Saturday 3 December 2016

பேரவையின் மூன்றாம் நிகழ்வு


அந்தகக்கவிப் பேரவையின் மூன்றாம் மாதக் கூட்டம் 23.10.2016 அன்று, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கோலப்பெருமாள்  மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த கூட்டம் முதல் இளங்களை மாணவர் கட்டுரை, எனக்கு பிடித்த நூல் என்ற தலைப்பில் ஏதேனும் ஒரு நூலினைப் பற்றிய அறிமுகத்தை வழங்குதல் மற்றும் ஆய்வுக் கட்டுரை என்ற முறையில்  நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டது. அதன்படி சென்னை மாநிலக்கல்லூரியின் வரலாற்றுத்துறையில்  இளங்கலை மூன்றாமாண்டு பயிலும் மாணவர் திரு. அவர்கள் வரலாற்றில் அக்பர் என்ற தலைப்பில் கட்டுரை வழங்கினார். சோகா இகேதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் பணிபுரியும் திரு. சே. பாண்டியராஜ் அவர்கள் நான் ஏன் என் தந்தையைப் போல் இல்லை என்ற நூலினை அறிமுகம் செய்தார். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்ட  ஆய்வினை மேற்கொண்டுள்ள திரு. க.சிவக்குமார் அவர்கள் வள்ளலார் உணர்த்திய வாழ்வியல் நெறி என்ற தலைப்பில்  கட்டுரை வழங்கினார். பேரவையின் செயலாளர் மு.ராமன் அவர்கள்  வரவேற்புரை வழங்கினார். முதுகலைப்பட்டதாரி தமிழ் ஆசிரியர் வெங்கடேசன் அவர்கள் ஆய்வுக்கட்டுரைக்கு தலைமைவகித்து கேள்வி நேரத்தை நெறிப்படுத்தினார்.  அடுத்தக்கூட்டத்தின் நிகழ்வுகளை தலைவர் பிரதீப் அவர்கள் அறிவித்தார். இளங்களை மாணவர் கட்டுரை பகுதியில் கட்டுரை வாசித்த அவர்களுக்கு உலகநாதநாராயணசாமி அரசுக் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர்.சே.திவாகர் அவர்கள்  நினைவுப்பரிசினை வழங்கினார். உத்திரமேரூர் அரசுக்கல்லூரி தம்ழ்த்துறை விரிவுரையாள் பானுகோபன் அவர்கள் நன்றியுரை நவில்ந்தார். சென்னை மாநிலக்கல்லூரி முனைவர் பட்ட ஆய்வாளர் செல்வமணி அவர்கள் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார். சிறந்த வாசிப்பாளரும் தமிழ் ஆர்வளருமான திரு.ரவிக்குமார் அவர்கள் கூட்டத்தில் கலந்துக்கொண்டு சிறப்பித்ததோடு மட்டுமல்லாமல் பல உதவிகளையும் செய்தார். எழுத்து வடிவில் இருந்த ஆய்வுக்கட்டுரையை தட்டச்சு செய்து வழங்கிய அவருக்கு இந்த நேரத்தில் எங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment