Tuesday, 23 April 2019

அந்தகக்கவிப் பேரவையின் 32ஆம் கூட்டம் 28/04/2019


அந்தகக்கவிப் பேரவையின் 32ஆம் கூட்டம் 28/04/2019

தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன
பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
அன்புடையீர்,
அந்தகக்கவிப் பேரவையின் முப்பத்து இரண்டாம் மாத நிகழ்வு 28/04/2019 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள லொயோலா பள்ளியில் நடைபெறும். நிகழ்ச்சி தமிழ்ச்சுவை, மாதம் ஒரு ஆளுமை, நூல் அறிமுகம், ஆய்வுக் கட்டுரை மற்றும்  ஆய்வுக் கட்டுரை மீதான விவாதம் என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  
தமிழ்ச்சுவை :
திருமதி. வத்சலா, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,ராணிமேரிக் கல்லூரி, சென்னை.
மாதம் ஒரு ஆளுமை:
“தமிழின் சிகரம் சிலம்பொளியார்” திரு. லட்சுமிநாராயணன், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,ராணிமேரிக் கல்லூரி, சென்னை.
நூல் அறிமுகம் :
“சாக்ரட்டீசின் சிவப்பு நூலகம்” செல்வி. ஐயம்மாள், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி, சென்னை.
ஆய்வுக்கட்டுரை :
“அரசியல் நோக்கில் சிலப்பதிகாரம்” முனைவர். மா. சிவக்குமார், விருந்தமை விரிவுரையாளர், அரசு கலைக் கல்லூரி, கரூர்.“

 நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள   விருப்பமுள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 26/04/2019க்குள்  தொடர்புக்கொண்டு தங்கள் வரவை உறுதிசெய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.
சித்திரை மாத நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்
திரு. சே. பாண்டியராஜ்
9841129163.

தலைவர்
திரு. செ. பிரதீப்
94457 49689. 93 83 39 93 83.
செயலாளர்
திரு. மு. ராமன்
94 44 36 78 50.
நன்றி.

Sunday, 31 March 2019

குறுந்தொகையில் பெண்பாற் புலவர்களின் படைப்பியல் தனித்தன்மைகள்


“குறுந்தொகையில் பெண்பாற் புலவர்களின் படைப்பியல் தனித்தன்மைகள்”


நூல் வெளியீடு

நிகழ்ச்சியை ஒலி வடிவில் கேட்க

https://drive.google.com/folderview?id=1IhkyzhWILgEXWKPRNDnrIFcoiALY-Z4O

அன்புடையீர்,

அந்தகக்கவிப் பேரவையின் முப்பத்தொன்றாம் மாத நிகழ்வு மற்றும் நூல் வெளியீட்டு விழா 31/03/2019 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணி அளவில் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கோலப்பெருமாள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடைப்பெற்றது. பேரவையின் தலைவர் பிரதீப் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். ராணிமேரிக் கல்லூரி தமிழ்த்துறை முனைவர் பட்ட ஆய்வாளர் திருமதி. சி. வத்சலா லட்சுமிநாராயணன் எழுதிய  “குறுந்தொகையில் பெண்பாற் புலவர்களின் படைப்பியல் தனித்தன்மைகள்” என்ற நூலினை, சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர்   பேராசிரியர் சே. கண்மணி அவர்கள் வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினார். தன்னார்வளர்களும், பார்வையற்றோரின் வாசிப்பாளர்களுமான திருமதி. ரேவதி அவர்கள், திருமதி. பத்மா ஆனந்த் அவர்கள், திருமதி. புவனேஷ்வரி அவர்கள் நூலினைப் பெற்றுக்கொண்டு சிறப்புரை வழங்கினர். அலகாபாத் வங்கி மேலாளரும், அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பின் செயலாளருமான திருமதி. முத்துச்செல்வி அவர்கள் நூலினைப் பெற்றுக்கொண்டு, “உடைத்துப் பேசு பெண்னே” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். தன்னார்வளர்களும், வாசிப்பாளர்களுமான திருமதி. மைதிலி அவர்கள், திரு. ஸ்ரீதரன் அவர்கள், ஆசிரியர் கார்த்திகேயன் அவர்கள் நூலாசிரியரை வாழ்த்தி தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துக்கொண்டனர். விழாவைச் சிறப்பித்த விருந்தினர்கள், நூலாசிரியரின் பெற்றோர், உறவினர், நண்பர்கள் என அனைவரும் நூலாசிரியருக்கு சிறப்பு செய்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். செவ்வியல் இலக்கியத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வு நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி இயக்கத்தின் நிதி நல்கையுடன் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக நூலாசிரியர் திருமதி. வத்சலா அவர்கள் உணர்வுப்பூர்வமாகவும், நெகிழ்ச்சியோடும் தனது ஏற்புரையை வழங்கி, உளமார்ந்த தனது நன்றியை அனைவருக்கும் காணிக்கையாக்கினார். பல கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், தன்னார்வளர்கள் என பலரும் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர். பேரவையின் செயலாளர் திரு. மு. இராமன் அவர்கள் தொகுப்புரை வழங்கினார். பேரவையின் நிறுவன உறுப்பினர் திரு. சக்திவேல் அவர்கள் நன்றியுரை நவில விழா இனிதே நிறைவுற்றது.

விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கும், வாசிப்பாளர்களுக்கும், தன்னார்வளர்களுக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் நூல் உருப்பெறவும், விழா சிறப்புறவும் வாழ்த்தி உதவிய அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியினை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி!

பங்குனி மாத நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் நூலாசிரியர்

திருமதி. வத்சலா

955 162 83 27

தலைவர்

திரு. செ. பிரதீப்

944 574 96 89. 938 339 93 83.

செயலாளர்

திரு. மு. ராமன்

944 436 78 50.

www.Anthakakavi.blogspot.in

Wednesday, 20 March 2019

அந்தகக்கவிப் பேரவையின் 31ஆம் கூட்டம் மற்றும் நூல் வெளியீட்டு விழா 31/03/2019


அந்தகக்கவிப் பேரவையின் 31ஆம் கூட்டம் மற்றும் நூல் வெளியீட்டு விழா 31/03/2019


அன்புடையீர்,

அந்தகக்கவிப் பேரவையின் முப்பத்தொன்றாம் மாத நிகழ்வு மற்றும் நூல் வெளியீட்டு விழா 31/03/2019 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணி அளவில் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கோலப்பெருமாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். நிகழ்ச்சி தமிழ்ச்சுவை, ஆய்வுக் கட்டுரை, ஆய்வுக் கட்டுரை மீதான விவாதம் மற்றும் நூல் வெளியீடு என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

தமிழ்ச்சுவை :

திரு. மு. இராமன், பட்டதாரி தமிழாசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரவாயில், சென்னை.

ஆய்வுக்கட்டுரை :

“ஊடகங்களில் தமிழின் நிலைப்பாடு” பெ. ரமேஷ், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பச்சையப்பன் கல்லூரி, சென்னை.

நூல் வெளியீடு


குறுந்தொகையில் பெண்பாற் புலவர்களின் படைப்பியல் தனித்தன்மைகள்

நூல் ஆசிரியர்

திருமதி. சி. வத்சலா லட்சுமிநாராயணன்

முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, ராணிமேரிக் கல்லூரி, சென்னை.

நூல் வெளியீட்டு சிறப்புரை

பேராசிரியர் சே. கண்மணி அவர்கள்

தலைவர், தமிழ்த்துறை, சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, சென்னை.

சிறப்பு விருந்தினர்

திருமிகு. ரேவதி அவர்கள்

தன்னார்வலர் மற்றும் பார்வையற்றோருக்கான வாசிப்பாளர்

திருமிகு. பத்மா ஆனந்த் அவர்கள்

தன்னார்வலர் மற்றும் பார்வையற்றோருக்கான வாசிப்பாளர்

வாழ்த்துரை

பேராசிரியர் மா. உத்திராபதி அவர்கள்

தமிழ்த்துறைத் தலைவர் (பணி நிறைவு), மாநிலக்கல்லூரி, சென்னை.

சிறப்புரை

“உடைத்துப் பேசு பெண்னே”

திருமதி. மு. முத்துச்செல்வி

மேலாளர், அலகாபாத் வங்கி, சென்னை.

செயலாளர், அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு.

நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள   விருப்பமுள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 29/03/2019க்குள்  தொடர்புக்கொண்டு தங்கள் வரவை உறுதிசெய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

பங்குனி மாத நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்

திருமதி. வத்சலா

955 162 83 27

தலைவர்

திரு. செ. பிரதீப்

944 574 96 89. 938 339 93 83.

செயலாளர்

திரு. மு. ராமன்

944 436 78 50.
நன்றி.

Wednesday, 23 January 2019

அந்தகக்கவிப் பேரவையின் 29ஆம் கூட்டம் 27/01/2019


அந்தகக்கவிப் பேரவையின் 29ஆம் கூட்டம் 27/01/2019


தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன

பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

அன்புடையீர்,

அந்தகக்கவிப் பேரவையின் இருபத்து ஒன்பதாம் மாத நிகழ்வு 27/01/2019 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கோலப்பெருமாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். நிகழ்ச்சி மாதம் ஒரு ஆளுமை, நூல் அறிமுகம், ஆய்வுக் கட்டுரை மற்றும்  ஆய்வுக் கட்டுரை மீதான விவாதம் என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

தமிழ்ச்சுவை :

திரு. லட்சுமிநாராயணன், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,ராணிமேரிக் கல்லூரி, சென்னை.

மாதம் ஒரு ஆளுமை:

எழுத்தறிவித்த இறைவன் “லூயி பிரெயில்” திரு.பிரதீப், விரிவுரையாளர், தமிழ்த்துறை, அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, செய்யாறு.

நூல் அறிமுகம் :

சித்திர பாலா எழுதிய “நீ என் தேவதை” குறுநாவல். திரு. மு. இராமன், பட்டதாரி தமிழ் ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரவாயில், சென்னை.

ஆய்வுக்கட்டுரை :

“திரை இசைப் பாடல்களில் தூது இலக்கியம்” முனைவர் பானுகோபன், விரிவுரையாளர், தமிழ்த்துறை, அரசுக் கலைக் கல்லூரி, உத்திரமேரூர்.

 

 நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள   விருப்பமுள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 25/01/2019க்குள்  தொடர்புக்கொண்டு தங்கள் வரவை உறுதிசெய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

தை மாத நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்

திரு. மு. ராமன்

94 44 36 78 50.

தலைவர்

திரு. செ. பிரதீப்

94457 49689. 93 83 39 93 83.

நன்றி.

 

Tuesday, 1 January 2019

பார்வையற்ற பாவலர் அருளிய திருக்கழுக்குன்றப் புராணம் ஆங்கில விளக்கத்துடன் வெளியிடப்பட்டது.


பார்வையற்ற பாவலர் அருளிய திருக்கழுக்குன்றப் புராணம் ஆங்கில விளக்கத்துடன் வெளியிடப்பட்டது.


ஏறக்குறைய ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புலவர் அந்தகக்கவி வீரராகவர் பலச்  சிறப்புமிக்க நூல்களையும், தனிப்பாடல்களையும் இயற்றியவர். இலக்கணக் கவி, சீட்டுக்கவி என்றெல்லாம் அறியப்படும் அந்தகக்கவி வீரராகவர், உலா, பிள்ளைத்தமிழ், களம்பகம், கோவை, தல புராணங்கள் என பல நூல்களையும், சில தனிப் பாடல்களையும்  இயற்றியுள்ளார்.  சோழநாடு, ஈழநாடு என பல நாடுகள் பயணித்து அங்கு ஆட்சிசெய்த மன்னர்களைப் பாடி பாராட்டும் பரிசும் பெற்றவர். இவர் கவித்திறனையும் புலமையையும் கண்ட புலவர் ஒருவர், “ஒட்டக்கூத்தன் கவியும் ஓங்கிய கம்பன் கவியும் பட்டப்பகல் விளக்காய்ப்பட்டதே அட்டத்திக்கும் வீசும் கவி வீரராகவனாம் வேளாளன் பேசுங்கவி கேட்டப்பின்” என்று வியந்து புகழ்ந்து பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தகு சிறப்புமிக்க  புலவர் அந்தகக்கவி பிறவியிலேயே பார்வையற்றவர் என்பதும், இறைவனடிச் சேர்ந்த இலக்கணக்கவியின் இழப்பை ஏற்க இயலாத கயத்தாற்றரசன் இவருக்கு இறங்கட்பா பாடியிருப்பதும்  தமிழ்ச்சமூகம் அறிந்ததே.

பார்வையற்ற பாவலர் அந்தகக்கவி வீரராகவர் அருளிய திருக்கழுக்குன்றப் புராணம் 23/12/2018 ஞாயிற்றுக் கிழமை காலை 10:30 மணி அளவில், திருக்கழுக்குன்றத்தில் எழுந்தருளியிருக்கும் வேதகிரீஸ்வரர் ஆலயத்திற்கு அருகில் உள்ள ஆர்.கே மகாலில் வெளியிடப்பட்டது.  இந்நூல் 23 சருக்கங்களும்,  834 பாடல்களும் கொண்டது. திருக்கழுக்குன்றப் புராணத்தையும், அந்தகக்கவியின் புகழையும் உலகிலுள்ள அனைவரும் அறிய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் குழிப்பாந்தண்டலம் நடராஜன் உமாபதி அவர்கள் அனைத்துப் பாடல்களுக்கும் ஆங்கில விளக்கம் எழுதி, வித்துவான் காஞ்சி சபாபதி முதலியார் அவர்கள் எழுதிய உரையையும் சேர்த்து பதிப்பித்து, திண்டிவனம் ஸ்ரீ அன்னைபதி நூலகத்தின்  மூலம்  வெளியிட்டுள்ளார். விழாவில் திருமிகு. நடராஜன் உமாபதி அவர்கள் பேசும்போது அந்தகக்கவி என்ற மாபெரும் புலவனின் பெருமைகளை வியந்து போற்றினார். அவர் சிறு வயது முதல் கண்ட மலையின் வளமையையும், பட்சிகளின் அரசன் வேதகிரீஸ்வரரை வழிப்பட்டதையும் குறிப்பிட்டு திருக்கழுக்குன்றத்தின் பெருமையை எடுத்துரைத்தார்.

விழாவிற்கு திரு.செல்வராஜ் DSP (ஓய்வு) அவர்கள் தலைமை வகித்தார். சித்தாந்த ரத்தினம் திரு. சுந்தர் ஐயா அவர்கள் நூலை வெளியிட, மயிலம் தமிழ்க்கல்லூரியின் முதல்வர் அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். நூலின் இரண்டாம் பிரதியை அந்தகக்கவிப் பேரவையின் நிறுவன உறுப்பினரும், ராணிமேரிக் கல்லூரி தமிழ்த்துறை முனைவர் பட்ட ஆய்வாளருமான  லட்சுமிநாராயணன் அவர்கள் பெற்றுக்கொண்டார். திருக்கழுக்குன்றப் புராணத்தை ஆங்கில விளக்கத்துடன் பதிப்பித்த நடராஜன் உமாபதி ஐயா அவர்களுக்கு அந்தகக்கவிப் பேரவையினர் அனைவரும் இணைந்து சிறப்பு செய்தனர்.

480 பக்கங்களைக் கொண்ட நூலின் விலை 200 ரூபாய் மட்டுமே.

நூலின் அட்டைப்படம், தாளின் தரம் உள்ளிட்ட அனைத்தும் அருமை!

ரூபாய் 500க்கு விற்கப்பட வேண்டிய நூல் வெறும் 200 ரூபாய்க்கு விற்கப்படுவது கூடுதல் சிறப்பு.

நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கவும், பிரதியைப் பெற்றுக்கொள்ளவும் வாய்ப்பளித்து அந்தகக்கவிப் பேரவையை சிறப்பித்த நடராஜன் உமாபதி ஐயா அவர்களுக்கும், அவருக்கு பேரவையை அறிமுகம் செய்திட்ட துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி தமிழ்த்துறையின் பேராசிரியர் சதானந்தம் ஐயா அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியினை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி.

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

Monday, 10 December 2018

அந்தகக்கவிப் பேரவையின் 28ஆம் கூட்டம் 16/12/2018


அந்தகக்கவிப் பேரவையின் 28ஆம் கூட்டம் 16/12/2018


தங்கள் படைப்புகளை வழங்க விரும்புவோர் எங்களைத் தொடர்புக்கொள்ளவும்

பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

அன்புடையீர்,

அந்தகக்கவிப் பேரவையின் இருபத்து எட்டாம் மாத நிகழ்வு 16/12/2018 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கோலப்பெருமாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். நிகழ்ச்சி மாதம் ஒரு ஆளுமை, நூல் அறிமுகம், ஆய்வுக் கட்டுரை மற்றும்  ஆய்வுக் கட்டுரை மீதான விவாதம் என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

தமிழ்ச்சுவை :

திரு. மு. இராமன், பட்டதாரி தமிழ் ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரவாயில், சென்னை.

மாதம் ஒரு ஆளுமை:

“பாரதி காட்டிய அடையாளங்கள்” திரு. லட்சுமிநாராயணன், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,ராணிமேரிக் கல்லூரி, சென்னை.

நூல் அறிமுகம் :

விரல் மொழியர் மின்னிதழ் வெளியிட்ட “முகவரி” (கலைஞர் சிறப்பிதழ்) திரு. சே. பாண்டியராஜ், இந்தியன் வங்கி, அம்பத்தூர், சென்னை.

ஆய்வுக்கட்டுரை :

“பழம்பாடல்கலில் மண் சார்ந்த அறிவியல் பதிவுகள்” திருமதி. வத்சலா, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,ராணிமேரிக் கல்லூரி, சென்னை.

 

 நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள   விருப்பமுள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 14/12/2018க்குள்  தொடர்புக்கொண்டு தங்கள் வரவை உறுதிசெய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

மார்கழி மாத நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்

திரு. சக்திவேல்

8939187838

தலைவர்

திரு. செ. பிரதீப்

94457 49689. 93 83 39 93 83.

செயலாளர்

திரு. மு. ராமன்

94 44 36 78 50.

நன்றி.

 

Sunday, 11 November 2018

அந்தகக்கவிப் பேரவையின் 27ஆம் கூட்டம் 18/11/2018


அந்தகக்கவிப் பேரவையின் 27ஆம் கூட்டம் 18/11/2018


 

கடந்த மாதம் நடைபெற இருந்த பேரவையின் இருபத்து ஆறாம் கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தால் ரத்து செய்யப்பட்டது என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

அன்புடையீர்,

அந்தகக்கவிப் பேரவையின் இருபத்து ஏழாம் மாத நிகழ்வு 18/11/2018 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கோலப்பெருமாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். நிகழ்ச்சி மாதம் ஒரு ஆளுமை, நூல் அறிமுகம், ஆய்வுக் கட்டுரை மற்றும்  ஆய்வுக் கட்டுரை மீதான விவாதம் என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

மாதம் ஒரு ஆளுமை:

“வள்ளலாரின் பண்முக ஆளுமை” திரு. சிவக்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை.

நூல் அறிமுகம்

“அண்டநூர் சுறா எழுதிய கொங்கை” திரு. மு. இராமன், பட்டதாரி தமிழ் ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரவாயில், சென்னை.

ஆய்வுக்கட்டுரை:

“அற இலக்கியங்களில் கல்வி” திரு. கார்த்திக், ஆய்வியல் நிறைஞர், இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்.

 நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள   விருப்பமுள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 16/11/2018க்குள்  தொடர்புக்கொண்டு தங்கள் வரவை உறுதிசெய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

கார்த்திகை மாத நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்

திரு. சிவக்குமார்

9952987705

தலைவர்

திரு. செ. பிரதீப்

94457 49689. 93 83 39 93 83.

செயலாளர்

திரு. மு. ராமன்

94 44 36 78 50.

நன்றி.