Monday, 20 April 2026

அந்தகக்கவிப் பேரவையின் கூட்டம் 62.

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனப் பயிற்சி புத்தக வாசிப்பு - சிக்மண்ட் பிராய்டு.

புரட்சிப்பாதையில் கைத் துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே – லெனின்.

ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஊரில் ஒரு சிறைச்சாலை மூடப்படும். – விவேகானந்தர்.

நாள்: 26/04/2026. ஞாயிற்றுக் கிழமை

நேரம்: காலை 10:45 மணிக்கு

அன்புடையீர்

வணக்கம்

நமது வாழ்வைப் புரட்டிப்போட்டு புதிய பாதைக் காட்டி வரும் புத்தகங்களைக் கொண்டாட அனைவரையும் அன்புடன் அழைக்கிறது அந்தகக்கவிப் பேரவை!

உலக புத்தக தின கொண்டாட்டமாக நடத்தப்படும் இந்த கூட்டம் முதல், இனி வரும் காலங்களில் பார்வையற்றோரின் தமிழ் படைப்புகளை ஆங்கிலத்தில் அறிமுகம் செய்ய நமது பேரவைத் திட்டமிட்டுள்ளது. அதன்படி, "பார்வையற்றோர் நீங்கா நினைவுகளில் காரல்மார்க்ஸ் கண்ணன்" என்ற நூலினை முனைவர் எஸ். வரதராஜ் (இணைப் பேராசிரியர் ஆங்கிலம், பகத்சிங் கல்லூரி, புது டில்லி) அவர்கள் ஆங்கிலத்தில் அறிமுகம் செய்து தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து, "பார்வையற்றோரின் படைப்புலகம்"  என்ற தலைப்பில் மு. மகாலிங்கம் (முனைவர்பட்ட ஆய்வாளர் தமிழ்த்துறை, பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர்) அவர்களும், "பார்வையற்றோரின் படிப்புலகம்" என்ற தலைப்பில் கார்த்திக். வெ (முனைவர் பட்ட ஆய்வாளர், அரசு கலைக் கல்லூரி நந்தனம் சென்னை) அவர்களும் கருத்துரையாற்றுகின்றனர். மேலும், விழுப்புரம், டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவிகளான கு.புவனேஸ்வரி அவர்கள் ஸ்ரீ பூதநாதர் அவர்களின் மாதர் குல மாணிக்கங்கள் என்ற நூல் அறிமுகத்தையும், ச.மோனிஷா அவர்கள் என்னைச் செதுக்கிய புத்தகம் என்ற தலைப்பில் எழிலுரையையும்  வழங்கவுள்ளனர்.

அனைவரும் வருக!

நன்றி

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:

திரு. மு. ராமன், தமிழ் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, திருமுல்லைவாயில், சென்னை.

9444367850.

நிகழ்ச்சியில் இணைய

ஆன்சலிவன் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தின்  ஜூம் (ZOOM அரங்கம்.

https://us06web.zoom.us/j/81012075382?pwd=pfwzZ9cJkYNPA7liTaCyTF8bDpxcAM.1

 

 

தலைவர்

திரு. செ. பிரதீப்

94457 49689. 93 83 39 93 83.

செயலாளர்

திரு. மு. ராமன்

9444367850.

இணையம் மூலமாக நடத்தப்படும் இந்த கூட்டத்திற்குத்தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

பேரவையின் முந்தய நிகழ்வுகளையும் கூட்டங்களின் நேரலையினையும் காண எங்கள் வலையொளியில் இணையுங்கள்.

https://www.youtube.com/channel/UCGWn2hX48zfHzRZRu9GFbdQ

தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

நன்றி.

www.Anthakakavi.blogspot.com 

No comments:

Post a Comment