அந்தகக்கவிப் பேரவையின் 28ஆம் கூட்டம் 16/12/2018
தங்கள் படைப்புகளை வழங்க விரும்புவோர் எங்களைத் தொடர்புக்கொள்ளவும்
பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
அன்புடையீர்,
அந்தகக்கவிப் பேரவையின் இருபத்து எட்டாம்
மாத நிகழ்வு 16/12/2018 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு சென்னை அரும்பாக்கத்தில்
உள்ள கோலப்பெருமாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். நிகழ்ச்சி மாதம் ஒரு ஆளுமை, நூல்
அறிமுகம், ஆய்வுக் கட்டுரை மற்றும் ஆய்வுக் கட்டுரை மீதான விவாதம் என்ற
முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்ச்சுவை :
திரு.
மு. இராமன், பட்டதாரி தமிழ் ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரவாயில், சென்னை.
மாதம் ஒரு ஆளுமை:
“பாரதி
காட்டிய அடையாளங்கள்” திரு. லட்சுமிநாராயணன், முனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை,ராணிமேரிக் கல்லூரி, சென்னை.
நூல் அறிமுகம் :
விரல் மொழியர் மின்னிதழ் வெளியிட்ட “முகவரி”
(கலைஞர் சிறப்பிதழ்) திரு. சே. பாண்டியராஜ், இந்தியன் வங்கி, அம்பத்தூர், சென்னை.
ஆய்வுக்கட்டுரை :
“பழம்பாடல்கலில் மண் சார்ந்த அறிவியல் பதிவுகள்” திருமதி. வத்சலா, முனைவர் பட்ட
ஆய்வாளர், தமிழ்த்துறை,ராணிமேரிக் கல்லூரி, சென்னை.
நிகழ்ச்சியில்
கலந்துக்கொள்ள விருப்பமுள்ளவர்கள்
கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 14/12/2018க்குள் தொடர்புக்கொண்டு தங்கள் வரவை
உறுதிசெய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.
மார்கழி
மாத நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்
திரு.
சக்திவேல்
8939187838
தலைவர்
திரு.
செ. பிரதீப்
94457
49689. 93 83 39 93 83.
செயலாளர்
திரு.
மு. ராமன்
94
44 36 78 50.
நன்றி.
No comments:
Post a Comment