Saturday, 15 August 2026

நன்றி நவில நா ஒன்று போதாதே

அந்தகக்கவிப் பேரவையின் பதினோராம் ஆண்டு விழா மற்றும் நூல் வெளியீட்டு விழாவிற்குத் தங்களது பேராதரவினை வழங்கி ஒத்துழைத்து, விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

நூல்களை வெளியிட்டுச் சிறப்புரை வழங்கிய பார்வையற்றோரின் முன்னோடி திரு. க. தியாகராஜன் அவர்களுக்கும், இந்திய நீதித் துறை உச்சநீதிமன்றத் துணைச் செயலர் முனைவர் ந. விசாகமூர்த்தி இ.ச.ப அவர்களுக்கும், சிறுவர் இலக்கிய எழுத்தாளர் மற்றும் கல்வியாளர் விழியன் அவர்களுக்கும், தலைமையாசிரியர் திருமதி. முத்துமாரி தேவி அவர்களுக்கும், பார்வையற்றோரின் வாசிப்பாளர் மருத்துவர் சியாமளா அவர்களுக்கும், பார்வையற்றோரின் தன்னார்வலர் மற்றும் கல்வியாளர் சாமுவேல் அவர்களுக்கும் எங்களது நன்றிகளைக் காணிக்கையாக்குகிறோம்.

கூண்டிலேற்ற முடியாத குற்றவாளிகள் முதன்மையான சட்டங்களை முன்வைத்து என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்குத் தலைமையேற்றுச் சிறப்பித்த வழக்கறிஞர் ப.சு. பாரதி அண்ணா அவர்களுக்கும், கருத்தாளர்களாகச் சிறப்பான கருத்துக்களை முன்வைத்து உரை வழங்கிய முனைவர் உ. மகேந்திரன் அவர்களுக்கும், திருமதி. மு. முத்துச்செல்வி அவர்களுக்கும், முனைவர் எஸ். வரதராஜ் அவர்களுக்கும், முனைவர் மா. சிவக்குமார் அவர்களுக்கும், முனைவர் கு. முருகானந்தன் அவர்களுக்கும், திரு. தே. பாலநாகேந்திரன் அவர்களுக்கும் எங்களது நன்றிகளை உவகையுடன் உரித்தாக்குகிறோம். மேலும், இந்தப் பொருண்மையில் நம்மைச் சிந்திக்கச் செய்த "கூண்டிலேற்ற முடியாத குற்றவாளிகள்" நூலின் ஆசிரியர் முனைவர் மு. முருகேசன் அவர்களுக்கு எங்களது சிறப்பான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஏறக்குறைய 35 ஆண்டுகளாகப் பார்வையற்றோரின் வாசிப்பாளராக, தன்னார்வலராகச் சேவையாற்றி வரும் திருமதி. பிரேமா ரவி அவர்களுக்கும், எழுத்தாளர் சரோஜா சகாதேவன் அவர்களுக்கும் மற்றும் விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த அனைத்துத் தன்னார்வலர்களுக்கும், விழா தொடங்கியது முதல் நிறைவு வரை எல்லாவற்றையும் மிக நேர்த்தியாகச் செய்து தங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்கிய திருமதி. நர்த்தனா அவர்கள் மற்றும் அவரது குழுவினர் அனைவருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

வெளியிடப்பட்ட பேரவையின் தமிழ்வனம் பாகம் 3 மற்றும் குழந்தைகளைச் சிந்திப்போம் புத்தகங்களைச் சிறப்பாக வடிவமைத்துப் பதிப்பித்த ஜீவா பதிப்பகத்திற்கும், முனைவர் வத்சலா அவர்களின் விவசாயத்தில் அறிவியல் அன்றும் இன்றும் மற்றும் முனைவர் லட்சுமிநாராயணன் அவர்களின் பாவேந்தரின் விதை வீரியம் புத்தகங்களைச் சிறப்பாக வடிவமைத்து வெளியிட்ட வத்சலா பதிப்பகத்திற்கும், அரிய கட்டுரைகளை வழங்கிச் சிறப்பித்த சான்றோர் பெருமக்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் எங்களது உளமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம்.

விழா அழைப்பிதழை ஒலி வடிவில் உருவாக்கி வழங்கிய பேராசிரியர் திவாகர் அவர்களுக்கும், வெளியிடப்பட்ட புத்தகங்களின் முகப்பு அட்டைப்பட ஒலி விவரணையை உருவாக்கி வழங்கிய தன்னார்வலர் திருமதி. நர்த்தனா அவர்களுக்கும், பார்வையற்றோருடைய படைப்புகளை விற்பனை செய்யும் வகையில் அமைக்கப்பட்ட அரங்கை மிகச் சிறப்பாக நிர்வகித்த கார்த்திக் அவர்களுக்கும், படைப்புகளை வழங்கிய படைப்பாளர்களுக்கும் நன்றி நவிலக் கடமைப்பட்டுள்ளோம்.

விழா சிறப்பாக நடைபெற நிதி உதவி வழங்கிய அனைத்து கொடையாளர்களுக்கும், தாமாக முன்வந்து மாலை சிற்றுண்டி மற்றும் பார்வையற்றோருக்கான அன்பளிப்பு வழங்கிய மருத்துவர் ஷியாமலா அவர்களுக்கும், இரவு உணவு வழங்கிய கல்வியாளர் சாமுவேல் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்கிக்கொள்கிறோம்.

விழாவிற்கு வந்து பங்கேற்றுச் சிறப்பித்த தமிழ் ஆர்வலர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், பிற துறை சார்ந்த நண்பர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என விழாவில் பங்கேற்றுத் தங்களது பேராதரவை வழங்கிய அனைவருக்கும் அந்தகக்கவிப் பேரவையின் நெஞ்சார்ந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகிறோம்.

விழாப் பதிவேட்டின்படி சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்ட அனைவரையும் சேர்த்து 153 நபர்கள் பங்கேற்றார்கள் என்பதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சியடைந்தோம். பேரவையின் தொடக்கம் முதல் தற்போது வரை எங்களுக்குப் பேராதரவு வழங்கி வரும் அனைவருக்கும் எங்களது உளமார்ந்த நன்றிகளை உவகையுடன் உரித்தாக்குகிறோம்.

நன்றி.

அந்தகக்கவிப் பேரவை. 

Tuesday, 4 August 2026

அழைப்பிதழ் பதினோராம் ஆண்டு விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா

அந்தகக்கவிப் பேரவை

பதினோராம் ஆண்டு விழா

மற்றும்

நூல் வெளியீட்டு விழா

 

 

நாள்: 15/08/2026 சனிக்கிழமை

நேரம்: பிற்பகல் 02:30 மணி

 

இடம்: விவேகானந்தர் இல்லம்

மெரினா கடற்கரை எதிரில்



 


நூல் வெளியீடு மற்றும் சிறப்புரை

 

திரு. க. தியாகராஜன்

முதல்வர் (பணி நிறைவு) பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி, பூவிருந்தவல்லி, சென்னை. தலைவர், தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கம்.

 

முனைவர் ந. விசாக்கமூர்த்தி இ.ச.ப

துணைச் செயலாளர், சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், உச்சநீதிமன்றம், புதுடில்லி.

 

எழுத்தாளர் விழியன்

தமிழ் சிறுவர் இலக்கிய எழுத்தாளர் மற்றும் கல்வியாளர்

கணிதப் பாடத்திட்டக் கட்டமைப்புத் துணைக்குழு உறுப்பினர்,

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை.

 

திருமதி. மு. முத்துமாரி தேவி M.A., B.Ed., M.Phil.,

தலைமையாசிரியர், அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளி,

கோவூர், காஞ்சிபுரம் மாவட்டம்

 

வாழ்த்துரை   :         திரு. கந்தசாமி

            பதிப்பாளர், ஜீவா பதிப்பகம், தி. நகர், சென்னை.

            டாக்டர் R. ஷியாமளா M.B.B.S., M.D.,

            முன்னாள் உடலியங்கியல் துறைத்தலைவர், ஸ்ரீரமச்சந்திரா

            மருத்துவக் கல்லூரி மற்றும் செட்டிநாடு மருத்துவக் கல்லூரி

            திரு. A. சாமுவேல் M.B.A.,

கல்வி இயக்குநர், ஸ்மார்ட் எட் டெக்னோ சொல்யூஷன்ஸ்.

 

வெளியிடப்படும் நூல்கள்

 

*      அந்தகக்கவிப் பேரவை - தமிழ்வனம் - பாகம்- 3 மற்றும் குழந்தைகளைச் சிந்திப்போம்

*      முனைவர் சி. வத்சலா  - விவசாயத்தில் அறிவியல் (அன்றும் இன்றும்)

*      முனைவர் கி. லட்சுமிநாராயணன் – பாவேந்தரின் விதை வீரியம்

 

கருத்தரங்கம்

கூண்டிலேற்ற முடியாத குற்றவாளிகள்

முதன்மையான சட்டங்களை முன்வைத்து

தலைமை

வழக்கறிஞர் ப.சு. பாரதி அண்ணா

செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

மாநிலத் துணைத் தலைவர், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்.

கருத்தாளர்கள்

குதூகலிக்கும் குடும்பத்தில்     - முனைவர் உ. மகேந்திரன்

உதவிப் பேராசிரியர், ஆங்கிலம், தியாகராயா கல்லூரி, சென்னை.

துணைத் தலைவர், பார்வையற்றோர் ஆசிரியர் சங்கம், சென்னை.

பண்பட்ட பணியிடத்தில் - திருமதி. மு. முத்துச்செல்வி

மூத்த மேலாளர், இந்தியன் வங்கி.

துணைத் தலைவர், அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு

ஆக்கப்பூர்வமான அறிவுத்தளத்தில் - முனைவர் கு. முருகானந்தன்

துறைத் தலைவர், ஆங்கிலம்,

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கள்ளக்குறிச்சி.

பரிவுகொண்ட பயணத்தில் – முனைவர் எஸ். வரதராஜ்

இணைப் பேராசிரியர் ஆங்கிலம், பகத்சிங் கல்லூரி, புது டில்லி.

கனிவுமிக்க அதிகாரத்தில் – முனைவர் மா. சிவக்குமார்

வருகை விரிவுரையாளர், தமிழ்த் துறை, அரசு கலைக் கல்லூரி, திருவண்ணாமலை.

உரக்கப் பேசும் ஊடகத்தில் – திரு. தே. பாலநாகேந்திரன் 

உதவி இயக்குநர் மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை, இந்திய அரசு.

 

நிகழ்ச்சி நிரல்

பிற்பகல் 02:30 மணி                -           கருத்தரங்கம்

பிற்பகல் 04:30 மணி                -           தேநீர் இடைவேளை

பிற்பகல் 04:45 மணி                -           நூல் வெளியீடு மற்றும் சிறப்புரை

மாலை   06:30 மணி               -           விழா நிறைவு மற்றும் இரவு உணவு

 

பேரவை அறிமுகம் மற்றும் வரவேற்புரை

தலைவர், திரு. செ. பிரதீப், வருகை விரிவுரையாளர், தமிழ்த்துறை,

அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, செய்யாறு.

 

கருத்தரங்க அறிமுகம் மற்றும் விழா நன்றியுரை

நிறுவன உறுப்பினர் முனைவர் சு. செல்வமணி, உதவியாளர்,

வட்டார போக்குவரத்து அலுவலகம், சென்னை மேற்கு.

நிறுவனர் திரு. சே. பாண்டியராஜ்

உதவி மேலாளர், இந்தியன் வங்கி, சென்னை.

 

நிகழ்ச்சி தொகுப்பு

செயலாளர் திரு. மு. ராமன், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர், தமிழ்,

அரசு மேல்நிலைப் பள்ளி, திருமுல்லைவாயில், சென்னை.

 

வரவேற்பு

பொருளாளர் முனைவர். சி. வத்சலா, வருகை விரிவுரையாளர்,

தமிழ்த்துறை, டாக்டர் எம்.ஜி.ஆர் மகளிர் அரசு கலைக் கல்லூரி, விழுப்புரம்.

நிறுவன உறுப்பினர்கள்

முனைவர் கி. சக்திவேல், வருகை விரிவுரையாளர், தமிழ்த்துறை,

ஸ்ரீரங்கம் அரசு கலை அறிவியல் கல்லூரி, திருச்சி.

முனைவர் கி. லட்சுமிநாராயணன், வருகை விரிவுரையாளர்,

தமிழ்த்துறை, அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, விழுப்புரம்.

அனைவரும் வருக!!              தமிழ்ச்சுவைப் பருக!!