அன்புடையீர்
நம் வாழ்வை இனிமையாக்கும் இலக்கியத்தில் தொடர்ந்து பயணிக்க ஒத்துழைத்து பேராதரவு வழங்கி வரும் தங்கள் அனைவருக்கும் அந்தகக்கவிப் பேரவையின் அன்பான வணக்கங்கள்.
2017 மற்றும் 2018-ஆம் ஆண்டுகளில் பேரவையில் படிக்கப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, தமிழ் வனம் பாகம் 1, பாகம் 2 என இரண்டு புத்தகங்கள் வெளியிடப்பட்டன. 2020-ஆம் ஆண்டு மூன்றாம் பாகம் வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் பெருந்தொற்று நம் இலக்கிய பயணத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திட, தற்போது நீண்டநெடிய இடைவெளிக்கு பிறகு இந்த ஆண்டு பேரவையின் பதினோராம் ஆண்டு விழா மற்றும் நூல் வெளியீட்டு விழாவினை ஆகஸ்ட்டு திங்கள் 15-ஆம் நாள் சனிக்கிழமை (15/08/2026) அன்று நண்பகல் 02:30 மணி அளவில் தொடங்கி மாலை 06:30 மணி வரை மெரினா கடற்கரை எதிரில் அமைந்துள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம். விழா கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியிடுதல் என்ற முறைமையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விரிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். அனைவரும் தவறாமல் பங்கேற்று விழாவினைச் சிறப்பிக்க பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி.
தலைவர்
திரு. செ. பிரதீப்
94457 49689. 93 83 39 93 83.
செயலாளர்
திரு. மு. ராமன்
9444367850.
https://anthakakavi.blogspot.com/
No comments:
Post a Comment