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியினை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி!

பங்குனி மாத நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் நூலாசிரியர்

திருமதி. வத்சலா

955 162 83 27

தலைவர்

திரு. செ. பிரதீப்

944 574 96 89. 938 339 93 83.

செயலாளர்

திரு. மு. ராமன்

944 436 78 50.

www.Anthakakavi.blogspot.in

No comments:

Post a Comment